சூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட்
ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினி மொழி (அதுவும் ஒரு கணினி மொழிதாங்க .. அட…நம்புங்க…). பெயரைக் கேட்டவுடன் பலர் அது ஒரு கணினி மொழியே இல்லை என்று கூறுவர். ஜாவாஸ்கிரிப்ட் மொழி பெரும்பாலும் சின்ன சின்ன வேலிடேசன் (validation)க்கும் மற்றும் பயன்படுத்தி வந்த காலம் போய் இன்று பலம் வாய்ந்த அப்லிகேசன்கள்(applications) எழுத வும் பயன்படுத்தலாம் என்ற காலம் வந்து விட்டது.
1995ஆம் ஆண்டுவாக்கில் ப்ரண்டன் எய்க்(Brendan Eich) என்பவரால் பத்தே நாட்களில் உருவாக்கப் பட்ட மொழிதான் ஜாவாஸ்கிரிப்ட். இந்த மொழி நிறுவப்படாத கணினியே உலகில் கிடையாது என்று கூறலாம். ஆம், இணைய உலாவிகள்(interner browsers) நிறுவப்பட்டுள்ள அனைத்து கணினிகளிலும் இந்த மொழியை இயக்க முடியும்.
ஜாவாஸ்கிரிப்ட் மொழியினுடைய பலம் மற்றும் பலவீனமே அது மிகச்சிறியது என்பதுதான். இந்த மொழியை நாம் மிகக் குறுகிய நாட்களில் கற்றுக்கொள்ள முடியும். ஓரிரு வாரங்களிலேயே நாம் இதன் மொழி அறிவில் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தேறி விடலாம். மிக அற்புதமான, மிக வேகமாக இயங்கக்கூடிய லாஜிக்குகளை(logic) சர்வ சாதாரமாக எழுதிவிடலாம் இதில் எழுதி விடலாம். இந்த மொழியே ஒரு ட்ரிக்கி (tricky) மொழி.
மிக வேகமாக வளர்ந்து வருகிற இணையமும், இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களும், ஜாவாஸ்க்ரிப்டின் வேகமான வளர்ச்சிக்கு ஆதாரமாய் இருக்கின்றன. நிரலர்களில், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளவர்கள் இணையதள நிரலர்கள்தான். அவர்கள் எல்லோருக்கும் இந்த மொழி நல்ல பரிச்சயம். இவர்கள்தான் இன்றைய கணினித் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னால் தான் இணையமே ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இப்பேர்பட்டவர்களை டெஸ்க்டாப்(desktop) மற்றும் மொபைல்(mobile) அப்ளிகேஸன்கள் பக்கம் திருப்ப ஜாவாஸ்கிரிப்டினால் முடிந்தது. அது எப்படி என்று தெரிந்து கொள்வதற்கு நாம் ஜாவாஸ்கிரிப்ட் இன்ஜின்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எழுதுகிற ஜாவாஸ்கிரிப்ட் நிரல்கள் இணைய உலாவிகளில் இந்த இன்ஜின்களிலேயே வேலைசெய்கிறது. இதனை நாம் இன்டர்ப்ரட்டர்(interpretter) என்றும் கூறலாம். ஒவ்வொரு இணைய உலாவியிலும் ஒவ்வொரு வகையான இன்ஜின்கள் உண்டு. க்ரோம் உலாவியில் வி8(V8) , ஃபயர்பாக்ஸ் உலாவியில் ஸ்பைடர் மன்கி(spider monkey) ஆகியவை உள்ளன. இவை எல்லாமே திறவூற்று மென்பொருட்கள். நம்ம திறவூற்று மக்கள் சும்மா இருப்பாங்களா? உலாவியின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய ஜாவாஸ்கிரிப்ட் இன்ஜினை த் தனியாகக் கழற்றி உலாவி இல்லாமலேயே ஜாவாஸ்கிரிப்ட்டை பயன்படுத்தும் படியாகச் செய்தார்கள். இதுவே பல லட்சக்கனக்கான இணைய வல்லுனர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி மிக அற்புதமான அப்ளிகேசன்கள் உருவாக்கத்தொடங்குவதற்கு முதல் படி.
நமக்கெல்லாம் ஆச்சரியம் தரக்கூடிய விசயம் என்னவென்றால் உலகில் பல கோடி மக்களால் நேசிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்ற இணைய உலாவி ஃபயர்பாக்ஸ் பெரும்பாலும் ஜாவாஸ்கிரிப்டினால் எழுதப்பட்டது. அடுத்தது க்னோம் 3 ஷெல் முழுவதும் ஜாவாஸ்கிரிப்ட்தான்.
மேலும் சில பாப்புலர் ஜாவாஸ்கிரிப்ட்டை தழுவிய அப்ளிகேசன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்,
-
Qt Quick மற்றும் Qt Script
-
Pencil
-
Yoono Desktop
-
Phone Gap
-
GlueScript
-
Titanium Appcelerator
-
Node Js
-
GJs
-
Adobe AIR
-
Wunder List
-
GNOME Seed மற்றும் பல.,
இன்றைய தினம் ஜாவாஸ்கிரிப்ட் என்பது நிரலர்களின் சூப்பர் மேன்.
மாணிக் – இணைய நிரலராகப் பணி. திறவூற்று மென்பொருட்களிள் மிகுந்த ஆர்வம் உடையவர். தமிழா குழுமத்தில் இணைந்து திறவூற்று மென்பொருட்களை உருவாக்கி வருகின்றார்.
தளங்கள் – manikk.in மற்றும் midaru.blogspot.com
தொடர்பு – 9841955720
மின்னஞ்சல் : manikk.h@gmail.com