கட்டளைவரி வாயிலாக கோப்புகளை பார்வையிடஉதவிடும் கருவிகள்

லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளைவரித்திரையில் கருவிகளின் கட்டளைவரிகளை செயல்படுத்தி
 கோப்புகளை பார்வையிடலாம்  உதாராணமாக  README எனும் கட்டளைவரியை கொண்டு ஒரு HTML
வகை கோப்பினை ஒரு  LaTeX வகைகோப்பினை அல்லது ஏதேனுமொரு உரைக்கோப்பினை
 பார்வையிடுவதை போன்று  lessஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி  
  less கோப்பின்_பெயர்.doc 
 என்றவாறு  கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம்
 பார்வையிட விரும்பும் கோப்பினை  திறந்து கொள்க   அதனை தொடர்ந்து   விசைப்பலகையிலுள்ள 
 spacebar அல்லதுPgDn அல்லது PgUp ஆகிய விசைகளை அழுத்துவதன் வாயிலாக  குறிப்பிட்ட
 கோப்பினை பார்வையிடலாம்  Qஎனும் விசையை அழுத்தவதன் வாயிலாக   நாம் திறந்து 
பார்வையிட்ட கோப்பிலிருந்து வெளியேறலாம்   Antiwordஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி
 வேர்டு ஆவணத்தை  சாதாரண உரைஆவணமாக plaintext மட்டுமல்லாது  PostScript அல்லது
 PDF ஆவணமாக கூட மாற்றிடலாம் .அதற்காக 
  Antiwordகோப்பின் _பெயர்.doc 
 என்றவாறு 
கட்டளைவரியை  உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிடவிரும்பும்
 கோப்பினை  திறந்து கொள்க  அதன்பின்னர் நம்முடைய விருப்பத்தை செயல்படுத்திடலாம்   odt2txt எனும் 
கட்டளைவரி கருவியை பயன்படுத்தி நம்மிடம் லிபர் ஆஃபிஸ் போன்ற பயன்பாடுகள் இல்லையென்றாலும்
 வேர்டு ஆவணத்தை திறந்து அதனை பார்வையிடமுடியும்  அதற்காக  
 odt2txtகோப்பின்_ பெயர்.doc 
 என்றவாறு  கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம்
 பார்வையிடவிரும்பும் கோப்பினை  திறந்து பார்வையிடுக  
%d bloggers like this: