தினசரி பணிகளை தானியங்குபடுத்துவதற்கான எளிய பைதான் உரைநிரல்கள்

நிரலாக்க உலகில் பத்தாண்டிற்கும் மேலாக செலவழித்த ஒருவர் என்ற முறையில், மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியக்கமாக்குவது கணிசமான நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
பைதான், அதன் எளிய தொடரியல் ,சக்திவாய்ந்த நூலகங்களுடன், தானியங்கி பணிக்கான உரைநிரல்களை உருவாக்குவதற்கான சிறந்த நிரலாக்க மொழிகளில் ஒன்றாகும். ஒரு நிரலாளராக இருந்தாலும் அல்லது தினசரி பணிகளை எளிதாக்க விரும்பும் சாதாரனபணியாளர்ஒருவராக இருந்தாலும், பைதான்ஆனது இவ்வனைவருக்கும் உதவுகின்ற கருவிகளைக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில், பல்வேறு பணிகளைத் தானியக்கமாக்கப் பயன்படுத்திய 21 பைதான் உரைநிரல்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. இந்த உரைநிரல்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், தங்கள் வேலையில் செயல்திறனை மேம்படுத்தவும் விரும்புகின்ற எவருக்கும் பொருத்தமாயானவைகளாகும்.

1. கோப்புகளை மொத்தமாக மறுபெயரிடுதல்
கோப்புகளை ஒவ்வொன்றாக மறுபெயரிடுவது அதிகநேரத்தை எடுத்துக்கொள்ளும் பணியாக இருக்கலாம், ஆனால் பைதான் மூலம், os தகவமைவைப் பயன்படுத்தி இதை எளிதாக தானியங்குபடுத்தலாம்.
கொடுக்கப்பட்ட வடிவத்தின் அடிப்படையில் ஒரு கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகளை மறுபெயரிடுகின்ற எளிய உரைநிரல் பின்வருமாறு:
import os
def bulk_rename(folder_path, old_name_part, new_name_part):
for filename in os.listdir(folder_path):
if old_name_part in filename:
new_filename = filename.replace(old_name_part, new_name_part)
os.rename(os.path.join(folder_path, filename), os.path.join(folder_path, new_filename))
print(f”Renamed {filename} to {new_filename}”)
folder = ‘/path/to/your/folder’ bulk_rename(folder, ‘old_part’, ‘new_part’)
இந்த உரைநிரல் அவற்றின் பெயர்களில் old_name_part உள்ள கோப்புகளைத் தேடி அதை new_name_part என்று மாற்றுகிறது.

2. கோப்புகளை தானாக பிற்காப்பு நகல் எடுத்தல்
கோப்புகளை வழக்கமாக பிற்காப்பு நகல் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் இந்த பணியை பைத்தானின் shutil எனும் தகவமைப் பயன்படுத்தி எளிதாக தானியங்குபடுத்த முடியும்.
இந்த உரைநிரல் பிற்காப்புநகலின் நோக்கங்களுக்காக எல்லா கோப்புகளையும் ஒரு கோப்பகத்தில் இருந்து மற்றொன்றுக்கு நகலெடுக்கின்றது:
import shutil
import os
def backup_files(src_dir, dest_dir):
if not os.path.exists(dest_dir):
os.makedirs(dest_dir)
for file in os.listdir(src_dir):
full_file_name = os.path.join(src_dir, file)
if os.path.isfile(full_file_name):
shutil.copy(full_file_name, dest_dir)
print(f”Backed up {file} to {dest_dir}”)
source = ‘/path/to/source/directory’ destination = ‘/path/to/destination/directory’ backup_files(source, destination)
cron(லினக்ஸ்) அல்லது Task Scheduler (விண்டோஸ்) போன்ற பணி-திட்டமிடல் கருவிகளைப் பயன்படுத்தி தினசரி இயக்க இந்த உரைநிரலில் திட்டமிடலாம்.

3. இணையத்திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம்செய்தல்
அடிக்கடி இணையத்திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதாகஇருந்தால், aiohttp library ஐப் பயன்படுத்தி இந்தப் பணியைத் தானியங்கியாக செய்யலாம். குறிப்பிட்ட URL களில் இருந்து கோப்புகளைப் பதிவிறக்கம்செய்வதற்கான எளிய உரைநிரல் பின்வருமாறு:
import aiohttp
import asyncio
import aiofiles
async def download_file(url, filename):
async with aiohttp.ClientSession() as session:
async with session.get(url) as response:
async with aiofiles.open(filename, ‘wb’) as file:
await file.write(await response.read())
print(f”Downloaded {filename}”)
urls = {
‘https://example.com/file1.zip’: ‘file1.zip’,
‘https://example.com/file2.zip’: ‘file2.zip’
}
async def download_all():
tasks = [download_file(url, filename) for url, filename in urls.items()]
await asyncio.gather(*tasks)
asyncio.run(download_all())
இந்த உரைநிரல் குறிப்பிட்ட URL இலிருந்து கோப்பைப் பதிவிறக்கம்செய்து நாம் குறிப்பிடுகின்ற குறிப்பிட்ட கோப்புறையில் சேமிக்கிறது.

