செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது.

சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின் பால் ஆகிய இருவரும்இணைந்த, ஜாவாஸ்கிரிப்டில் JS இல் LLM முகவர்களை உருவாக்குவதற்கான புதிய பாடத்திட்டத்தை ஒன்றாக இணைந்து வெளியிட்டனர். மேலும் TensorFlow.js போன்ற நூலகங்களை மேம்படுத்துகின்ற முகவர்களை உருவாக்குவதற்கு JavaScript ஐப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

தற்போது ஜாவாஸ்கிரிப்ட் ஆனது , பெரும்பாலும் இணைய மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் படுகிறது, செநு(AI)மாதிரிகளை நேரடியாக இணையஉலாவியில் இயக்கலாம், இது சேவையாளர் கணினியின் சுமையைக் குறைக்கிறது அதனோடு நிகழ்நேர ஊடாடுதலைச் செயல்படுத்துகிறது. அரட்டையறைகள் (chatbots) அல்லது நிகழ்நேர பகுப்பாய்வு போன்ற உடனடி கருத்து அல்லது தொடர்ச்சியான புதுப்பிப்புகள் தேவைப்படுகின்ற பயன்பாடுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

செநு(AI)மேம்பாட்டிற்காக JavaScript ஐப் பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளும்போது, ​​NPMசூழல் அமைப்பு , APIகளுக்கான அணுகலை வழங்குவதால், Node.js ,Next.js போன்ற கட்டமைப்புகளுக்கு அதிகத் தொடர்பு உள்ளது. இந்த வழியில், ML நூலகங்களை அணுகுவது, செநு(AI)பயன்பாடுகளை உருவாக்குவது எளிதாகிறது.

இணைய உலாவிகள் , Node.js சூழல்களில் செநு(AI) திறன்களை நேரடியாக கொண்டு வருவதன் மூலம் JavaScript உடன் செநு(AI)மேம்பாட்டை செயல்படுத்துவதில் TensorFlow.js ஆனது மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

TensorFlow.js ஆனது, இணைய உலாவியில் VAEs , GANs போன்ற உருவாக்க மாதிரிகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது, உருவப்படங்கள் அல்லது இசை போன்ற புதிய உள்ளடக்கத்தை உருவாக்க ஊடாடும் பயன்பாடுகளை செயல்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, DCGAN (Deep Convolutional GAN)ஆனது யதார்த்தமான உருவப்படங்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேம்படுத்துநர்கள் ஊடாடும் பயன்பாடுகளை உருவாக்கமுடியும், அதில் பயனர்கள் மறைந்திருக்கின்ற vectorsஇன் காலியிடத்தினை நிகழ்நேரத்தில் படங்களை உருவாக்க , கையாள முடியும். VAE களின் மற்றொரு சிறந்த உதாரணம் Google இன் மெஜந்தா செயல்திட்டமாகும். இது MusicVAE ,MelodyRNN உட்பட பல்வேறு இசை உருவாக்க மாதிரிகளின் TensorFlow.js செயலாக்கங்களை வழங்குகிறது. இந்த மாதிரிகள் முழுவதுமாக இணைய உலாவியில் இயங்குகின்ற ஊடாடும் இசை அமைப்புக் கருவிகளை உருவாக்கப் பயன்படுகின்றது.

சுவாரஸ்யமாக, அதன் இலகுரக தன்மை காரணமாக, 2022 இல், LinkedIn Python ஐ விட TensorFlow.js ஐ தேர்வு செய்தது, ஏனெனில் இது Node.js வழியாக பின்புலத்தில் பைத்தானை விட வேகமாக செயல்படக்கூடியது.

ஜாவாஸ்கிரிப்ட்ஆனது செநு(AI) அரட்டையறைகளை சிறந்ததாக்குகின்றது

செநு(AI)- இயங்குகின்ற நூலகங்களைத் தவிர, ஜாவாஸ்கிரிப்ட்டை அரட்டையறைகளை உருவாக்கவும் பயன்படுத்திகொள்ளலாம், இது அதன் இயல்பான மொழி செயலாக்க திறன்களுடன் மனித விவாதத்தின் நோக்கத்தை நன்கு புரிந்துகொள்ளகின்றது.

ShoAIb Fஎன்பவர், ஒரு முழு– stack மேம்படுத்தநராவார், இவர் செநு(AI)இன் அரட்டையறையின் மேம்பாட்டில் ஜாவாஸ்கிரிப்ட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். பயனர் உள்ளீட்டைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் அரட்டையறைகள் NLPஐயும், காலப்போக்கில் தங்கள் பதில்களை மேம்படுத்த MLஐயும் பயன்படுத்த முடியும். ஜாவாஸ்கிரிப்ட்டின் பன்முகத்தன்மை இந்தசெநு(AI) நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானது, மேம்படுத்துநர்கள் புத்திசாலித்தனமான , பதிலளிக்கக்கூடிய அரட்டையறைகளை உருவாக்க அனுமதிக்கிறது, அவை இணைய பயன்பாடுகளில் எளிதாக ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயனர் அனுபவங்களை வழங்குகின்றன.

வாடிக்கையாளர் ஆதரவை வழங்கவும், கருத்துக்களை சேகரிக்கவும் , முன்னணியை உருவாக்கவும் வணிக நிறுவனங்களால் அவை பயன்படுத்தப் படுகின்றன. ஜாவாஸ்கிரிப்ட் ஆனது அரட்டையறையின் பயனர் இடைமுகத்தை உருவாக்கவும், அரட்டையறைக்கும் பயனருக்கும் இடையிலான தொடர்புகளை நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் மேலும் விளக்கமாக கூறினார்.

இணைய பயன்பாடுகளில் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்திகொள்ளலாம், அதாவது இணையஉலாவியில் விரைவாகவும் எளிதாகவும் செயல்படுகின்ற செநு(AI) இன் பயன்பாட்டை உருவாக்கலாம். ஆனால் இங்கு மிக முக்கியமான பகுதி ஜாவாஸ்கிரிப்ட் ஆகும்,இது அதன் இயல்பிலேயே அளவிடக்கூடியது, நிகழ்நேரத்தில் அதிக அளவிலான தரவை செயலாக்கக்கூடிய செநு(AI)பயன்பாடுகளை உருவாக்குவதற்கு இது சிறந்ததாக உள்ளது.

ஜாவாஸ்கிரிப்ட்டை ஏன் செநு(AI)க்கு பைத்தானை மாற்றாக பயன்படுத்த முடியாது?

செநு(AI)/ML மேம்பாட்டிற்காக பைதான் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிப்ட்டுக்கு, Pandas, TensorFlow, Keras, Jupyter notebooks போன்ற பைதான் நூலகங்கள், கட்டமைப்புகளுக்கு இணையான சூழல் அமைப்பு எதுவும் இல்லை.

Reddit இல் உள்ள ஒரு பயனர், “பெரும்பாலான செநு(AI)/ML பணிகள் பொதுவாக ஆய்வு பணிகளாகும் தரவுத் தொகுப்புகளை பதிவேற்றம்செய்தல், அவற்றைக் கையாளுதல், மாதிரிகளை உருவாக்குதல், அவற்றின் துல்லியத்தை மதிப்பீடு செய்தல், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்தல். ஆகிய பணிகளில் பைதான் சிறந்து விளங்குகிறது,” செநு(AI)மேம்பாட்டிற்காக பைத்தானை ஜாவாஸ்கிரிப்ட் இன் மூலம் மாற்ற முடியாது என்பது இன்னும் ஒரு புதிய கருத்தமைவாகும், மேலும் எதிர்காலத்தில், ஜாவாஸ்கிரிப்ட் உருவாக்குகின்ற செநு(AI) பயன்பாடுகளுக்கு அதிகமான படிப்பகங்கள், நூலகங்கள் , ஆதரவு இருக்ககூடும். செநு(AI) மாதிரிகளை இணையப் பயன்பாடுகளில் ஒருங்கிணைக்க இது மேம்படுத்துதலை எளிதாக்குகின்றது.

இருந்தபோதிலும் ஜாவாஸ்கிரிப்டை நன்கு அறிந்த, செநு(AI) மேம்பாட்டிற்கு மாற விரும்பும் ஒருவருக்கு, டைப்ஸ்கிரிப்ட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில் இது ஜாவாஸ்கிரிப்ட்டின் மீப்பெரும்தொகுப்பாக திகழ்கின்றது ஆனால் செநு(AI)ஐ உருவாக்கவும் பயன்படுகிறது. என்பதே உண்மையான களநிலவரமாகும்

%d bloggers like this: