கைபேசி லினக்ஸிற்கும் மேசைக்கணினி லிக்ஸிற்கும் இடையேயான வேறுபாடுகள்-


  புதியதாக துவங்கியுள்ள இந்த ஆண்டு நிரந்தரமாக “மேசைக்கணினியின் லினக்ஸின் ஆண்டு” ஆக இருக்கலாம், ஆனால் கைபேசியில் லினக்ஸினுடைய ர்னலின் அடிப்படையில் செயல்படும் ஆண்ட்ராய்டு  இயக்க முறைமைஅதற்காக  காத்திருக்கவில்லை.  கைபேசியிலுள்ள  இந்த லினக்ஸின் ர்னலவை, கைபேசி சாதனங்கள நன்கு செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும்  அளிக்கின்ற. இந்நிலையில் லினக்ஸின் அடிப்படையிலான ர்னல் ஆனது மேசைக்கணினி , கைபேசி ஆகியஇரண்டிலும் எவ்வாறு இயங்க முடியும்?  மேலும் கைபேசி லினக்ஸ் ஆனது மேசைக்கணினி லினக்ஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டில் மேசைக்கணினியின் இயக்க முறைமை மட்டும்  உருவாக்கப்படவில்லையே அது ஏன்?. லினக்ஸினுடைய ர்னலின் அடிப்படை விதிகள் அப்படியே இருக்கின்றன, யினும் கைபேசி  இயக்க முறைமை  மேசைக்கணினி  இயக்க முறைமைஆகிய இரண்டிற்கும் இடையே  ஏராளமான அளவில் வேறுபாடுகள் உள்ளன அதுஏன் ? என்பனபோன்ற பல்வேறு வினாக்கள் நம்மனைவரின் மனதிலும் எழும். நிற்க.
கைபேசி  லினக்ஸ் என்றால் என்ன?
கைபேசி லினக்ஸ் என்பது லினக்ஸ் கர்னலை அடிப்படையாகக் கொண்டதொரு கைபேசி இயக்க முறைமையாகும், இது முதலில் 1990 ல் லினக்ஸ் டொர்வால்ட்ஸால்  உருவாக்கப்பட்டது. பொதுவாக ர்னலானது எந்தவொரு இயக்க முறைமைக்கும்  இதயம்போன்றதாகும் அதாவது  இது ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தைப் போன்று அமர்ந்து கொண்டு மீதமுள்ள கணினியின் அமைப்பகள் அனைத்தையும் தன்கைவசம் வைத்திருக்கின்றது அதனோடு  கைபேசியின்அனைத்து உள்ளீட்டு  வெளியீட்டு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
மேசைக்கணினியில் உள்ளதைப் போன்றே, கைபேசி சாதனங்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட லினக்ஸ் வெளியீடுகள் உள்ள. அவை லினக்ஸின் தத்துவ அடித்தளங்களிலிருந்து விலகிச் சென்றிருந்தாலும், அவைகளுள் ஆண்ட்ராய்டு மிகவும் பிரபலமானதும்  நன்கு அறியப்பட்டதும் ஆகும். உலகளவில் விற்கப்படும் கைபேசிகளின் அடிப்படையில் ஆய்வுசெய்திடும்போது ண்ட்ராய்டானது சிறந்த கைபேசி இயக்கமுறைமையாவிளங்குகின்றது,  லினக்ஸ் கர்னலை அடிப்படையாகக் கொண்ட கூகிள் நிறுவனமானது இந்த ஆண்ட்ராய்டு கைபேசி இயக்கமுறைமையை முழுமையாக உருவாக்கியது. லினக்ஸின்அடிப்படையில் சுதந்திரத்தையும் , பாதுகாப்பையும் வலியுறுத்துகின்ற ண்ட்ராய்டு இயக்கமுறைமையானது  ஒரு FOSS fork இனுடைய Replicant ஆல்  சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
. மிகவும் பிரபலமான வெளியீடுகளில் லினக்ஸ் கர்னலால் கட்டமைக்கப்பட்ட PureOS, Ubuntu Touch , postmarketOS, ஆகியவைகளடன்  Replicant, LineageOS,  Plasma ஆகியவைகளும் உள்ளன. இவைமட்டுமின்றி  பல்வேறு லினக்ஸ் அடிப்படையிலான கைபேசி இயக்க முறைமைகளும் உள்ளன, மேலும் இந்த திறமூல திட்டதிடலில்  குப்பைகளான இயக்கமுறைமைகள் கூட ஏராளமானஅளவில்  உள்ளன என்ற செய்தியை மனதில்கொள்க
ஆயினும் உண்மையில் , மேசைக்கணினியில் செயல்படும்  லினக்ஸினை கிட்டத்தட்ட எந்த வொருகைபேசி சாதனத்திலும் நிறுவுகை செய்திடமுடியும் என்பதை கவனத்தில் கொள். இருப்பினும், இங்கு விவாதிப்பது துவல்ல. கைபேசி சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட லினக்ஸ் வெளியீடுமட்டுமேயாகும். 

