ஜாவா எனும் கணினிமொழி வழக்கொழி்ந்துவிட்டதா?

ஏறத்தாழ20 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி நிரலாளர்களால் மிக அத்தியாவ சியமான கணினி மொழிகளில் ஒன்றாக ஜாவா எனும் கணினிமொழியானது பயன் படுத்தி கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கணினி மொழியானது தொழில்துறை முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுவருகிறது மிகமுக்கியமாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான கணினி அறிவியல் படிப்புகளில் பாடத்திட்டத்தின் கட்டாயப் பகுதியாகஇந்த ஜாவா எனும் கணினிமொழி இருந்து வருகின்றது. ஆனால் தற்போது பல மேம்படுத்துநர்கள் இதை ஒரு மிகவும் வயதானதும் மிகப்பழமையானதுமான நிரலாக்க மொழியாகப் பார்க்கத் தொடங்கி யுள்ளனர், இது விரைவில் வழக்கற்றுப் போகும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர். பிரபலமான மேம்படுத்துநர்களின் கருத்துக்கணிப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்தக் கட்டுரையில் இந்த சிக்கலின் மையத்தைப் பெற முயற்சிக்கப்படு கின்றது.
டிசம்பர் 2021 கடைசி வாரத்தில், எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்த ஒரு நிரலாளராவார். அவர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கி்ன்ற 2022ஆம் ஆண்டிற்கான தனது கற்றல் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருந்தார், மேலும் அவர் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து நிரலாக்க மொழிகளைப் பரிந்துரைக்கும்படி என்னிடம் கொரினார். நான் கொடுத்த பரிந்துரைகளில் ஒன்று ஜாவாவைக் கற்றுக்கொள்வது என்பதாகும்.உடன் “ஆனால் ஜாவா இன்னும் மறையவில்லையா?” என அவர் வினவியதை தொடர்ந்து நான் மிக அதிர்ச்சி யடைந்தேன். ஏனெனில் ஜாவாஎனும் கணினிமொழி மறைந்துவிட்டதாக நிரலாளர் ஒருவர் எவ்வாறு கூற முடியும்? இதுகணினிதுறையில் மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிரலாக்க மொழிகளில் ஒன்றாக இருந்துவருகின்றதே. இது தற்போதைய ப.யன்பாட்டில்கூட மிகவும் அதிக பயன்பாட்டில் உள்ளதே கணினி துறையில் மிகவும் அதிகதேவையான ஒன்றாக இது திகழ்கின்றதே.என்ற என்னுடைய சந்தேகத்தினை தீர்வுசெய்வதற்காக உடனடியாக அன்றைய தினமே, ‘ஜாவா எனும் கணினிமொழி மறைந்துவிட்டதா?’ என்று கூகுளில் தேடிபார்த்தேன். , உண்மையில், ஜாவா என்பது எதிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு தேவையற்ற மொழி என்று பல மேம்படுத்துநர்கள் நம்புகிறார்கள். ஜாவாவின் விமர்சகர்களில் லினஸ் டோர்வால்ட்ஸ் போன்ற சில கணினிதுறையில் மிகப்பிரபலமானவர்களிடம் ஜாவாவைப் பற்றி கேட்டபோது, “ஜாவா என்பது மிகவும் அருமையான பயனுள்ள கணினி மொழியாகும்” என்று ஒரு பேட்டியில் கூறினார். அது என் கவனத்தை ஈர்த்தது, அதனால் நான் மிக ஆழமாக தோண்டிதுருவ ஆரம்பித்தேன். ஜாவாவிற்கு எதிராக மேம்படுத்துநர்கள் பகிர்ந்து கொண்ட வாதங்களில் ஒரு வடிவத்தை நான் கவனித்தேன். பெரும்பான்மையான ஜாவா விமர்சகர்களுக்கு இந்த கணினிமொழியானது கட்டமைக்கப்பட்ட விதத்தில் சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றியது.
மேம்படுத்துநர்கள் ஒரு தொழில்நுட்பத்தை எவ்வாறு உணர்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, மேம்படுத்துநர்களிடம் கணக்கெடுப்பு செய்த பிரபலமான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட தரவுகளைப் பின்பற்றுவதாகும். இந்தக் கட்டுரையில், GitHub அக்டோபர் 2021, JetBrains State of Developer Ecosystem 2021 , StackOverflow மேம்படுத்துநர் கணக்கெடுப்பு 2021 ஆகியவற்றிலிருந்து தரவுகளை ஆய்வு செய்துள்ளேன். இந்த அறிக்கைகளிலிருந்து நான் பெற்ற நுண்ணறிவு ஜாவா சுற்றுச்சூழல் அமைப்பில் எது சரி அல்லது எது தவறாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.
ஜாவாவைபற்றிய சுருக்கமான கண்ணோட்டம்
இந்த கட்டுரையில் எனது அனுமானம் என்னவென்றால், வாசகருக்கு ஏற்கனவே ஜாவா நிரலாக்கம் , அது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய சில கருத்துக்களை கொண்டிருப்பார்கள். எனவே, ஜாவாவின் வரலாற்றைப் பற்றிய பல விவரங்களுக்கு நான் செல்லமாட்டேன். அப்படிச் செய்வது நாம் எடுத்துகொண்ட தலைப்பிலிருந்து வழிதவறி செல்வதாகிவிடும். ஆனால் ஜாவாவைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருப்பதைத் தெளிவாக புரிந்துகொள்வதற்கு அதன் அடிப்படைகளைப் பகிர்ந்துகொள்வது எப்போதும் நல்லது. இந்த கணினிமொழியை பற்றிய நல்ல புரிதல் இருந்தால், இந்தப் பகுதியைத் தவிர்த்திடுக.
ஜாவா ஒரு உயர் நிலையிலான, இனக்குழு அடிப்படையிலான, பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாகும். இதனுடைய நிரலானது ஒருமுறை மட்டுமே எழுதுக, எங்கு வேண்டுமானாலும் இயக்குக (write once, run anywhere (WORA)) எனும் அடிப்படையில் கட்டமைக்கபட்டுள்ளது, இது 1995 இல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்டது. ஆரக்கிள் 2010 இல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்தினை வாங்கியபின்னர் ஜாவாவின் மேம்படுத்திடும் செயல்முறைக்கு ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்றது.
2010 முதல், ஜாவாவின் மேம்பாடு ஆரக்கிளின் கீழ் விரைவுபடுத்தப்பட்டது, கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறைபுதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. சமீபத்திய பதிப்பு Java 18ஆகும்,
ஜாவாவின் வடிவமைப்பு கொள்கைகள்
மேம்படுத்துநர் கருத்துக்கணிப்புகளின் பகுப்பாய்விற்குச் செல்வதற்கு முன், ஜாவாவிற்கான Oracle இன் பார்வையை பகிர்ந்துகொள்வது அவசியமாகும். ஆரக்கிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜாவாவின் வடிவமைப்புக் கொள்கைகளின் முக்கிய செய்திகள் பின்வருமாறு .
1. எளிய, பொருள் சார்ந்த பிரபலமான கணினிமொழியாக
2. வலுவான பாதுகாப்பான கணினிமொழியாக
3. நடுநிலையிலான கட்டமைப்புடனுமான கையடக்கபதிப்பானதுமான கணினிமொழியாக
4. உயர் செயல்திறன் கொண்ட கணினிமொழியாக
5. ஆணைமாற்றிடுகின்ற, திரிக்கப்பட்ட இயக்கநேர கணினிமொழியாக
ஜாவாஎனும் கணினிமொழி வடிவமைக்கப்பட்டுள்ளது:
இந்த செய்திகள் இந்த கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். . இப்போதைக்கு, மேம்படுத்துநர் கணக்கெடுப்புகளின் பகுப்பாய்வைத் தொடங்குவோம்.
GitHub Octoverse 2021 எனும்அறிவிக்கை
ஒவ்வொரு ஆண்டும், GitHub ஆனது கணினிமேம்படுத்துநர் போக்குகளைப் பற்றிய நுண்ணறிவைப் பெற அதன் சொந்த தளத்தின் ஒரு கணக்கெடுப்பை வெளியிடு கிறது. இது GitHub Octoverse அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. ஜாவா தொடர்பான 2021 எனும்அறிவிக்கையின் முக்கிய நுண்ணறிவுகள் பின்வருமாறு
2014 முதல் 2018 வரை GitHub களஞ்சியங்களில் பயன்படுத்தப்பட்ட முதல் பத்து நிரலாக்க மொழிகளில் ஜாவா இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.தொடர்ந்து ஜாவாஸ்கிரிப்ட் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக இருந்து வருகின்றது.
JetBrains மேம்படுத்துநர் சுற்றுச்சூழல் அமைப்பு 2021 எனும்அறிவிக்கை
JetBrains ஆனது மேம்படுத்துநர் சமூகத்தில் வரவிருக்கும் போக்குகளைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு ஆண்டும் அதன் சொந்த மேம்படுத்துநர் கணக்கெடுப்பை நடத்துகிறது. 2021 ஆம் ஆண்டில், 183 நாடுகளைச் சேர்ந்த 31,743 மேம்படுத்துநர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்த அறிக்கையில் ஜாவா பற்றிய முக்கிய நுண்ணறிவுகள் பின்வருமாறு.
1. ஜாவாஆனது ஐந்தாவது மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாகும்
2. ஒரு செயல்திட்டத்தில் பயன்படுத்தப்படும் முதன்மை நிரலாக்க மொழியின் அடிப்படையில் ஜாவா இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. ஜாவா மேம்படுத்துநர்களில் ஐம்பத்தாறு சதவீதம் பேர் இதனை கொண்டு இணைய பயன்பாடுகளை உருவாக்குகின்றனர்.
4. இணைய பயன்பாடுகளை உருவாக்கும் ஜாவா மேம்படுத்துநர்களில், 77 சதவீதம் பேர் பின்புலத்தில் இணையதளத்தினை உருவாக்குபவர்கள் ஆவார்கள்.
5. தென் கொரியா, சீனா , இந்தியா ஆகிய நாடுகளில் ஜாவா அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Stack Overflow மேம்படுத்துநர் கணக்கெடுப்பு 2021எனும்அறிவிக்கை
Stack Overflowஆனது தொழில்நுட்ப இடத்தில் மிகவும் விரிவான மேம்படுத்துநர் கணக்கெடுப்பை நடத்துகிறது. 2021 ஆம் ஆண்டில், முக்கிய நுண்ணறிவுகளையும் , போக்குகளையும் சேகரிக்க 80,000 இற்குமேற்பட்ட மேம்படுத்துநர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த அறிவிக்கை வழங்கும் ஒரு சிறந்த வசதி என்னவென்றால், ‘அனைத்து பதிலளித்தவர்கள்’ அல்லது ‘தொழில்முறை மேம்படுத்துநர்கள்’ அளவுருக்களின் மூலம் தரவுகளை வடிகட்ட இது அனுமதிக்கிறது. பதிலளிப்பவர்கள் வழங்கிய அனைத்து தரவுகளையும் பார்க்க விருப்பம் உள்ளது அல்லது இன்னும் தொழில்முறை மேம்படுத்துநர்களாக இல்லாத, அதாவது, இதுவரை தொழில் துறையில் பணியாற்றாத பதிலளிப்பவர்களின் தரவை வடிகட்டலாம் என்பதே இதன் பொருளாகும். இந்த கட்டுரையை பொறுத்தவரை, தொழில்முறை மேம்படுத்துநர்களின் பதில்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலிருந்து ஜாவா பற்றிய முக்கிய நுண்ணறிவுகள் பின்வருமாறு.
1. பதிலளித்தவர்களில் 58,031 நபர்களின் கருத்துப்படி ஜாவா மிகவும் பிரபலமான ஏழாவது நிரலாக்க மொழியாகும்
. ஒரு நிரலாக்க மொழியை ‘loving/dreading’ என்ற கேள்விக்கு, 29,162 மேம்படுத்துநர்கள் ஜாவாவைப் பற்றி பின்வருமாறு பதிலளித்தனர்:
அ. 52.8 சதவீதம் பேர் (15,413) ஜாவாவைப் பயன்படுத்துவதற்கு பயப்படுவதாகக் (dread) பதிலளித்தனர்.
ஆ. 47.1 சதவீதம் பேர் (13,749) ஜாவாவைப் பயன்படுத்த விரும்புவதாக (loved) பதிலளித்தனர்.
