ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.

ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள். வரும் ஆண்டு முதல் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்பயிற்சிகளுக்கு அனுமதிக் கட்டணம், பதிவுக் கட்டணம் என்பன போன்ற எந்த மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.

தகுதி:

பயிற்சிகளில் இணைந்து பயன் பெறும் மாணவர் ஏதாவது ஒரு துறையில் பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும். இவற்றைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் இல்லை.

பதிவு:

இப்பயிற்சிகளுக்கு முன்பதிவை payilagam.com/free-software-training-courses-in-chennai என்னும் இணையத்தளத்தில் செய்யலாம். அல்லது 8883775533 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி மைய முகவரி:

பயிலகம்,

67/4 இ, விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு,

வேளச்சேரி, சென்னை 600042

%d bloggers like this: