ஒவ்வொரு கணினியிலும் நிறுவுகை செய்திடுகின்ற முனைம கருவிகள்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு விண்டோ அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலும் நான்கு முனைம கருவிகள் கண்டிப்பாக தேவையாகும்.
ஒரு மென்பொருள் பொறியாளராகவும், தொழில்நுட்ப வலைப்பதிவராகவும் எனது அனுபவத்தின் போது, ​​புதிய லினக்ஸின் நிறுவுகைகள், தற்காலிக பரிசோதனை சூழல்கள் , சுத்தமான விண்டோ அமைவுகள் போன்ற என்னால் எண்ண முடியாத அளவுக்கு அதிகமான கணினிகளை அமைத்துள்ளேன். அவ்வாறான சூழலில் காலப்போக்கில், உற்பத்தித்திறன்ஆனது பெரிய தவறுகளில் இழக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்தேன், ஆனால் நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழும் சிறிய தாமதங்களில்: மெதுவான தேடல்கள், குழப்பமான வெளியீடு, மறக்கப்பட்ட கட்டளைகள் , நிலையான சூழல் மாறுதல் ஆகிய செயல்களியே. உற்பத்தித்திறன்ஆனது இழக்கப்படுகின்றது என்பதை தெரிந்துகொண்டேன்
எனவே எல்லாவற்றையும் தனிப்பயனாக்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு கணினியிலும் முதலில் நிறுவுகைசெய்திடுகின்ற ஒரு சிறிய முனைம கருவித்தொகுப்பை தரப்படுத்தினேன். இந்த கருவிகள் மிகச்சிறப்பானவை அன்று, ஆனால் அவை உடனடியாக உராய்வை நீக்குகின்றன. எந்தவொரு செயல்திட்டம், repo, அல்லது உள்ளமைவுக்கு முன்பும், முனைமம் எனக்கு எதிரானது அன்று, எனக்கு எதிராக செயல்படுவதை நான் உறுதிசெய்கிறேன்.
Ripgrep- தேடலின் வேக அரக்கன்
நான் நேர்மையாகச் சொல்லவேண்டுமென்றால்,ஒரு சுதந்திரஎழுத்தாளரான நான் பல ஆண்டுகளாக நிலையான grep எனும் கட்டளையைப் பயன்படுத்தவே யில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட குறிமுறைவரிகளின் வரியைக் கண்டுபிடிக்க எனது கணினி ஆயிரக்கணக்கான கோப்புகளில் ஊர்ந்து செல்லும்போது ஒளிரும் இடம்சுட்டியை(cursor) பார்த்து பார்த்து நான் அதை அதிகமாக நேரத்தை வீணடித்தேன். அவ்வாறான விரக்தியானது ripgrep ஐ நிறுவுகைசெய்த இரண்டாவது நொடியில் நின்றுவிட்டது.
Rust எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இது, நான் இதுவரை பயன்படுத்திய வேகமான தேடல் கருவிகளில் ஒன்றாகும். ஆனால் எனக்கு இதை “முதல் நாள்(day one) ” நிறுவுகையாக மாற்றுவது அதன் மூல வேகம் மட்டுமன்று; அது அதன் நுண்ணறிவுடன். இயல்பாக, .gitignoreஐ மதிக்கிறது, மறைக்கப்பட்ட கோப்புகள் , binary blobs களை தானாகவே தவிர்க்கிறது. இதன் பொருள் நான் ஒரு செயலியின் பெயரைத் தேடும்போது, ​​நான் தேட விரும்பாத node_modules கோப்புறையிலிருந்து குப்பைகள் இல்லாத, உண்மையான மூலக் குறிமுறைவரிகளின் முடிவுகளைப் பெறுகிறேன்.
இது எளிமையானது, மேலும் இதுஒருங்குறியை சரியாகக் கையாளுகிறது. நான் ஒரு பெரிய லினக்ஸ் சேவையகத்தில் இருந்தாலும் சரி அல்லது எனது வளாக விண்டோ கணினியில் இருந்தாலும் சரி, எண்ணிம வைக்கோல்போரில் ஒரு ஊசியைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் போது நான் முதலில் தட்டச்சு செய்வது Ripgrep ஆகும்.