3. ‘நீங்கள் எந்த நிரலாக்க மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்’ என்ற கேள்விக்கு, 82,914 பதிலளித்தவர்களின் கருத்துப்படி ஜாவா ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
இந்தக் கருத்துக்கணிப்பில் மேலும் சில நுண்ணறிவுகள் உள்ளன, ஜாவா தொடர்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும் .
இதன் தொடர்ச்சியாக முதலில், ஜாவா அடிப்படையிலானSpring Web development framework. சில நுண்ணறிவுகள் பின்வருமாறு.
1. 49,941 பதில்களின்படி Spring எட்டாவது பிரபலமான இணையதள மேம்படுத்துதலுக்கான கட்டமைப்பாக உள்ளது
ஒரு கட்டமைப்பை ‘விரும்புவது/அஞ்சுவது(loving/dreading)’ பற்றிய கேள்விக்கு, 9177 மேம்படுத்துநர்கள் Spring பற்றி பின்வருமாறு பதிலளித்தனர்:
அ. 59.8 சதவீதம் பேர் (5,490) Springஐ விரும்புவதாக(loved) பதிலளித்தனர்.
ஆ 40.1 விழுக்காட்டினர் (3,687) Springஐ ப் பற்றி அஞ்சுவதாக(dread) பதிலளித்தனர்.
3. மேம்படுத்துநர்கள் “கற்க விரும்பும்” கட்டமைப்பின் பட்டியலில் Springஆனது பதினொன்றாவது இடத்தில் உள்ளது.
பதிலளித்த 66,202 பேரில், 3.8 சதவீதம் பேர் மட்டுமே Springஐ கற்பதில் ஆர்வம் காட்டினர்.
இரண்டாவதாக, ஜாவா அடிப்படையிலான Hadoop Big Data மேலாண்மை நூலகம் பற்றிய சில நுண்ணறிவுகள் பின்வருமாறு.
1. 41,760 பதிலளித்தவர்களின் கூற்றுப்படி பயன்படுத்த ‘மிகவும் பிரபலமான நூலகங்களில்’ Hadoop கடைசி இடத்தில் உள்ளது
ஒரு நூலகத்தை ‘விரும்புவது/அஞ்சுவது(loving/dreading)’ பற்றிய கேள்விக்கு, 2,155 மேம்படுத்துநர்கள் Hadoop பற்றி பின்வருமாறு பதிலளித்தனர்:
அ. 54.7 சதவீதம் பேர் (1,179) Hadoopஐ பயன்படுத்த பயப்படுவதாக பதிலளித்தனர்.
ஆ. 45.2 சதவீதம் பேர் (976) Hadoopஐ பயன்படுத்துவதை விரும்புவதாக பதிலளித்தனர்.
3. 58,282 பதிலளித்தவர்களின் கருத்துப்படி, மேம்படுத்துநர்கள் ‘கற்க விரும்பும்’ 13 நூலகங்களின் பட்டியலில் Hadoop பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வில் இருந்து கூடுதலாக கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய நுண்ணறிவுகள் பின்வருமாறு:
1. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 61,216 தொழில்முறை மேம்படுத்துநர்களில், பெரும்பான்மையானவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தொழில் ரீதியாக பணியாற்றி வருகின்றனர்.
2. இந்த கணக்கெடுப்பில் பதிலளித்த 81,641 பேரில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக நிரலாக்க பணி செய்து வருகின்றனர்.
இந்த அறிவிக்கைகள் ஜாவா பற்றி என்ன கூறுகின்றன?
மேலே விவாதிக்கப்பட்ட அறிவிக்கைகளிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை பின்வரும் செய்திகளில் சுருக்கமாகக் கூறலாம்:
1. ஜாவா மேம்படுத்துநர் சமூகத்தில் ஜாவாஎனும் கணினிமொழியானது ஒரு பிரபலமான நிரலாக்க மொழியாகவே தற்போதும் இருந்துவருகின்றது, இருப்பினும் பைதான் , ரஸ்ட் போன்ற நிரலாக்க மொழிகளின் எழுச்சி காரணமாக அதன் புகழ் சிறிது குறைந்துள்ளது.