கைபேசி இயக்க முறைமைகள் பயனாளர் தனியுரிமையை உறுதி செய்வதற்கான வெவ்வேறு முறைகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான லினக்ஸ் அடிப்படையிலான கைபேசி இயக்க முறைமைகள் பயன்பாடுகளுடன் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான ஒரு சில வழிமுறைகளைக் கொண்டிருந்தாலும், பயன்பாடுகள் அவற்றின் பாதுகாக்கப்பட்ட சாண்ட்பாக்ஸுக்கு வெளியே சாதன அணுகலைக் கொண்டிருப்பது அரிதானகும். உள்ளூர் வட்டுக்கு எழுதுவது அல்லது தரவுகளின் இணைப்பு மூலம் தொடர்புகொள்வது என்பன போன்ற பல்வேறு சாதன அனுமதிகள் மீது ண்ட்ராய்டு சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது
மேஜைக்கணினி இயக்க முறைமைகளில் இந்த அளவிலான அனுமதி கட்டுப்பாடு அரிதாகவே உள்ளது, குறிப்பாக எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பயனாளர் இடைமுகத்துடன் அவை இணைக்கப்படவில்லை. மேசைக்கணினி லினக்ஸானது நன்கு அறியப்பட்ட யூனிக்ஸ்பாணியிலான கோப்பு அனுமதிகளை உள்ளடக்கியிருந்தாலும், அனுமதி பெற்ற மாற்றங்களான படிக்க, எழுத செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கின்றது அதற்கு மறுதலையாக கைபேசி OS கள்,பயனாளர்களிடமிருந்து கோரக்கூடிய டஜன் கணக்கான அனுமதிகளை வழங்குகின்றன.
ஒவ்வொரு வெளியீடும் தங்களுடைய சொந்த துல்லியமான அமைப்பைப் பயன்படுத்தும் போது, பெரும்பாலான முதிர்ந்த இயக்க முறைமைகள் எந்தெந்த பயன்பாடுகளை என்னென்ன செய்ய முடியும் என்பதில் அதிக அளவு கட்டுப்பாட்டை வழங்குகின்றன. சாதனத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த பயன்பாடுகள் அரிதாகவே அனுமதிக்கப்படுகின்றன, மேலும் அவை களின் அனுமதிகள கூட அவை என்னென்ன செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்பதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மூல அணுகலைப் பெற்ற பிறகு அந்த கட்டுப்பாடுகள் முறியடிக்கப்படலாம் என்றாலும் பயனாளர்கள் எந்தெந்தத் தரவுகளைமட்டும் திருத்தலாம் என்பதில் மட்டுப்படுத்தப்பட்ட. மூல அணுகல் , நிர்வாகி சலுகைகள், இயல்புநிலையாக மேசைக்கணினியில் கிடைக்கின்றன, ஆனால் கைபேசியில் அணுகுவது கணிசமாக கடினமாகும்,அதிலும்மூல அனுகல் சலுகைகளைப் பெற சாதனத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
பொதுவாக, கைபேசிஇயக்க முறைமைகள் மேசைக்கணினி இயக்க முறைமைகளைப் போல நெகிழ்வாக இருக்க தேவையில்லை. ஒரு மேசைக்கணினி உண்மையில் எல்லையற்ற உள்ளீட்டு வெளியீட்டு உள்ளமைவுகளைக் கொண்டிருக்கும்போது, கைபேசி சாதனங்கள் மட்டும் பொதுவாக ஒரே யொரு உள்ளமைவை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன:
இதன் விளைவாக, மேசைக்கணினியின் லினக்ஸில் உள்ள பல மென்பொருள் தொகுப்புகள் பல்வேறு விதமான உள்ளீட்டு, வெளியீட்டு சேமிப்பக சாதனங்களை ஆதரிக்கின்றன. குறைவான கோப்பு வடிவங்கள் இணைப்புத் தரங்கள் ஆதரிக்கப்படுகின்றன, கைபேசியில் கண்டிப்பாக அதற்குதேவையான உள்ளீட்டு வெளியீட்டு தொகுப்புகள் மட்டுமே சாதனத்துடன் சேர்க்கப்படும். ஒருங்கிணைந்த வரிசைப்படுத்தலுக்குத் தேவையானதை மட்டுமே கொண்டு வெளியீடு கட்டமைக்கப்பட்டுள்ளது, பயனாளர்களின் சந்தைக்குப் பிறகான இணைப்பு விருப்பங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
கம்பியில்லாஇணைப்பு அல்லது யூ.எஸ்.பிவழி கம்பியடன் காட்சி திறன்கள் இன்று உயர்நிலை சாதனங்களில் உள்ளன, ஆனால் இது சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே எதிர்பார்க்கப்படும் வசதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வெளியீட்டிலும் கைபேசி இயக்க முறைமைகள் அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், பொதுவாக, கைபேசி இயக்கமுறைமைகள் மேசைக்கணினி இயக்கமுறைமையை விட குறைவான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன.
முடிவாக வெளிப்படையான வேறுபாட்டின் அடிப்படையில் இயக்க முறைமை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையான வேறுபாடுகள் OS இன் மேற்பரப்பிற்கு அடியில் வாழ்கின்றன. பயன்பாட்டு சாதனத்திற்காக கைபேசி லினக்ஸ் பெரிதும் தனிப்பயனாக்கப் பட்டுள்ளது, அதே நேரத்தில் மேசைக்கணினி லினக்ஸ் வெளியீடுகள் அதிக பொதுவான தொகுப்புகளைக் கொண்டுள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், மேசைக்கணினியில் உள்ளதைப் போலவே திற மூல மென்பொருளின் பாதுகாப்பும் சுதந்திரமும் பெரும்பாலான லினக்ஸ் அடிப்படையிலான கைபேசி இயக்க முறைமைகளில் பராமரிக்கப்படுகின்றன. என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க

%d bloggers like this: