2024 ஆம் ஆண்டில், டெல், ஹெச்பி, லெனோவா, ஆசஸ், சாம்சங் ,போன்ற பிற முக்கிய வணிகமுத்திரைகள் போன்று பல்வேறு புதியசெநு(AI)கணினிகளின்(PC) வெளியீட்டை இப்போது நாம் கண்டுவருகிறோம். இவையனைத்தும் “செநு(AI)கணினி(PC)” இன் moniker மூலம் தங்கள் புதிய சலுகைகளை சந்தைப்படுத்த முனைகின்றன. எனவே, இந்த புதிய செநு(AI)கணினிகள்(PC)எவ்வாறு வேறுபடுகின்றன? AI அல்லாத கணினிகளை விடசெநு(AI)கணினிகள்(PC) என்னென்ன புதிய வசதிகளையும் நன்மைகளையும் வழங்குகின்றன?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவும், செயல்திறனையும் , செயல்திறன் போன்ற வசதிவாய்ப்புகளை காணும் புதிய தலைமுறை செநு(AI)- மேம்படுத்தப்பட்ட கணினிகளை பழைய தலைமுறை கணினிகளுடன் ஒப்பிடுவதற்காக இந்த கட்டுரை உதவக்கூடும் . பின்னர், இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய செநு(AI)கணினி(PC) வாங்க வேண்டுமா இல்லையா என்பதற்கு பதிலளிக்க இந்த கட்டுரையில் முயற்சிக்கிப்படுகின்றது.
2024 இல் வெளியிடப்படும் இன்டெல், AMD செயலிகளுடன் கூடியசெநு(AI) கணினிகள்(PC)
2024 இல் உள்ள செநு(AI)கணினிகள்(PC) இன்டெல்லின் சமீபத்திய Core Ultra செயலிகள் அல்லது AMD இன் சமீபத்திய Ryzen 8000/ 7000 செயலிகளைக் கொண்டுள்ளன. இந்த புதிய தலைமுறை சில்லுகள் கணினியின் AI புத்தாக்கத்தை வரவேற்பதற்கு முக்கிய காரணமாகும். இந்த புதிய CPUகளின் வெளியீட்டில், Intel , AMD ஆகிய இரண்டும் புதிய மடிக்கணினிகளில் பல AI-மைய வசதிகளை மேசைகணினிக்கு கொண்டு வந்துள்ளன.
படம்1
மேசைக்கணினிகளில் ஏராளமான AI-இயக்கப்பட்ட செயலிகள் வெளிவருவதை நாம் இன்னும் கண்ணால்காணவில்லை. ஆனால், AMD ஆனது ஏற்கனவே மேசைக் கணினிகளுக்கான உலகின் முதன்முதல் AI செயலியாக Ryzen 8000G எனும் தொடர்களில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, இன்டெல் புதிய Lunar Lakeஎனும் கட்டமைப்பினை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய தாய்ப்பலகையின்(motherboard) இயங்குதளத்தில் மேசைக்கணினிகளுக்கான செயலிகளின் புதிய தொடர்களும் வெளியிடபடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, கணினி துறையில் இப்போது ஒரு நிலையான மாற்றம் நடக்கிறது. 2024 இன் புதிய செநு கணினிகளால் அதனை பெறுவதற்காகநம்மைப் போன்ற நுகர்வோர் ஆர்வமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
செநு(AI)கணினிகள்(PC) என்னென்ன புதிய. வசதிகளை வழங்கவிருக்கின்றன?
2024 இன் செநு(AI)கணினிகள்(PC) பல புதிய ‘AI-மேம்படுத்தப்பட்ட’ வசதிகளுடன் வருகின்றன. தற்போதும், செநு(AI)கணினிகளின்(PC) துவக்கபணிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளது – இந்த புத்தாக்க நன்மைகள் மிகவும் அடிப்படையானவை. இன்டெல், AMD ஆகிய இரண்டும் 2024 இன் புதிய மடிக்கணினிகளை அனைத்து செயல்களுக்கும் AI-க்கு அதிக அழுத்தம் கொடுத்து சந்தைப்படுத்துகின்றன.