2. ஜாவா பல தொழில்களில் பயன்படுத்தப்பட்டாலும், அதன் சுற்றுச்சூழல் முதன்மையாக பின்புலத்தில் இணையதள உருவாக்குநர்களைக் கொண்டுள்ளது. ஏனெனில் இதனுடைய Spring Web development framework என்பதின் பிரபலமும் தேவையின் காரணமாகவும் இது பெரும் பகுதி சாத்தியமாகி்ன்றது, இதுமட்டுமே ஜாவா அடிப்படையிலான மிகவும் பிரபலமான இணையதளமேம்படுத்துலின் கட்டமைப்பாகும்.
3. ஜாவாவிற்கு தேவையான வரைச்சட்டகங்களை பற்றி கற்றுக்கொள்வதற்கும் அல்லது ஜாவாவை கற்றுகொள்வதற்கும் அதிகநேரத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்பதே ஜாவா மேம்படுத்துநர் சமூகம் ஜாவாவை கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை இழப்பதற்கும் தயங்குவதற்கும் காரணமாக அமைகின்றது மேலும் Hadoop , Spring ஆகியவற்றினை கற்பதில் அதிக ஆர்வம் இல்லாததற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.
4. பெரும்பாலான மேம்படுத்துநர்கள் தொழில்ரீதியாக குறிமுறைவரிகளை எழுதிடும் ஜாவாவை அச்சுறுத்தும் மொழியாகக் காண்கிறார்கள். இந்த எதிர்ப்பானது ஜாவா அடிப்படையிலான கட்டமைப்புகளுக்கான புள்ளிவிவரங்களிலும் பரவுகிறது. கணிசமான பெரும்பான்மையான Hadoop மேம்படுத்துநர்கள் Hadoopஐப் பயன்படுத்த பயப்படுகிறார்கள்(dread), அதேசமயம் Spring மேம்படுத்துநர்களில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் Springஐ பயன்படுத்த பயப்படுகிறார்கள்(dread).
சுருக்கமாக
எந்த வகையிலும் ஜாவா ஒரு செயலற்ற நிரலாக்க மொழி அன்று. ஆனால் இது நிச்சயமாக இது ஒரு நல்ல நிரலாக்க மொழியாகும், இது எப்போதும் வளர்ந்து வரும் மேம்படுத்துநர் சமூகத்தில் அதன் காலடியைக் கண்டுபிடிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறது. ஜாவாவின் பயன்பாட்டைப் பொறுத்தவரை, ஆரக்கிள் ஒரு சிறந்தபணியைச் செய்துவருகின்றது. ஜாவா பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு திறமையாக பயன்படுத்திகொள்ளமுடியும். இருப்பினும், இந்த பயன்பாட்டின் விலையானது எளிமையற்றது என்பதேயாகும். ஜாவாவின் முதல் வடிவமைப்புக் கொள்கை, அது எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான். துரதிர்ஷ்டவசமாக, மேம்படுத்துநர்கள் இதைப் பயன்படுத்துவது எளிமையானதாகத் தெரியவில்லை.
இந்தக் கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கும் பெரும்பாலான மேம்படுத்துநர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த புதிய தலைமுறை மேம்படுத்துநர்கள் ஜாவாவின் பொருள் சார்ந்த வடிவமைப்பு முறையை கண்டிப்பாக செயல்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். பிரபலமடைந்து வருகின்ற பைத்தானின் கணக்கீட்டு சக்தியின் அபரிமிதமான எழுச்சி, நிரல்களின் சிக்கலான நேரத்தைப் பற்றி பல நிறுவனங்களை வியர்க்காமல் இருக்க அனுமதிக்கிறது, ஜாவா எனும் கணினிமொழிானது ஒரு தீர்வைக் காட்டிலும் அது ஒரு தடையாகவே பார்க்க செய்கின்றது.
பொருள் சார்ந்த நிரலாக்கத்தை கண்டிப்பாக செயல்படுத்தாத பைதான் போன்ற பிற நிரலாக்க மொழிகளின் பிரபலமார காரணம் யாதெனில், அவற்றின் எளிமையான தொடரியல் காரணமாக, சிக்கலான குறிமுறைவரிகளை எழுதுவது எளிதாகின்றது.
எனவே முடிவாக, ஜாவா இன்னும் நிச்சயமாக வழக்கொழிந்து போகவில்லைஎன்று கூறுவேன்.

%d bloggers like this: