லினக்ஸ் சக்தி வாய்ந்தது, நெகிழ்வானது, மேலும் எதையும் செய்ய முடியும்.
இருப்பினும், லினக்ஸிலிருந்து உண்மையில் அதிகப் பலன்களைப் பெற, மேம்படுத்த வேண்டிய சில திறன்களும் பழக்கவழக்கங்களும் உள்ளன; இல்லையெனில், லினக்ஸிலிருந்து பெறக்கூடிய வளங்களை வசதிவாய்ப்புகளை உண்மையில் பயன்படுத்திகொள்ளவில்லை என்றே பொருள்கொள்ளலாம்.
எனவே, இதைப் பற்றி தீவிரமாக விவாதிக்க விரும்பினால், லினக்ஸ் செயல்படுகின்ற கணினிகளிலிருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கு பின்வருமாறான உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொள்க.
1. சிறப்பு விசைகளுக்கான முதன்மைகட்டுகளை (keybindings) உள்ளமைத்திடுக
மிகநீண்டநாட்களாக லினக்ஸைப் பயன்படுத்தி வருபவர்கள், முதன்மைகட்டுகளை (keybindings) கண்டிப்பாக தேவை என்பதைக் கண்டறிந்திப்பார்கள். ஒரு எளிமையான முதன்மைகட்டு (keybinding): ஒரு செயலுக்கு ஒரு விசையை பிணைக்கின்றோம். இதை விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகள் என தவறாக எண்ணிவிடவேண்டாம், ஏனெனில் விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகள் என்பவை ஒரு செயலுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றிற்குமேற்பட்ட விசைகளை உள்ளடக்கியதாகும். ஆனால் நாம் விவாதிக்கப்போவது குறிப்பிட்ட ஒரு செயலுக்குக் கட்டுப்பட்ட ஒரு விசையைப் பற்றி மட்டுமேயாகும்.இப்போது, இதைப் பற்றி தீவிரமாக விவாதிப்பதற்குச் செல்வதற்கு முன் — முதன்மைகட்டுகளை (keybindings) என்பவை பொதுவாக “Super” எனும் விசை (aka — mod4 — பெரும்பாலும் “Windows” இன் திறவுகோள் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் சில விசைப் பலகைகளில் இது விண்டோவின் வணிகமுத்திரையைக் கொண்டிருக்கும்) போன்ற சிறப்பு விசைகளுக்கு ஒதுக்கப்படும். Alt எனும் விசையையும் (aka — mod1) பிணைக்கலாம். முனைம சாளரத்தைத் திறப்பது, கோப்பு மேலாளர் அல்லது மேசைக் கணினியின் பட்டி போன்ற குறிப்பிட்ட செயல்களை அந்த விசைகளுக்கு ஒதுக்கலாம். இந்த விசைகளை dconf-editor, xbindkeys, xdotool போன்ற பயன்பாடு களுடன் உள்ளமைக்க முடியும்.
2. மிகவும் பயனுள்ள முனையத்தைப் பெற்றிடுக
முனையத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்றாலும், இது திறன்மிகு பயனர்களுக்கு ஒரு அத்தியாவசிய கருவியாகும். பெரும்பாலும், விநியோகத்துடன் வழங்கப்பட்ட முனைய பயன்பாடு மிகவும் நிலையானது . அதிக வாய்ப்புகளை வழங்காது. திறன்மிகு பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு சிறந்த முனைய பயன்பாட்டை ஏன் நிறுவுகைசெய்யக்கூடாது?
Guake போன்ற கீழிறங்குபட்டியின்(drop-down) முனையத்தினை விரும்புவார்கள், ஏனென்றால் அதை ஏதனுமொரு விசையுடன் எளிதாக அழைக்க முடியும் (எண் 1 ஐப் பார்க்கவும்), ஆனால் அது காட்சியின் மேலிருந்து கீழே விழுவதால், அது எப்போதும் அங்கேயே இருக்கும் ஆனால் வழியிலிருந்து விலகி இருக்கும்.
அல்லது அடுக்கடுகான முனையத்தில் சாளரத்தை ( Terminator போன்றவை) நிறுவுகைசெய்திட விரும்பலாம், இது ஒரே சாளரத்தில் பல முனையங்களைத் திறக்க அனுமதிக்கிறது, இதன் மூலம் அனைத்து முனையங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் (தாவிச்செல்லுதல் செய்யப்பட்ட முனையத்திற்கு மாறாக). இது லினக்ஸை சரிசெய்ய உதவுகின்ற ஒரு சிறந்த வழியாகும்.
3. கட்டளை வரியில் உட்கார்ந்திடுக
லினக்ஸ் செயல்படுகின்ற கணினியிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்பினால், கட்டளை வரியைக் கற்றுக்கொள்ள வேண்டும். வழக்கமான பணிகளுக்கு (கொள்முதல் செய்தல், சமூக ஊடகங்கள், செய்திகள், மின்னஞ்சல், ஆவணங்கள்) மட்டுமே லினக்ஸைப் பயன்படுத்த விரும்பினால்,முனைய சாளரத்தைத் தவிர்க்கலாம். ஆனால் ஒரு உண்மையான திறன்மிகு பயனராக இருந்தால், அது இல்லாமல் செய்ய முடியாது. கட்டளை வரி நமக்கு வரைகலைபயனர்இடைமுகம்(GUI) பொருத்த முடியாத அளவுக்கு சக்தியையும் நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது.புதிய பயனர்களுக்கு சிறந்தவை, அதிகம் பயன்படுத்தும் கட்டளைகள், சரிசெய்தலுக்குப் பயன்படுத்த வேண்டிய கட்டளைகள், அனைவரும் ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டிய சில வேடிக்கையான லினக்ஸ் கட்டளைகள் உட்பட லினக்ஸ் கட்டளைகளை விரிவாகப் படித்தறிந்திடுக.
4.மேசைக்கணினியைத் தனிப்பயனாக்கிடுக
லினக்ஸின் சிறந்த குணங்களில் ஒன்று, அது எவ்வளவு நெகிழ்வானது தனிப்பயனாக்கக்கூடியது என்பதுதான். விநியோகத்தின் இயல்புநிலை அமைப்பை ஏற்றுக்கொண்டால் அது அவமானகரமானது, அப்போது அதை நாம் விரும்பும் விதத்தில் சரியாகச் செயல்பட வைக்க முடியும். எடுத்துக்காட்டாக, System76 இன் வரவிருக்கும் COSMIC மேசைக்கணினிபில் பல அற்புதமான மாற்றங்கள் உள்ளன. லினக்ஸ் மேசைக்கணினிபைத் தனிப்பயனாக்குவதில் பல மணிநேரங்களைச் செலவிடுவதை காணமுடியும், எனவே இது ஒரு சரியான செயல்திறன் இயந்திரமாகும், . தற்போது பயன்படுத்தும் மேசைக்கணினி சூழல் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒன்றை நிறுவுகைசெய்து நம்முடையதாக ஆக்கிடுக.
5. விசைப்பலகை குறுக்குவழிவிசைகளை மனப்பாடம் செய்திடுக
இது லினக்ஸுக்கு தனித்துவமானது அன்று, ஆனால் உண்மையில் அந்த விசைப்பலகை குறுக்குவழிவிசைகளை மனப்பாடம் செய்ய வேண்டியது நல்லது. LibreOffice இலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்பலாம், அதற்கான சிறந்த வழி விசைப்பலகை குறுக்குவழிவிசைகள் ஆகும். Linux இற்கு மற்ற பிற இயக்க முறைமைகளுடனான வேறுபாடு என்னவென்றால், விசைப்பலகை குறுக்குவழி விசைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. முனையத்திற்கான விசைப்பலகை குறுக்குவழிவிசைகள் உள்ளன (ஒரு வரியின் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்ல Ctrl+A , வரியின் இறுதிக்கு அழைத்துச் செல்ல Ctrl+E போன்றவை) நிறுவுகைசெய்த கிட்டத்தட்ட ஒவ்வொரு பயன்பாட்டிலும் இந்த குறுக்குவழி விசைகளை செயல்படுத்தி பயன்பெறலாம். அதனால் அவற்றைக் கற்றுக் கொண்டு மனப்பாடம் செய்து, அவற்றை நினைவகத்தில் இணைத்து அவற்றைப் பயன்படுத்திடுக.
6. எல்லாவற்றிற்கும் Linux ஐப் பயன்படுத்திடுக
Linuxஎனும் அற்புதமான இயக்கமுறைமையை ஒரு மேசைக்கணினி விநியோகமாக மட்டுபடுத்திட வேண்டாம். அதை வளாகபிணையத்தில்(LAN)ஒரு சேவையகமாகப் பயன்படுத்திடுக. நமக்குத் தேவையானதை நிறுவுகைசெய்திடுக. பாய்வோட்ட சேவையாளர்(streaming server) தேவையா? Linux ஐப் பயன்படுத்திகொள்க. ஒரு வழிசெலுத்தி(router) தேவையா? Linux ஐப் பயன்படுத்திகொள்க. IoT சாதனங்கள் தேவையா? Linux ஐப் பயன்படுத்திகொள்க. ஒரு இணைய சேவையகம் தேவையா? Linuxஐ பயன்படுத்தி கொள்க. தரவுத்தள சேவையகம் தேவையா? Linux ஐ பயன்படுத்திகொள்க.இந்த பட்டியல் மிகநீண்டு கொண்டே செல்கிறது. மேசைக்கணினியைத் தவிர வேறு எதற்கும் Linux ஐப் பயன்படுத்தும்போது, இந்த OS பற்றி மேலும் அறிந்து கொள்க.
7. firewallஐ பற்றிய ஆழ்ந்த புரிதலைப் பெற்றிடுக.
ஃபயர்வாலை இயக்கிய,பின்னர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்க, எனவே பாதுகாப்பை மையமாகக் கொண்ட லினக்ஸ் விநியோகத்தைப் பயன்படுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. SSH போக்குவரத்தை சில லினக்ஸ் கணினிகளில் அனுமதிக்க விரும்பலாம், ஆனால் மற்றவற்றிற்கு அன்று. வளாகபிணையத்தில்(LAN)உள்ள ஒரு குறிப்பிட்ட சேவையகத்திற்குள் HTTP/S போக்குவரத்தை அனுமதிக்க வேண்டியிருக்கலாம், ஆனால் அவை அனைத்திற்கும் அன்று. நமக்கு என்ன தேவைப்பட்டாலும், அதை ஃபயர்வால் மூலம் எவ்வாறு கையாள்வது என்பதுகுறித்து அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க. உபுண்டு அடிப்படையிலான விநியோகத்தைப் பயன்படுத்துகின்றோமெனில், அந்த ஃபயர்வால் சிக்கலற்ற ஃபயர்வால் (ufw), மேலும்ஃபெடோரா அடிப்படையிலான விநியோகத்தைப் பயன்படுத்துகின்றோமெனில், அந்த ஃபயர்வால்கள் ஆகும்.
8. containersஎன்பவை குறித்து பயின்றிடுக
வீட்டு (அல்லது வணிக) வலைபின்னலில் உள்ள சேவைகளை விரிவுபடுத்து வதற்கு மட்டுமல்லாமல், லினக்ஸைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் containers ஒரு அற்புதமான வழிமுறையாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு containerஉம் லினக்ஸை அதன் தளமாகப் பயன்படுத்திகொள்கிறது, மேலும் containers மிகவும் சிக்கலானதாகிவிடும் என்பதால், OS எவ்வாறு செயல்படுகிறது என்பதை உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும். containersஐப் பற்றி எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக லினக்ஸைப் பற்றி கற்றுக் கொள்வோம்.
9. bash scriptsஎவ்வாறு எழுதுவது என்பதை அறிந்துகொள்க
இந்த உரைநிரல்கள் நாம் விரும்பும் அல்லது நமக்குத்தேவைப்படும் அளவுக்கு எளிமையானதாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருக்கலாம். முக்கியமான கோப்பகங்களை வெளிப்புற கோப்பகத்திற்கு பிற்காப்புநகல் எடுக்க ஒரு பாஷ் ஸ்கிரிப்டை உருவாக்குவதன் மூலம் தொடங்கலாம், பின்னர் வலைபின்னல் முழுவதும் அந்த கோப்பகங்களை பிற்காப்புநகல் எடுக்க நகர்த்திடலாம்.அதன் பின்னர் அனைத்து வகையான பணிகளையும் தானியக்கமாக்க பாஷ் ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தலாம்.லினக்ஸ் நமக்குத் தேவையானதைச் செய்ய பாஷ் ஸ்கிரிப்ட்கள் ஒரு சிறந்த வழியாகும்.
10. லினக்ஸில்வழக்கமான வெளிப்பாடுகளைக் கற்றுக்கொள்க
லினக்ஸில் கற்றுக் கொள்ளும் மிகவும் சிக்கலான திறன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும், ஏனெனில் வழக்கமான வெளிப்பாடுகள் (aka regex) கற்றுக்கொள்வது மிகவும் கடினம். இருப்பினும், regex இன் வழிகளைக் கற்றுக்கொண்டவுடன், விரல் நுனியில் இன்னும் அதிக திறன் இருப்பதைக் காணலாம்.