ஒற்றைக்கோப்பு(SingleFile) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையஉலாவியின் நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழு இணையதளப்பக்கத்தையும் அதன் அனைத்து வளங்களையும் (எ.கா., படங்கள், நடைதாட்கள், எழுத்துருக்கள், திரைகாட்சிகள் போன்றவை) ஒரே சொடுக்குதலில் ஒரேயொரு HTML கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. SingleFile என்பது ஒரு நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழுமையான பக்கத்தை ஒரு HTML கோப்பாக அல்லது Google Chrome , Chromium உடன் HTM-கோப்பாக காப்பகப்படுத்த உதவுகிறது.
இதன்பதிப்பு 0.0.76 இல், unMHT ஐப் போன்று, ஒரு தளத்தின் விளிம்புகளில் விளம்பர உரை இல்லாமல் நம்முடைய ஒரு தேர்வை மட்டும் சேமிக்க முடியாது. ஆனால் இதன்ஆசிரியர் கில்டாஸ் இந்த இயல்பினை அடுத்த பதிப்புகளில் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
சேமிக்கப்பட்ட பக்கத்தை எந்த உலாவியிலும் எந்த நீட்டிப்பையும் நிறுவுகை செய்திட வேண்டிய அவசியமின்றி இணையஇணைப்பில்லாமலும் திரையில் காட்சியாக காண்பிக்கலாம். இணையதளப்பக்கங்களின் நம்பகமான இணையஇணைப்பில்லாதபோதும் அதன் நகல்களைத் தேவைப்படும் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் , நிபுணர்கள் ஆகியோர்களுக்கு அல்லது தங்களுக்குப் பிடித்த இணையதள உள்ளடக்கத்தின் பதிவை வைத்திருக்க விரும்பும் எவருக்கும் இது ஏற்றது.
சேமிக்கப்பட்ட கோப்புகள் Firefox, Opera, Safari, Konqueror ஆகியவற்றுடன் இணக்கமாக செயல்படுகின்றது, மேலும் “remove unused CSS rules” என்ற வாய்ப்பினை தேர்வுசெய்தால், Internet Explorer 8 உடன் ஓரளவு இணக்கமாக இருக்கும்.
இதன் வசதி வாய்ப்புகள்
இதன் வாயிலாக தற்போதைய தாவல், அனைத்து தாவல்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தாவல்களைச் சேமிக்கமுடியும்
உள்ளடக்கத்தின் தேர்வைச் சேமிக்கலாம்
சேமிக்கப்பட்ட பக்கங்களைக் குறிப்பிடலாம்
பக்கங்களைத் தானாகச் சேமித்திடுமாறு செய்திடலாம்
URLகளின் பட்டியலைத் தொகுத்திடலாம்
பக்கஅடையாளக்குறி செய்யப்பட்ட பக்கங்களைச் சேமித்திடலாம்
GitHub, Amazon S3, Google Drive அல்லது WebDAV சேவையகத்தில் பக்கங்களைச் சேமித்திடலாம்
பக்கங்களை சுயமாகப் பிரித்தெடுக்கின்ற ZIP கோப்புகளாகச் சேமித்திடலாம்
ஒரு பக்கத்தைச் சேமிப்பதற்கு முன் ஒத்திவைக்கப்பட்ட படங்கள், iframes ஐ பதிவேற்றிடலாம்
தெரிவுசெய்திடுகின்ற வாய்ப்பினை சுயவிவரமாக அமைத்திடலாம்
URL ஐப் பொறுத்து ஒரு பக்கத்தைச் சேமிக்கும்போது ஒரு சுயவிவரத்தைத் தானாகத் தேர்ந்தெடுத்திடலாம்
ஏதேனும் ஒரு பக்கத்தைச் சேமிக்கும்போதுஒரு பயனர் உரைநிரலை இயக்கலாம்
மேலும் பல்வேறு வசதி வாய்ப்புகளையும் இது கொண்டுள்ளது
ஒற்றைக்கோப்பின்(SingleFile) கட்டளை வரி இடைமுகம்( CLI)
ஒற்றைக்கோப்பின்(SingleFile) கட்டளை வரி இடைமுகம்( CLI) என்பது ஒரு கட்டளை வரி கருவியாகும், இது ஒரு இணையதளப்பக்கத்தை அதன் அனைத்து வளங்களுடனும் ஒரேயொரு HTML கோப்பில் சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. இது இணையஉலாவி நீட்டிப்பின் அதே மையத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இணையஉலாவி நீட்டிப்பை நிறுவுகைசெய்திட வேண்டிய கட்டாயமின்றி அல்லது ஒரு இணையஉலாவியை கைமுறையாகத் தொடங்காமல் பயன்படுத்தலாம்.
ஒற்றைக்கோப்பின்(SingleFile)கட்டளை வரி இடைமுகம்( CLI)ஆனது விண்டோ, மேக், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளுக்கும் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும் www.getsinglefile.com எனும் இணையதளமுகவரிக்கு செல்க