மாற்றத்தக்க மடிக்கணினிகள் பிரபலமடைந்து வருவதால், பயனர்களில் பலர் விண்டோவை லினக்ஸ் அடிப்படையிலான டேப்லெட் அனுபவத்துடன் மாற்ற முயல்கின்றனர். இந்த வழிகாட்டியில், லினக்ஸுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவமுள்ள பயனராக இருந்தாலும் சரி. டேப்லெட் கணினிகளுக்கான சில சிறந்த லினக்ஸ் விநியோகங்களை ஆய்வுசெய்திடுவோம்,
2.1 Ubuntu:
உபுண்டு ஏதோவொரு காரணத்திற்காக மிகவும் பிரபலமான லினக்ஸ் இயக்க முறைமையாகும் – இது எந்த சாதனத்திலும் செயல்படுகிறது. அதனால் இது டேப்லெட் கணினிகளுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது, மேலும் உபுண்டுவிற்கான சமூககுழுவானது நாம் ஏதேனும் சிக்கல்களில் மாட்டிகொள்ளும்போது அதிலிருந்து விடுபடுவதற்கான உதவியைக் கண்டுபிடிப்பது எளிது. உபுண்டுவின் சமீபத்திய பதிப்புகள் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை ஆதரவைக் கொண்டுள்ளன, இது கைவிரல்களுடன் அல்லது stylus உடன் பயன்படுத்த வசதியாக உள்ளது. Ubuntuவின் GNOME எளிமையானது கற்றுக் கொள்வதற்கு எளிதானது, எனவே Windows இலிருந்து லினக்ஸிற்கு மாறுவது மென்மையானது. Ubuntu என்பதுநம்முடைய டேப்லெட்டுக்கான ஒரு உறுதியான தேர்வாகும். இதை நிறுவுகைசெய்வது எளிதானது பெட்டிக்கு வெளியே செயல்படுகின்ற திறன்மிக்கது.
2.2 KDE Neon:
அழகியலை, செயல்திறனை விரும்பினால் டேப்லெட் கணினிகளுக்கு KDE Neon ஆனது ஒரு சிறந்த தேர்வாகும். இது நவீன, தனிப்பயனாக்கக்கூடிய KDE Plasma மேசைக்கணினியைக் கொண்டுள்ளது, இது அழகாக காட்சியளிக்கிறது. இது தொடுதிரை கணினிகளை நன்றாக ஆதரிக்கிறது டேப்லெட்களில் நன்றாக இயங்குகிறது. சமீபத்திய KDE Plasma வசதிகளை வழங்கும் போது உபுண்டுவின் நிலையான தளத்தைNeon பயன்படுத்திகொள்கிறது, இது தொடுதிரை சாதனங்களுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது. இது multitouchஎனும்வசதியுடன் கிடைக்கிறது எளிதாக மாற்றக்கூடிய மெய்நிகர்விசைப்பலகையக் கொண்டுள்ளது, இதுடேப்லெட்டுடன் தொடுதிரை பயன்முறையில் தொடர்புகொண்டு மென்மையாக உணரச்செய்கிறது. தொடுதலுடன் சிறப்பாகச் செயல்படுகின்ற அழகான, தனிப்பயனாக்கக்கூடிய மேசைக்கணினிபை விரும்பினால்KDE Neonஆனது அதனை வழங்குகிறது.
2.3 Fedora:
Fedora ஆனது அதிநவீனமானதாக அறியப்படுகிறது, மற்ற முக்கிய லினக்ஸ் வெளியீடுகளுக்கு முன் புதிய வசதிகளை அடிக்கடி வெளியிடப்பெறுகிறது. இதுவே புதிய டேப்லெட் வன்பொருளுக்கு ஏற்றதாக அமைகிறது. அதன் kernelஇன் அடிக்கடியான மேம்படுத்தல்கள் தொடுதிரைகள், styluses , போன்றபிற உள்ளீட்டு சாதனங்கள் நன்கு ஆதரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. எனவே, மாற்றத்தக்க மடிக்கணினி அல்லது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸைப் பயன்படுத்துகின்றோம் என்றால், Fedora ஒரு நல்ல வாய்ப்பாகும். GNOME மேசைக்கணினியுடன், Fedoraவின் பணிநிலையம் சரியான தொடுதிரை ஆதரவை வழங்குகிறது. GNOME இன் குறைந்தபட்ச தளவமைப்பு டேப்லெட்டுகளுக்கு நன்றாக செயல்படுகிறது, மேலும் நமக்கு பிடித்தவைகளின் பட்டியானது பிற பயன்பாடுகளை அணுகுவதை எளிதாக்குகிறது. சமீபத்திய தொழில்நுட்பம் உறுதியான வன்பொருள் ஆதரவுடன் லினக்ஸை வெளியீட்டினைத் தேடுகின்றோம்எனில், Fedora ஒரு சிறந்த வழிமுறையாகும்.
2.4 NixOS:
NixOS ஆனதுஒரு உள்ளமைவு கோப்பைப் பயன்படுத்திகொள்கிறது வேறுபல விநியோகங்களை விட லினக்ஸை வித்தியாசமாக அணுகுகிறது. ஒரு மேம்பட்ட பயனராக இருந்தால், கணினி எவ்வாறு இயங்குகிறது என்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த விரும்பினால் இது மிகவும் நல்லது. இந்த தனிப்பயனாக்கம் குறிப்பாக டேப்லெட்டுகளில் மதிப்புமிக்கதாக இருக்கின்றது. NixOS இன்மூலம், நம்முடைய முழு கணினியையும் ஒரே கோப்பில் (configuration.nix) வரையறுக் கின்றோம்,எனில் அதாவது தொடுதிரை ஆதரவு ,மின்சக்தி நிர்வாகத்தை துல்லியமாக நிர்வகிக்க முடியும். உள்ளமைவின் போது ஏதேனும் தவறு நடந்தால், கணினியின்செயலைத் திரும்பப் பெற NixOS நம்மை அனுமதிக்கிறது, இது எப்போதும் ஒருகூடுதல் நன்மையாகும். நாம்tweaking விரும்பி, முழுமையான கட்டுப்பாட்டை விரும்பினால், NixOS ஆனது டேப்லெட்டுகளுக்கு தனித்துவமான, தனிப்பயனாக்கக்கூடிய Linux அனுபவத்தை வழங்குகிறது. இருப்பினும், நமக்கு லினக்ஸில் அதிக அனுபவம் இல்லை லினக்ஸில் நமக்கு என்ன வேண்டும் என்று ஏற்கனவே தெரியாவிட்டால், இதை பரிந்துரைக்கப்படுவதில்லை.
2.5. Debian:
Debian நிலையானதாகவும் , நம்பகமானதாகவும் அறியப்படுகிறது. டேப்லெட் கணினியில் நம்பகத்தன்மையை மிகவும் மதிக்கின்றோம் என்றால் இது உண்மையில் அதை ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது. நிலையான புதுப்பிப்புகள் அல்லது செய்திகள் உடைந்து போவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை – Debian நீடித்திருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டில் Debianஐ நிறுவுகைசெய்வதற்கு, குறிப்பாக தொடுதிரை ஆதரவுக்காக கைமுறை அமைப்பு தேவைப்படலாம்.அதை இயக்கியவுடன் அது சரியானதாக ஆகின்றது.
2.6. Arch Linux:
கணினியை அடித்தளத்திலிருந்து புதியதாக உருவாக்க விரும்பினால், Arch Linux டேப்லெட்-பாணியிலான கணினிகளுக்கு ஏற்றது. Arch Linux மிகவும் தனிப் பயனாக்கக்கூடியது, தேவையான கட்டுகளுடன் நெறிப்படுத்தப்பட்ட டேப்லெட் அமைவை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது. Arch Linux ஆனது சில குறைபாடு களையும் கொண்டுள்ளது: நிறுவுகை செயல்முறை கைமுறையாக உள்ளது, சில தீவிர உள்ளமைவு தேவைப்படுகிறது, மேலும் சிறிது நேரம் ஆகலாம். Arch Linux சிறந்த நெகிழ்வுத்தன்மையையும் செயல்திறனையும் வழங்குகிறது.
2.7.Pop!_OS:
Pop!_OSஎன்பது உற்பத்தித்திறனிற்காகவும் பயன்பாட்டிற்காகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது பல்வேறுபணிகளுக்கு உகந்த ஒரு தனித்துவமான GNOME-அடிப்படையிலான மேசைக்கணினிபைப் பயன்படுத்திகொள்கிறது, பெரிய திரைகளைக் கொண்ட லினக்ஸின்டேப்லெட்டில்தட்டச்சு பயன்படுத்துகின்றோம் எனில் இது ஒரு பெரியநன்மையாகும். இதன் விண்டோ- tiling எனும்வசதி்பல்வேறு பயன்பாடுகளை அருகருகே நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. Pop!_OS ஆனது GNOME’sஇன் தொடுதிரை ஆதரவையும் மேம்படுத்துகிறது மிகவும் உள்ளுணர்வுடனான தளவமைப்பை வழங்குகிறது, இது டேப்லெட்டில் பணி அல்லது ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. செயல்களைச் செய்ய நமக்கு Linux distro தேவைப்பட்டால், Pop!OS ஒரு மென்மையான, திறமையான அனுபவத்தை வழங்குகிறது.
நமக்கு எந்த லினக்ஸின்வெளியீடு சரியானது?
டேப்லெட்டுக்கான சரியான லினக்ஸ் வெளியீட்டினைத் தேர்ந்தெடுப்பது என்பது வன்பொருள், தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது ஆகும். உபுண்டு அல்லது Pop!OS போன்றவை பயனர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும் அல்லது NixOS அல்லது Arch போன்ற மேம்பட்ட வாய்ப்புகளை விரும்பினாலும், அனைவருக்கும்ஏதாவது தேவையாக உள்ளது.தொடங்குவதற்குத் தயாரானதும், Android டேப்லெட்டில் Linux ஐ எவ்வாறு நிறுவுவது என்பதை அறிந்துகொள்க