நரம்பியல் செயலாக்க அலகு (Neural Processing Unit (NPU))
2024 ஆம் ஆண்டில் புதிய செநு(AI)கணினிகளின்(PC) மிகவும் குறிப்பிட்ட வசதி, இன்டெல்,AMDஇலிருந்து இந்த புதிய செயலிகளில் அட்டையிலுள்ள செநுவின்AI accelerator ஐச் சேர்ப்பதாகும். இதுவே நரம்பியல் செயலாக்க அலகு (NPU) என அழைக்கப்படுகிறது,மேலும் இது செயலியில் இருக்கின்ற புதியவன்பொருள் கூறு ஆகும்.
AI-ஐ விரைவுபடுத்துவதற்கான வடிவமைப்பால் NPU ஆனது, CPU & GPU ஆல் அடைய முடியாத உயர் மட்ட செயல்திறனுடன், அதிக கணினிக்கின்ற பணிச்சுமைகளையும் கையாளும் வகையில் அதன் வளங்களை கட்டணமில்லாமல் வைத்திருக்க முடியும், அதே நேரத்தில் AI-மைய பணிச்சுமைகளை NPU ஆனது கையாளுகிறது.
படம் -2
செநு(AI)கணினிகளில்(PC) ஒத்துழைப்பு வசதிகள்
புதிய செநுAI வசதிகளுடன் படைப்பாற்றல் வல்லுநர்கள், மேம்படுத்துநர்கள் , பொதுவான பயனர்கள் ஆகியோரின் பணி மிகவும் திறமையானது என்று கூறப்படுகிறது. ஒத்துழைப்பு இன்னும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. Google Meet, Microsoft Teams, Zoom போன்ற தகவல்தொடர்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது, செநுவின் AI தானியிங்கியான வரைச்சட்டம், செநுவின்(AI) பின்னணி மங்கலான காட்சி , செநுவின்AI பார்வைக்கேற்ற திரைகாட்சி ஆகியவற்றைப் பெற்றிடுவோம். இது நேரடியாக குறிப்பிட்ட நபரைகாண்பது போன்று தோன்றும். இது இன்றைய பல செநு(AI) கணினிகளில் (PC) காணப்படுகின்ற பொதுவான வசதிகளின் தொகுப்பாகும்.
முன்னதாக, NPU (Intel 13th Gen போன்ற செயலிகளுடன்) இடம்பெறாத AI அல்லாத கணினிகள், கானொளிகாட்சி கூட்டத்திற்கான இந்த AIஇன் மேம்பாடுகள் போன்ற ஒத்துழைப்பு வசதிகளைக் கொண்டிருந்தன. Beebomஇன் Samsung Galaxy Book 3 ஆனது Intel Core i7-1370P செயலியுடன் கையாளுகின்றது, மேலும் அதன் வசதிகளின் தொகுப்பில் கானொளிகாட்சி கூட்டத்தின் போது AI மேம்பாடுகளும் அடங்கும். “செநு(AI)கணினிகளின்(PC)” அதே வசதிகள் சந்தையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எளிதில் கிடைக்குமாறு கொண்டுவரப்படுகின்றன – பின்னணி மங்கலானநிலை(background blur), தானியங்கி-வரைச்சட்டம்(auto-framing), இரைச்சலை நீக்குதல்(noise cancellation) ஆகியவை இந்த மடிக்கணினியில் இருந்தன.
எனவே, 2024 இல் புதிய செநு(AI)கணினிகள்(PC) எவ்வாறு செயல்களைச் சிறப்பாகச் செய்கின்றன, குறிப்பாக முந்தைய கணினிகளில் ஏற்கனவே இதுபோன்ற செநு(AI) வசதிகள் இருந்தால்? முந்தைய -gen Core i7-1370Pஆனது NPU இல் இல்லாததால் மேலே கூறிய ஆர்ப்பாட்டமானது உண்மையில் CPU இல் உருவாகிறது. நரம்பியல் செயலாக்க அலகு Intel, AMD இன் பல்வேறு புதிய CPUகளில் மட்டுமே காணப்படுகிறது. பல முந்தைய ஜென் மடிக்கணினிகளில் உள்ள இந்த செநு(AI) வசதிகள் ஒரு சிறப்பு பயன்பாட்டின் பகுதியாகவும் இருந்தன. சாம்சங்கில், இது ‘Studio Mode’. என்று அழைக்கப்பட்டது. சில நேரங்களில், மென்பொருள் கட்டுப்பாட்டுப் பலகத்தில் செநுவின் AI வசதிகளும் காணப்படுகின்றன.