4. மின்னஞ்சலின்அறிக்கைகளை தானியங்குபடுத்துதல்
மின்னஞ்சலின் அறிக்கைகளை தவறாமல் அனுப்ப வேண்டும் என்றால், smtplib எனும் நூலகத்தைப் பயன்படுத்தி அதை தானியங்குபடுத்தலாம், இது Gmail கணக்கிலிருந்து எளிதாக மின்னஞ்சல்அறிக்கைகளை அனுப்ப அனுமதிக்கிறது:
import smtplib
from email.mime.text import MIMEText
from email.mime.multipart import MIMEMultipart
def send_email(subject, body, to_email):
sender_email = ‘youremail@gmail.com
sender_password = ‘yourpassword’
receiver_email = to_email
msg = MIMEMultipart()
msg[‘From’] = sender_email
msg[‘To’] = receiver_email
msg[‘Subject’] = subject
msg.attach(MIMEText(body, ‘plain’))
try:
server = smtplib.SMTP(‘smtp.gmail.com‘, 587)
server.starttls()
server.login(sender_email, sender_password)
server.sendmail(sender_email, receiver_email, msg.as_string())
server.quit()
print(“Email sent successfully!”)
except Exception as e:
print(f”Failed to send email: {e}”)
subject = ‘Monthly Report’
body = ‘Here is the monthly report.’
send_email(subject, body, ‘receiver@example.com‘)
இந்த உரைநிரல் குறிப்பிட்ட பெறுநருக்கு ஒரு பொருள், உள்ளடக்கம் ஆகியவற்றுடன் கூடிய எளிய மின்னஞ்சலின் வாயிலான அறிக்கையை அனுப்பும். இந்த வழிமுறையைப் பயன்படுத்தினால், ஜிமெயிலில் குறைவான பாதுகாப்பு பயன்பாடுகளை இயக்குவதை உறுதிசெய்துகொள்க.

5. பணி திட்டமிடுபவர் (பணியை தானியங்கியாக்குதல்)
Scheduling tasksஐப் பயன்படுத்தி திட்டமிடல் பணிகளை எளிதாகச் செய்ய முடியும், இது குறிப்பிட்ட நேரங்களில் மின்னஞ்சலை அனுப்புதல் அல்லது பிற்காப்புநகல் செய்தல்உரைநிரலை இயக்குதல் போன்ற பணிகளை தானியக்கமாக்க நம்மை அனுமதிக்கிறது:
import schedule
import time
def job():
print(“Running scheduled task!”)

Schedule the task to run every day at 10:00 AM

schedule.every().day.at(“10:00”).do(job)
while True:
schedule.run_pending()
time.sleep(1)
இந்த உரைநிரல் தொடர்ந்து இயங்கி, இந்த நிலையில், தினமும் காலை 10:00 மணிக்கு என்றவாறு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிகளைத் தூண்டுகின்றது,.

6. தரவு சேகரிப்புக்கான இணையதுணுக்கு
ஒத்திசைவற்ற கோரிக்கையின் நூலகத்திற்குப் பதிலாக ஒத்திசைவற்ற HTTP கோரிக்கைகளுக்கு aiohttp ஐப் பயன்படுத்துவது இணையதுணுக்கை மிகவும் திறமையானதாக்குகின்றது.
இந்த எடுத்துக்காட்டு பல்வேறு பக்கங்களை இணையாக மீட்டெடுக்கிறது.
import aiohttp
import asyncio
from bs4 import BeautifulSoup
async def fetch(session, url):
async with session.get(url) as response:
return await response.text()
async def scrape(urls):
async with aiohttp.ClientSession() as session:
tasks = [fetch(session, url) for url in urls]
html_pages = await asyncio.gather(*tasks)
for html in html_pages:
soup = BeautifulSoup(html, ‘html.parser’)
print(soup.title.string)
urls = [‘https://example.com/page1’, ‘https://example.com/page2’] asyncio.run(scrape(urls))

7. சமூக ஊடக இடுகைகளை தானியங்குபடுத்துதல்
சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்தால்,Tweepy (for Twitter) Instagram-API (Instagram க்கு) போன்ற நூலகங்களைப் பயன்படுத்தி தானாக இடுகையிட நம்மை அனுமதிக்கின்றது.
ஒரு ட்வீட்டை இடுகையிடTweepy நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு பின்வருமாறு:
import tweepy
def tweet(message):
consumer_key = ‘your_consumer_key’
consumer_secret = ‘your_consumer_secret’
access_token = ‘your_access_token’
access_token_secret = ‘your_access_token_secret’
auth = tweepy.OAuthHandler(consumer_key, consumer_secret)
auth.set_access_token(access_token, access_token_secret)
api = tweepy.API(auth)
api.update_status(message)
print(“Tweet sent successfully!”)
tweet(“Hello, world!”)
இந்த உரைநிரல் நம்முடைய Twitter கணக்கிற்கு.“Hello, world!” !” என்ற செய்தியுடன் ஒரு ட்வீட்டை இடுகையிடுகிறது.

8. விலைபட்டியல் உருவாக்குவதை தானியக்கமாக்குதல்
தொடர்ந்து விலைப்பட்டியல்களை உருவாக்கவேண்டிய தேவையிருந்தால், Fpdf போன்ற நூலகங்களைப் பயன்படுத்தி அதை தானியங்குபடுத்தலாம், இது PDF அமைப்புடன் விலைபட்டியல்களை உருவாக்குகின்றது:
from fpdf import FPDF
def create_invoice(client_name, amount):
pdf = FPDF()
pdf.add_page()
pdf.set_font(“Arial”, size=12)
pdf.cell(200, 10, txt=”Invoice”, ln=True, align=’C’)
pdf.cell(200, 10, txt=f”Client: {client_name}”, ln=True, align=’L’)
pdf.cell(200, 10, txt=f”Amount: ${amount}”, ln=True, align=’L’)
pdf.output(f”{client_name}_invoice.pdf”)
print(f”Invoice for {client_name} created successfully!”)
create_invoice(‘John Doe’, 500)
இந்த உரைநிரல் ஒரு எளிய விலைப்பட்டியல் உருவாக்கி அதை PDF ஆக சேமிக்கிறது.

9. இணையதள இயக்க நேரத்தைக் கண்காணித்தல்
requesஎனும் நூலகத்தைப் பயன்படுத்தி இணையதள இயக்க நேரத்தை தானியங்குபடுத்த பைதான் பயன்படுத்திகொள்ளலாம், இதனை கொண்டு இணையதளம் நேரடிஇணைப்பில் உள்ளதா இல்லையா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துகொள்ளலாம்:
import requests
import time
def check_website(url):
try:
response = requests.get(url)
if response.status_code == 200:
print(f”Website {url} is up!”)
else:
print(f”Website {url} returned a status code {response.status_code}”)
except requests.exceptions.RequestException as e:
print(f”Error checking website {url}: {e}”)
url = ‘https://example.com’ while True: check_website(url) time.sleep(3600) # Check
இணையதளம் நேரடிஇணைப்பில் உள்ளதா என்பதை இந்த உரைநிரல் சரிபார்த்து, அந்தநிலைக்கான குறியீட்டை அச்சிடுகிறது.

10. மின்னஞ்சல்களுக்கு தானியங்கியாக பதில்அனுப்புதல்
அடிக்கடி மின்னஞ்சல்களைப் பெறுபவராகஇருந்து அதற்கான, பதிலை தானாக செல்லுமாறு அமைக்க விரும்பினால், மின்னஞ்சல்களுக்கு தானாகவே பதிலளிக்க imaplib , smtplib ஆகிய நூலகங்களைப் பயன்படுத்தி பின்வருமாறு உரைநிரல்களை எழுதிடுக:
import imaplib
import smtplib
from email.mime.text import MIMEText
def auto_reply():

Connect to email server

mail = imaplib.IMAP4_SSL(“imap.gmail.com“)
mail.login(‘youremail@gmail.com‘, ‘yourpassword’)
mail.select(‘inbox’)

Search for unread emails

status, emails = mail.search(None, ‘UNSEEN’)
if status == “OK”:
for email_id in emails[0].split():
status, email_data = mail.fetch(email_id, ‘(RFC822)’)
email_msg = email_data[0][1].decode(‘utf-8’)

Send auto-reply

send_email(“Auto-reply”, “Thank you for your email. I’ll get back to you soon.”, ‘sender@example.com‘)
def send_email(subject, body, to_email):
sender_email = ‘youremail@gmail.com
sender_password = ‘yourpassword’
receiver_email = to_email
msg = MIMEText(body)
msg[‘From’] = sender_email
msg[‘To’] = receiver_email
msg[‘Subject’] = subject
with smtplib.SMTP_SSL(‘smtp.gmail.com‘, 465) as server:
server.login(sender_email, sender_password)
server.sendmail(sender_email, receiver_email, msg.as_string())
auto_reply()
இந்த உரைநிரல் நாம் படிக்காத மின்னஞ்சல்களுக்கும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட செய்தியுடன் தானாகவே பதிலளிக்கிறது.

11. கோப்பினை சுத்தம் செய்தல்
பைதான், கோப்புகளை சுத்தம் செய்வதை தானியக்கமாக்குவதற்கு ஒரு சிறந்த வழியை வழங்குகிறது, குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கோப்பகங்களை பராமரிக்க பழைய கோப்புகளை நீக்க அல்லது நகர்த்துவதற்கு சரியான வழிமுறையை வழங்குகின்றது.
OS , time ஆகியதகவமைவுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நாட்களை விட பழைய கோப்புகளை நீக்கம் செய்கின்றஎளிய உரைநிரல் பின்வருமாறு.
import aiofiles
import os
import asyncio
import time
async def clean_up(folder_path, days_old):
now = time.time()
cutoff_time = now – (days_old * 86400)
for filename in os.listdir(folder_path):
file_path = os.path.join(folder_path, filename)
if os.path.getmtime(file_path) < cutoff_time:
await aiofiles.os.remove(file_path)
print(f”Deleted {filename}”)
folder = ‘/path/to/your/folder’
asyncio.run(clean_up(folder, 30))

12. கடவுச்சொற்களை தானாக உருவாக்கிடுதல்
வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குவது பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகும்ம், மேலும் பைதான் சீரற்ற தகவமைப் பயன்படுத்தி இந்த செயல்முறையை தானியக்கமாக்க உதவுகின்றது.
பாதுகாப்பை மேம்படுத்த எழுத்துக்கள், இலக்கங்கள் , சிறப்பு எழுத்துக்களை உள்ளடக்கியகுறிப்பிட்ட நீளத்தின் சீரற்ற கடவுச்சொற்களை உருவாக்குகின்ற எளிய உரைநிரல் பின்வருமாறு.
import random
import asyncio
import string
async def generate_password(length=12):
characters = string.ascii_letters + string.digits + string.punctuation
password = ”.join(random.choice(characters) for _ in range(length))
return password
async def generate_multiple_passwords(n, length=12):
tasks = [generate_password(length) for _ in range(n)]
passwords = await asyncio.gather(*tasks)
print(passwords)
asyncio.run(generate_multiple_passwords(5))

13. Task Tracker//நினைவூட்டுதல்
பைத்தானில்Task Tracker/அல்லது நினைவூட்டுதல் அமைவை உருவாக்குவது datetime, asyncio ஆகிய தகவமைகளைப் பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம்.
import asyncio
from datetime import datetime
async def task_reminder(task_name, interval):
while True:
print(f”Reminder: {task_name} – {datetime.now()}”)
await asyncio.sleep(interval)
async def main():
await asyncio.gather(
task_reminder(“Drink Water”, 7200), # Remind every 2 hours
task_reminder(“Take a Break”, 3600) # Remind every 1 hour
)
asyncio.run(main())
இந்த உரைநிரல் திட்டமிட்ட நேரத்தில் குறிப்பிட்டபணி பற்றிய நினைவூட்டலை அனுப்புகிறது.

14. தினசரி அறிகைகளை தானாக உருவாக்கிடுதல்
பைத்தானைப் பயன்படுத்தி தினசரி அறிக்கைகளை தானியங்குபடுத்துவதன் மூலம் தரவைச் சேகரித்து அறிக்கையாக வடிவமைத்திடலாம் அதற்கான உரைநிரல் பின்வருமாறு:
import datetime
import aiofiles
import asyncio
async def generate_report(data):
today = datetime.date.today()
filename = f”daily_report_{today}.txt”
async with aiofiles.open(filename, ‘w’) as file:
await file.write(f”Report for {today}\n”)
await file.write(“\n”.join(data))
print(f”Report generated: {filename}”)
data = [“Task 1: Completed”, “Task 2: Pending”, “Task 3: Completed”]
asyncio.run(generate_report(data))

