அனைவருக்கும் வணக்கம்,
இந்த வாரம் KanchiLUG இல் ஜூலை 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 – 5:00 மணி வரை ஆன்லைன் மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLug
எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.
அனைத்து விவாதங்களும் தமிழில்தான்.
பேச்சு விவரங்கள்
பேச்சு 0:
தலைப்பு: சைபர் பாதுகாப்பு அறிமுகம்
விளக்கம் : 1) சைபர் பாதுகாப்பு பற்றிய விரைவான அறிமுகம். 2) PE கோப்பைத் தெரியாமல் பதிவிறக்குவதைத் திரும்பப் பெற வேண்டுமா? மற்றும் எப்படி குறைப்பது?
மதிப்பிடப்பட்ட காலம் : 15-20 நிமிடம்
பேச்சாளர் பெயர்: கவிதா
பேச்சாளர் பற்றி: வலை பாதுகாப்பு பொறியாளர்
பேச்சு 1:
தலைப்பு: எலெக்டிரானிக் கேட்கள் இயக்கத்தின் தத்துவம்
விளக்கம் : பெரிதாக இல்லை, தெரிந்ததைப் பகிர்கிறேன்.
மதிப்பிடப்பட்ட காலம் : 45 நிமிட
பேச்சாளர் பெயர்: கணேஷ்
பேச்சாளர் பற்றி:கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்.
பேச்சுக்குப் பிறகு: கேள்வி பதில், பொது விவாதம்
KanchiLUG பற்றி : காஞ்சி லினக்ஸ் பயனர்கள் குழு [ KanchiLUG ] நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரத்தில் இலவச/திறந்த மூல மென்பொருள் (F/OSS) பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறது.
யார் வேண்டுமென்றாலும் இணையலாம்! (நுழைவு இலவசம்)
அனைவரும் வருக
தயங்காமல் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்