இப்போது 2024இல் செநு(AI)கணினிகள்(PC), NPU பல செநுAI தொடர்பான பணிச்சுமைகளையும் கையாளுகிறது. செநுAI வசதிகளைக் கொண்ட இந்தப் பழைய மடிக்கணினிகளில், சத்தம் நீக்குதல் அல்லது கானொளிகாட்சியின் அழைப்பு மேம்பாடுகள் போன்ற செநுவின்AI வசதிகள் இயக்கப்பட்டிருக்கும் போது, அதிக மின் நுகர்வுக்கான எச்சரிக்கையை அடிக்கடி காணலாம். ஆனால் இது போன்ற AIஇன் கணிக்கின்ற பணிச்சுமைகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு NPU க்கு, மின் நுகர்வானது மிகவும் குறைவாக உள்ளது, இது கட்டமைப்பின் வடிவமைப்பாகவும் உள்ளது.
Beebom,இல் பரிசோதித்த புதிய 2024 செநுAI-செயல்படுத்தப்பட்ட கணினிகளில், இந்த செநுவின்AI மேம்பாடுகள் மற்ற முக்கிய கணினிஅமைவின் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை விட NPU வழியாக பரிசோதனை செய்யப்பட்டு எளிதாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. 2024 இன் புதிய செநு(AI)கணினி களுக்கு(PC), செயல்பலகத்தில் NPUஐ காணலாம், அது பயன்பாட்டில் இருக்கும்போது அதன் பயன்பாடு மிகஅதிகரிக்கும்.
Windows 11 இன் படபிடிப்பு பயன்பாட்டில், AI விளைவுகள் இப்போது உற்பத்தியாளரிடமிருந்து ஒரு தனி வசதியைக் காட்டிலும் பயன்பாட்டிலேயே (Windows படபிடிப்பு விளைவுகளின் ஒரு பகுதியாக) இருப்பதைக் காணலாம். அனைத்து செநுAI வசதிகளும் இயக்கப்பட்ட நிலையில், NPU 25-35% வரம்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படம்3
நாம் இன்னும் பலவற்றைச் செய்வதற்கு முன், செநு(AI)கணினிகள்(PC), செநுAI அல்லாத கணினிகளில் இன்னும் கொண்டுள்ள சில பொதுவான வசதிகளான. OpenAI இன் ChatGPT, Googleஇன் Gemini, Adobeஇன் Generative AI, போன்ற இன்றைய பல்வேறு பிரபலமான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை எவரும் எந்தவொரு கணினியிலும் பயன்படுத்தமுடியும்மேலும்Nvidiaஆனது சமீபத்தில் RTX உடனான அரட்டையை வெளியிட்டது. இது RTX வரைகலைஅட்டை (இணைய இணைப்பில்லாமல்) நேரடியாக இயக்கக்கூடிய AI சாட்போட் ஆகும்.
இதனுடன், இணக்கமான Nvidia இன் RTX வின் GPU கொண்ட எந்தவொரு கணினியையும் ‘செநு-இயக்கப்பட்ட’ கணினி என்றே அழைக்கலாம். பழைய கணினிகளில் NPU இல்லாவிட்டாலும், இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உண்மையாக இருக்கும். இப்போது, செநு(AI)கணினிகளின்(PC) மேலும் சில வசதிகளைப் பற்றி விவாதிப்போம், பின்னர் 2024 இல் செநு(AI)கணினியை(PC) வாங்குவது மதிப்புள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்!
2024 செநு(AI)கணினிகளி(PC) செநு(AI) உதவியாளர்கள் எவ்வாறு சிறந்து விளங்குகின்றன
இன்டெல் , AMD’இன் பலகத்தின் NPU ஆன AI உதவியாளர்களை இயக்குவதற்குப் பயன்படுத்திகொள்ளலாம், இருப்பினும் சிறிய மாதிரிகளைக் கொண்டு உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, Tony Mongkolsmai (இன்டெல்லில் உள்ள மென்பொருள் வடிவமைப்பாளர்) TinyLlama & Google’s Gemma–2b இன் செநுAI மாதிரிகளை NPU இல் நேரடியாக எவ்வாறு காட்சிப்படுத்தினார் என்பதை காண்க. இதைப் போலவே, AMD Ryzen AI சூழலை எவ்வாறு அமைப்பது என்பது பற்றிய ஆவணங்களை Huggingface கொண்டுள்ளது, எனவே Ryzen 7000/8000 தொடர் செயலிகளின் NPU இல் LLMகளை இயக்கலாம்.
அடுத்து, இன்டெல் சில புதிய AI உதவியாளர்களைக் காட்டியது, அவை எதிர்காலத்தில் பயனர் உற்பத்தித்திறனை மேம்படுத்தும். சமீபத்திய Intel Core Ultra செயலிகள் , NPU ஆகியவற்றைப் பயன்படுத்தி வரவிருக்கும் Rewind.ai எனும் ஒரு கண்டுபிடிப்பு ஆகும், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் Windows க்காக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலான எண்ணிக்கையில் AI உதவியாளர்கள் எதிர்காலத்தில் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது, இந்த NPUஐ நேரடியாகப் பயன்படுத்த முடியும்.
Rewind இன் AI உதவியாளர் நம்முடைய தினசரி பணிமுழுவதும் நமக்கு உதவ அற்புதமான பயனுள்ள கருவியாக Intel ஆல் விவரிக்கப்பட்டுள்ளது.இதை கட்டமைத்தவுடன், Rewind’s AI எனும் உதவியாளர் நாம் செய்யும் அனைத்து பணிகளையும் கவணிக்கும். பின்னர், இது நினைவகத்தில் கொண்டுசென்று செயல்படும், எனவே எதையாவது நாம் மறந்துவிட்டால், இந்த AI உதவியாளரிடம் அதுகுறித்து சந்தேகம் எழுப்பலாம்.
செநு(AI) கணினி என்றால் என்ன, அதை 2024 இல் வாங்க வேண்டுமா?
கூடுதலாக, பயனர் சந்திப்பில் இருக்கும்போது குறிப்பு எடுக்கும் செயல்முறையை இது தானாகவே நிர்வகிக்கிறது. மின்னஞ்சல் வரைவுகளை எழுதுவதை தானியங்குபடுத்தவும் இதைப் பயன்படுத்திகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக, இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது மேலும் விரைவில் வரவிருக்கும் AI PC-இன் தனிப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியடையலாம்! ChatGPT போன்ற கருவிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், Rewind போன்ற AI உதவியாளர் சரியான உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய AI உதவியாளர்கள், நாம் செய்யும் அனைத்தையும் கவணித்துக் கொண்டிருப்பதால், சற்று நெருக்கமாக இருந்தாலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும், Rewindஇன் AI உதவியாளர் புதிய செநு(AI) கணினிகளுக்காக தனியாக வெளியிடப்படலாம் என குறிப்பிடப்படவில்லை. இது அதிக சக்தியைப் பயன்படுத்தக்கூடும், ஆனால் செநு(AI) கணினிகள் அல்லாதவற்றிலும் இது இயங்கக்கூடும். MacOS க்கு ஏற்கனவே உதவியாளர் கிடைக்கிறது. இது இயக்கப்பட்டிருக்கும் போது செயல்பட சிறிய அளவு CPU சக்தியைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், இந்த AI-மேம்படுத்தப்பட்ட கணினி சகாப்தத்திற்காக நேரடியாக வடிவமைக்கப்பட்ட புதிய செநு(AI) கணினிகள் பழைய செயலிகளைக் கொண்ட AI அல்லாத கணினிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழில்முறை உள்ளடக்க உருவாக்கமும் , உருவாக்க செநுவும்(Gerative AI)
இன்டெல்லின் கூற்றுப்படி, இன்டெல் கோர் அல்ட்ராவுடன் இயக்கப்பட்ட புதிய AI கணினிகள் AI பயன்பாட்டு செயல்திறன் அளவுகோல்களில் மிகச் சிறந்தவை. Audacityஇல் AI-உதவியுடன் கூடிய உள்ளடக்க உருவாக்கம், உருவாக்க AI, AI தலைமுறை கேட்பொலி உட்பட பல்வேறு செய்திகள் இங்கு பரிசோதிக்கப்பட்டன. சமீபத்திய செயலிகளுடன் கூடிய புதிய செநு(AI) கணினிககள் பழைய தலைமுறைக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை காண்போம்:
WonderShare Filmora, Adobe Premier Pro, Davinci Resolve , Adobe Lightroom போன்ற பல உள்ளடக்க உருவாக்கப் பயன்பாடுகள், இந்த பயன்பாட்டில் உள்ள சமீபத்திய AI-மேம்படுத்தப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தும் போது, கோர் அல்ட்ரா செயலியுடன் கூடிய புதிய செநு(AI) கணினியில் சிறப்பாகச் செயல்படுமாறு அமைத்திருப்பதை காணலாம்.
இந்த பயன்பாட்டின் பெரும் பகுதி GPU காரணமாகவும் உள்ளது. கணினியின் வரைகலைஅட்டை என்பது NPU ஐத் தவிர AI ஐ விரைவுபடுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணினியின் ஒருகூறு ஆகும். ஆனால், GPU, CPU , NPU ஆகிய அனைத்தும் ஒன்றாக ஒருங்கிணைந்த செயல்படும் AI பணிச்சுமைகளும் உள்ளன.
AI-மேம்படுத்தப்பட்ட கேட்பொலியை திருத்தம் செய்தல்
AI-மேம்படுத்தப்பட்ட கேட்பொலியில் திருத்தம்செய்வதற்கு, Intel ஆனது Audacity இன் சமீபத்திய OpenVINO செருகுநிரல்களுடன், பல மோசமான செயல்களும் சாத்தியமாகும் என்பதைக் காட்டுகிறது. , ஒரு இசைக்கலைஞர் சமீபத்திய செநு(AI) கணினியில் உரையிலிருந்து-இசையை திறம்பட உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
OpenVINO இசைப்பிரிப்பானைப் பயன்படுத்தி ஒற்றையான கேட்பொலி அடுக்கின் கூறுகளை தனியாக பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கேட்பொலி தொகுப்பில் இருந்து டிரம் அடிப்பதைப் பிரிப்பது. ஒரு இசைக்கலைஞர் அல்லது கேட்பொலி பொறியாளரின் பணிக்கு நேரடியாகப் பயனளிக்கும் 2024 இன் செநு(AI) கணினிகளில் தனிப்பட்ட வசதிகளை காண்பது மிகவும் அருமையாக இருக்கிறது!
2024 இல் செநு(AI) கணினிகளை வாங்க வேண்டுமா?
ஒட்டுமொத்தமாக, தொழில் முன்னேற்றத்தில் AI முக்கிய மையமாக இருக்கும். AI தொடர்பான அனைத்தையும் பயன்படுத்த ஆர்வமாக உள்ளதாக வைத்துக்கொள்க. மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, தற்போது வெளியிடப்பட்டுள்ள AI வசதிகளிலிருந்து பணியைசெயற்படுத்தி பயனடையலாம். அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், புதிய செநு(AI) கணினியைப் பெறுவது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்!
உள்ளடக்க உருவாக்கம், இசை, பயன்பாடுகளின் மேம்பாடு போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் 2024 இன் புதிய செநு(AI) கணினிகளில் பல்வேறு புதிய வசதிகளை கண்டிப்பாகப் பயன்படுத்தலாம். எனவே, 2024 இல் செநு(AI) கணினிகளின் போதுமான முக்கிய நன்மைகள் நமக்குவழங்கும். பழைய பொதுப்பயன் கணினிகளுடன் ஒப்பிடும்போது AI கணினிகள் கூடுதலாக சில பயனுள்ள வசதிகளை வழங்கக்கூடும். கணினியில் அந்த வசதிகளை அனைவரும் பயனுள்ளதாகக் காணப் போவதில்லை என்பதுதான் உண்மை.
எந்த AI வசதிகளும் தேவைப்படாத ஒரு பொது நுகர்வோர் எனக்கொள்க. 2024 இல் வெளியிடப்பட்ட AI கணினிகள் உண்மையில் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்பதை பலர் கண்டுபிடிப்பார்கள் என கொள்ளலாம். சமீபத்திய ‘செநு(AI) கணினி’ இல்லாவிட்டாலும், பல்வேறு AI வசதிகளை தற்போதைய கணினியை நமக்குப் பயனளிக்குமாறு பயன்படுத்திகொள்ளலாம். செநு(AI) கணினிஎன்பது கணினியை சந்தைப்படுத்தலுக்கான ஒரு சொல் ஆகும், இது கணினிகளை பழையவற்றிலிருந்து பிரிக்கிறது. எனவே, அவசரப்பட்டு உடனடியாக கண்டிப்பாக புதியதாகவொரு செநு(AI) கணினியை வாங்க வேண்டுமென உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு பயன்படுகின்ற வகையில் பல்வேறு பயன்பாடுகள் இன்னும் உருவாக்கப்பட்டுக்கொண்டுஇருக்கின்றன, மேலும் நாம் முன்னேறும்போது கணினியின் ‘செநு(AI) கணினியின்’ சகாப்தம் பெரிதும் புதுமையாக மாறும். இதுவே கூடுதலாக, தனிப்பட்ட முறையில்செநு(AI) கணினியை வாங்க வேண்டாம் என்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
ஏன் செநு(AI) கணினியை வாங்கவேண்டாம் (இப்போதைக்கு)?
உண்மையைச் சொல்வதானால், புதிய தலைமுறை செயலிகள் நமக்கு எந்தவொரு பெரிய செயல்திறனுடனான பயன்களையும் வழங்கவில்லை. இந்த வசதிதான் புதிய செயலி தலைமுறையைப் பற்றி மிகவும் ( பலரை) உற்சாகப்படுத்துகிறது. ஆனால் இந்த நேரத்தில்,செயல்திறன் உச்சவரம்பை பெரிதும் மாற்றிடுவதற்குப் பதிலாக, AI, மேம்படுத்தப்பட்ட ஆற்றல், திறன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் Intel Lunar Lake & Arrow Lake போன்ற செயலிகள் ஏற்கனவே கிண்டல் செய்யப்பட்டுள்ளன. Zen 5 எனும் செயலியின் கட்டமைப்பு( architecture) போன்றவற்றின் கீழ் AMD உற்சாகமான ஒன்றை புதியதாக உருவாக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக, சில பெரிய செயல்திறன்கள் எதிர்பார்க்கப் படுகின்றது. இன்னும் கூடுதலான AI-மைய மேம்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு வரப்படும். அந்த நேரத்தில், ‘செநு(AI) கணினியின்’ புதியவசதி தொகுப்பு பெரிதும் வளர்ச்சியடைந்தி ருக்கும். இது AI கணினியை நிகழ்காலத்தில் வாங்குவதை விட எதிர்காலத்தில் வாங்குவது சிறந்ததாக மாற்றக்கூடும்.
கூடுதலாக, சிறந்த செயலிகளுடன் எதிர்காலத்தில் ஒரு புதிய செநு(AI) கணினியை வாங்குவது, குறிப்பாக NPU, சில தனிப்பட்ட ‘AI வசதிகளை’ மட்டும் வழங்காது. தற்போதைய கணினி, பழைய தலைமுறை வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது இறுதியாக செயல்திறனை மேம்படுத்தும். 2024 ஆம் ஆண்டில் AI கணினியை வாங்க வேண்டாம. சமீபத்திய கணினியை புதிய நவீணகாலத்திற்குஏற்ப மேம்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்திடுக – ஆனால் செயல்திறன் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே.
இப்போதைக்கு, AI PC என சுருக்கமான பெயரால் அழைக்குப்பெறுகின் செநு(AI) கணினியின்சூழல் அமைப்பு உற்சாகமாக இருந்தாலும், அது மெதுவாக மேம்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, தற்போதுசெநு(AI) கணினியை வாங்க அவசரப்பட வேண்டிய அவசியமில்லை எனும் அறிவுரை வழங்கப்பபடுகின்றது.