Nushell – இறுதியாக முனைமத்தை கணிக்கக்கூடிய ஒரு உறைபொதி(shell)
தேடலுக்குப் பிறகு, நான் நிறுவுகைசெய்திடுகின்ற அடுத்த செயலி Nushell ஆகும். நான் பல ஆண்டுகளாக bash , PowerShell ஐப் பயன்படுத்தினேன், ஆனால் இரண்டிற்கும் ஒரே பிரச்சனை இருந்துவருகின்றது – இவைஅனைத்தும் உரையை. கட்டளைகளின் உரையை வெளியிடுகின்றன, குழாய்கள்(pipes) உரையை அனுப்புகின்றன, மேலும் எனக்குத் தேவையான பகுதியை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதை நான் தொடர்ந்து யூகிக்க வேண்டியிருந்தது.
ஆனால் Nushell ஆனது வித்தியாசமாக செயல்படுகிறது. இது முனைம வெளியீட்டை raw strings-க்கு பதிலாக கட்டமைக்கப்பட்ட தரவாகக் கருதுகிறது. அந்த ஒற்றை மாற்றம் கட்டளைகளை மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது.
எடுத்துக்காட்டாக, குழப்பமான வெளியீட்டை பாகுபடுத்துவதற்கு பதிலாக:
ls | where size > 10kb
உடையக்கூடிய குழாய்கள்(pipes) அல்லது நீண்ட அடையாளக் குறிமுறைரிகளைகள்(flags) இல்லாமல் எனக்கு சுத்தமான, படிக்கக்கூடிய முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு பட்டியலை வடிகட்டுவதற்காக நான் இனி regexஇன் தந்திரங்களை மனப்பாடம் செய்யவேண்டியதில்லை.
எனக்கு மிகவும் பிடித்தது நிலைத்தன்மை. பொதுவாக விண்டோவிலும், லினக்ஸிலும் கட்டளைவரிகள் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன, எனவே நான் பயன்படுத்தும் கணினியைப் பொறுத்து மன மாதிரிகளை மாற்றுவதில்லை. சில நாட்களுக்குப் பிறகு, பாரம்பரிய உறைபொதிகளுக்குத் திரும்புவது சத்தமாகவும் கணிக்க முடியாததாகவும் உணர்கிறது.
தேவைப்படும்போது நான் இன்னும் மற்ற உறைபொதிகளைப்(shells) பயன்படுத்து கிறேன், ஆனால் நான் உண்மையில் வேலை செய்யும் இடம் Nushellஆகும். இது பகலில் பொதுவாகநம்முடைய பணியின்போது குவிகின்ற விரக்திகளைக் குறைக்கிறது.
Nushellஐ முன்கூட்டியே நிறுவுகைசெய்வது என்பது எனது மீதமுள்ள கருவிகள் தொடக்கத்திலிருந்தே சிறப்பாகச் செயல்படுவதைக் குறிக்கிறது.
fzf எனும்தேடல் – பெரும்பாலான தட்டச்சுபணிகளை நீக்கும் கருவி
ஒரு கட்டளையைக் கண்டுபிடிக்கஎப்போதாவது ஐம்பது முறை மேல்நோக்கு-அம்புக்குறி விசையை அழுத்துவதாகயிருந்தால், , நமக்கு fzf தேவையாகும். இது “fzzy finder” என்பதைக் குறிக்கிறது, மேலும் நேர்மையாகச் சொன்னால், அது நமது நல்லறிவைக் காப்பாற்றுகின்ற கருவியாகும். கோப்பின் பாதைகள் அல்லது கட்டளை வரலாறுகளைத் தோண்டி எடுக்கும் சலிப்பான செயல்முறையை ஒரு மீச்சிறு-வினாடிக்குள்ளான தேடலாக மாற்றுவதால் அதை உடனடியாக நிறுவுகை செய்திடுகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், “fzzy” எனும் கட்டளையை பயன்படுத்திடும்போது. ஒரு கோப்பின் சரியான பெயரையோ அல்லது ஒரு நீண்ட உரைநிரலின் சரியான தொடரியலையோ நான் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் இருந்ததாக நான் நினைக்கும் சில எழுத்துக்களை மட்டும்நான் தட்டச்சு செய்கிறேன், fzf உடனடியாக பட்டியலை நிகழ்நேரத்தில் சுருக்கிகாண்பிக்கிறது. இது கூகிள் தேடல்போன்று கட்டளை வரியில் நேரடியாக உள்ளமைக்கப்பட்டிருப்பது போன்றது ஆகும்.
நான் இதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறேன்: கோப்புறைகளுக்கு இடையில் குதித்தல், ஒரு gitஇன் கிளையைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு பிடிவாதமான செயல்முறையை அழிப்பது. இது நம்முடைய பயன்பாட்டில் இருக்கும் கருவிகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, முனைமத்தை ஒரு கடினமான கணினியை போன்றும், என்னுடைய சொற்களை முடிக்கும் உதவியாளரைப் போன்றும் உணர வைக்கிறது. அதைப் பயன்படுத்தத் தொடங்கியதும், கணினியை வழிநடத்தி, glue.இன் வழியாக நகரும் உணர்வை ஏற்படுத்துவதில்லை..
TLDR-உண்மையில் பயன்பாட்டின் மூலம் கற்பிக்கும் ஏமாற்றுத் தாள்ஆகும்
நான் நிறுவுகைசெய்திடும் அடுத்த கருவி TLDRஆகும். கட்டளைகள் எனக்குத் தெரியாததால் அன்று, ஆனால் அவற்றை நான் சரியாக நினைவில் வைத்திருக்காததால். மேலும் பாரம்பரிய man பக்கங்கள் எனக்கு இப்போது தேவையானதைத் தவிர எல்லாவற்றையும் விளக்குகின்றன. நான் ஒன்றைத் திறக்கிறேன், ஒரு நிமிடம் இடம்சுட்டியைஉருட்டிநகர்த்திச்செல்கிறேன், இன்னும் இணையத்தில் தேடுகிறேன். TLDR நீண்ட விளக்கங்களுக்குப் பதிலாக நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் காண்பிப்பதன் மூலம் அதை சரிசெய்கிறது. நான் பின்வருமாறு மட்டும்தட்டச்சு செய்கிறேன்:
tldr tar
tldr ssh
tldr git-commit
பொதுமக்கள் கட்டளையை உண்மையில் பயன்படுத்தும் கோட்பாடு இல்லாத பொதுவான வழிகளை என்னால் உடனடியாககாண முடிகிறது. இந்தப் பக்கங்கள், உண்மையான பயன்பாட்டை மையமாகக் கொண்ட சமூககுழுவால் பராமரிக்கப்படும் ஏமாற்றுத் தாள்கள்.
இது நான் கட்டளைகளைக் கற்றுக் கொள்ளும் விதத்தை மாற்றுகிறது. நான் இனி flagsகளை மனப்பாடம் செய்யத்ததேவையில்லை. நான் செயல்படுவதன் மூலம் கற்றுக்கொள்கிறேன், மேலும் நான் வேலை செய்யும் போது TLDR திறந்திருக்கும். சில முறை திரும்பத் திரும்பச் செய்த பிறகு, கட்டளை இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கும். இது விண்டோவிலும் , லினக்ஸிலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது, எனவே நம்முடைய பழக்கம் கணினிகளுக்கு இடையில் மாற்றப்படும். இணையஉலாவியில் இல்லை, சூழல் மாற்றத்திலும் இல்லை, நம்முடைய கவனம் எதுவும்சிதறாது.
மற்ற எல்லா முனைமக் கருவிகளும் கட்டளைகளை அறிந்துகொள்வதைப் பொறுத்தது என்பதால், நான் TLDR ஐ முன்கூட்டியே நிறுவுகைசெய்திடுகின்றேன், மேலும் இது அவற்றை நினைவில் கொள்வதன் உராய்வை நீக்குகிறது.
முதல் செயல்திட்டத்திற்கு முன் வேகமான பணிப்பாய்வு தொடங்குகிறது.
நான் ஒரு புதிய கணினியை கட்டமைக்கும் போதெல்லாம், நான் திருத்திகள், கருப்பொருள்கள் அல்லது செருகுநிரல்களுடன் தொடங்குவதில்லை. நான் உராய்வு நீக்குதலுடன் தொடங்குகிறேன். இந்த கருவிகள் வசதிவாய்ப்புகளைச் சேர்க்காது – அவை காத்திருப்பு, யூகித்தல், சூழல் மாற்றம் ஆகியவற்றினை நீக்குகின்றன. அங்குதான் உண்மையான உற்பத்தித்திறன் வருகிறது. பின்னர் மேம்படுத்துவதற்குப் பதிலாக, முதல் நாளிலிருந்தே நான் மேம்படுத்திகொள்கிறேன். தேடுதல் உடனடி, கட்டளைகள் கணிக்கக்கூடியவை, வழிசெலுத்தல் எளிதானது, . ஆவணங்கள் எப்போதும் ஒரு கட்டளையின் தொலைவில் இருக்கும். விளைவு எளிது: நான் நீண்ட நேரம் இதனை செயல்படுத்திகொண்டே இருப்பேன்.

Leave a Reply