ஒரே நாளில் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றினை உருவாக்க முடியுமா?

ஆண்ட்ராய்டு மேம்பாட்டு உலகில் பத்தாண்டுகள் கழித்த பிறகு, அதன் போக்குகள் மாறுவதையும், நூலகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவதையும், எண்ணற்ற குறிமுறைவரிகள் எழுதப்படுவதையும் (மீண்டும் எழுதப்படுவதையும்!) இதுவரையில் கண்டுவந்திருக்கலாம். குறிப்பாக ஆர்வமுள்ள மேம்படுத்துநர்களிடமிருந்து அடிக்கடி சந்திக்கும் ஒரு கேள்வி: “ஒரே நாளில் ஆண்ட்ராய்டு செயலிஒன்றினை உருவாக்க முடியுமா?”
சுருக்கமான பதில்? அது அந்தந்த சூழலை சார்ந்தது ஆகும் .
முயன்றால்அவ்வாறான சூழல் எனும் முட்டுக்கட்டையை உடைத்திடலாம்.
நாம் எந்த வகையான செயலியைப் பற்றி விவாதிக்க விருக்கின்றோம்?
ஒரு எளிய “Hello, World” எனும் செயலி பற்றி. . கண்டிப்பாக அதை சில நிமிடங்களில் உருவாக்கலாம். பயனர் ஏற்புகை, பின்புல தரவுத்தளம் சிக்கலான UI/UX கொண்ட ஒரு சிக்கலான மின்வணிக தளம்? ஆகியவற்றில் அதற்கான வாய்ப்பு இல்லை.
ஒரே நாளில் ஒரு செயலியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு பின்வருமாறான காரணிகளைச் சார்ந்துள்ளது என்பதை மனதில்கொள்க:
நோக்கம்: ஒன்று அல்லது இரண்டு திரைகள், அடிப்படை செயலிகள் ஆகியவற்றினைக் கொண்ட ஒரு எளிய செயலியை உருவாக்குவது கண்டிப்பாக முடியும். ஒரு அடிப்படை கால்குலேட்டர், ஒரு எளிய குறிப்பு எடுக்கும் செயலி அல்லது “செய்ய வேண்டியவை” எனும் பட்டியல் ஆகிய அடிப்படையானவைகளை ஒரேநாளில் எழுதி செயல்படுத்திடலாம்.
சிக்கலானசெயல்கள்: சிக்கலான அசைவூட்டங்கள், தனிப்பயன் காட்சிகள் அல்லது பல மூன்றாம் தரப்பு APIகளுடன் ஒருங்கிணைப்பு போன்ற சிக்கலான வசதிகளைத் தவிர்த்திடுக. அவை ஒரே நாளில் செயல்படுத்தமுடியாதவைகளாகும்
முன் அனுபவம்: ஆண்ட்ராய்டின் அடிப்படைகளை நன்கு அறிந்த ஒரு அனுபவமிக்க மேம்படுத்துநராக இருந்தால், ஒரு முழுமையான தொடக்க நிலையாளரை விட நமக்கு மிகவும் எளிதாக அதிகநேரம் கிடைக்கும்.அதனால்
ஒரே நாளில், ஒரு அனுபவம் வாய்ந்த மேம்படுத்துநர் யதார்த்தமாக செய்து முடிக்க முடியும்:
ஒரு புதிய செயல்திட்டத்தை அமைத்திடுதல்: Android Studio இல் செயல்திட்டத்தை உள்ளமைத்திடுக, அடிப்படை சார்புகளை அமைத்திடுக துவக்க தளவமைப்புகளை உருவாக்கிடுக.
அடிப்படை UI ஐ செயல்படுத்திடுதல்: TextViews, Buttons , ImageViews போன்ற நிலையான UI கூறுகளுடன் எளிய திரைகளை வடிவமைத்திடுக.
அடிப்படை செயலியைச் சேர்த்திடுதல்: பொத்தான்களின் சொடுக்குதல்களைக் கையாளுதல், தரவைக் காண்பித்தல் அல்லது எளிய கணக்கீடுகளைச் செய்தல் போன்ற முக்கிய தருக்கத்தை செயல்படுத்திடுக.
emulator அல்லது சாதனத்தில் பரிசோதனைசெய்திடுதல்: மெய்நிகர் அல்லது நடப்பில் பயன்படுத்திகொள்கின்ற சாதனத்தில் பெரிய பிழைகள் எதுவும் இல்லாமல் பயன்பாடு இயங்குவதை உறுதிசெய்திடுக.
பின்வருவனவற்றைஎதிர்பார்க்க வேண்டாம்:
ஒரு முழுமையான பயன்பாட்டை உருவாக்கிடுதல்: சிக்கலான வசதிகள், மெருகூட்டப்பட்ட UI/UX அல்லது விரிவான பரிசோதனை பற்றி மறந்துவிடுக.
சிக்கலான APIகளை ஒருங்கிணைத்திடுதல்: கட்டண நுழைவாயில்கள், சமூக ஊடக தளங்கள் அல்லது mapping சேவைகள் போன்ற சேவைகளுடன் ஒருங்கிணைக்க அதிக நேரம் எடுக்கும்.
தீவிரமான வழக்கங்கள் , முழுமையான பரிசோதனைகளைக் கையாளுதல்: பல்வேறு சாதனங்கள் ,ஆண்ட்ராய்டு பதிப்புகளில் விரிவான பரிசோதனை மிக முக்கியமானது ஆனால் அதிகநேரத்தை எடுத்துக்கொள்ளும்.
ஒரே நாளில் ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டை உருவாக்க விரும்பினால் பின்வருமாறான கருத்துகளை பின்பற்றிடுக:
சிறியதாகத் தொடங்கிடுக: ஒரு எளிய ஆலோசனையைத் தேர்ந்தெடுத்து முக்கிய செயல்பாட்டில் கவனம் செலுத்திடுக.
ஏற்கனவே உள்ள நூலகங்களைப் பயன்படுத்திகொள்க: நேரத்தை மிச்சப்படுத்த பொதுவான பணிகளுக்கு அதற்கானநூலகங்களைப் பயன்படுத்திகொள்க.
முழுமையை இலக்காகக் கொள்ளவேண்டாம்: மெருகூட்டப்பட்ட தயாரிப்பன்று, நன்கு செயல்படுகின்ற முன்மாதிரியைப் பெறுவதில் கவனம் செலுத்திடுக.
ஒரே நாளில் ஒரு பயன்பாட்டை உருவாக்குவது நம்முடைய திறமைகளைச் பரிசோதிக்க அல்லது ஒரு ஆலோசனையை விரைவாக முன்மாதிரி செய்ய ஒரு வேடிக்கையான பயிற்சியாக இருக்கலாம். இருப்பினும், நடப்பு உலக பயன்பாட்டு மேம்பாட்டிற்கு கவனமாக திட்டமிடல், வலுவான கட்டமைப்பு, முழுமையான பரிசோதனை , தொடர்ச்சியான பராமரிப்புஆகியன தேவை என்பதை நினைவில் கொள்க.குறிப்பிடத்தக்க எச்சரிக்கைகளுடன். எதிர்பார்ப்புகளை நிர்வகித்திடுக, எளிமையில் கவனம் செலுத்திடுக,