15. கணினி வளங்களைக் கண்காணித்தல்
கணினிஅமைவின்நிருவாகியாக இருந்தால், Psutil நூலகத்தின் உதவியுடன் கணினியின் CPU , நினைவக பயன்பாடு போன்ற ஆதாரங்களைக் கண்காணிக்க பைத்தானின் பின்வருமாறான உரைநிரலைப் பயன்படுத்தலாம்.
import psutil
def monitor_resources():
cpu_usage = psutil.cpu_percent(interval=1)
memory_usage = psutil.virtual_memory().percent
print(f”CPU Usage: {cpu_usage}%”)
print(f”Memory Usage: {memory_usage}%”)
monitor_resources()

16. தொகுப்பான (Batch) படத்தின் அளவை மாற்றுதல்
மொத்தமாக/தொகுப்பாக படங்களை மறுஅளவிட வேண்டும் என்றால், பைதான் அதை Pillow எனும் நூலகத்தின் மூலம் எளிதாக்குகிறது அதற்கான உரைநிரல் பின்வருமாறு.
from PIL import Image
import os
import asyncio
from concurrent.futures import ProcessPoolExecutor
def resize_image(filename, width, height):
img = Image.open(filename)
img = img.resize((width, height))
img.save(f”resized_{filename}”)
return f”Resized {filename}”
async def resize_images(folder_path, width, height):
with ProcessPoolExecutor() as executor:
loop = asyncio.get_event_loop()
tasks = []
for filename in os.listdir(folder_path):
if filename.endswith(‘.jpg’):
tasks.append(loop.run_in_executor(
executor, resize_image, os.path.join(folder_path, filename), width, height))
results = await asyncio.gather(*tasks)
print(results)
folder = ‘/path/to/your/images’
asyncio.run(resize_images(folder, 800, 600))
இந்த உரைநிரல் ஒரு கோப்புறையில் உள்ள அனைத்து .jpg படங்களையும் குறிப்பிட்ட பரிமாணங்களுக்கான அளவில் மாற்றுகிறது.

17. மேகக்கணிக்கு தரவு பிற்காப்புநகலெடுப்பதை தானியங்குபடுத்துதல்
கூகிள் இயக்ககம் போன்ற மேககணினி சேவைகளுக்கு பிற்காப்புநகலெடுப்பதை தானியக்கமாக்குவது pydrive போன்ற நூலகங்களைப் பயன்படுத்தி பைதான் மூலம் சாத்தியமாகும் அதற்கானஉரைநிரல்வரிபின்வருமாறு.
from pydrive.auth import GoogleAuth
from pydrive.drive import GoogleDrive
def backup_to_google_drive(file_path):
gauth = GoogleAuth()
gauth.LocalWebserverAuth()
drive = GoogleDrive(gauth)
file = drive.CreateFile({‘title’: ‘backup_file.txt’})
file.Upload()
print(“Backup uploaded successfully!”)
file = ‘/path/to/your/file.txt’ backup_to_google_drive(file)
18. தினசரி பணிகளின்நினைவூட்டல்களை உருவாக்குதல்
தினசரி பணிகளுகான நினைவூட்டல்களை அமைப்பது timeஎனும் தகவமைவு மூலம் எளிதானது, இது ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் தண்ணீர் குடிக்க நமக்கு நினைவூட்டுகிறது:
import time
def water_reminder():
while True:
print(“Time to drink water!”)
time.sleep(7200) # Remind every 2 hours
water_reminder()

19. எக்செல்லிற்கான தரவுஉள்ளீட்டினை தானியங்குபடுத்துதல்
அடிக்கடி எக்செல்லில் தரவை உள்ளிடுபவராக இருந்தால், இந்த பணியை openpyxl நூலகத்துடன் தானியக்கமாக்க பைதான் உதவுகின்றது அதற்கான உரைநிரல் பின்வருமாறு:
from openpyxl import Workbook
def create_excel(data):
wb = Workbook()
ws = wb.active
for row in data:
ws.append(row)
wb.save(‘data.xlsx’)
print(“Excel file created successfully!”)
data = [
[“Name”, “Age”, “City”],
[“John”, 30, “New York”],
[“Anna”, 25, “London”],
]
create_excel(data)

20. தானியங்கியாக தரவினை சுத்தம்செய்தல்
பெரிய தரவுத்தொகுப்புகளுடன் பணிபுரிந்தால், CSV கோப்பிலிருந்து வெற்று வரிசைகளை அகற்றும் தரவுகளை சுத்தம் செய்யும் பணிகளை பைதான் தானியங்குபடுத்துகின்றது அதற்கான உரைநிரல் பின்வருமாறு:
import csv
def clean_csv(file_path):
with open(file_path, ‘r’) as infile:
reader = csv.reader(infile)
rows = [row for row in reader if any(row)]
with open(file_path, ‘w’, newline=”) as outfile:
writer = csv.writer(outfile)
writer.writerows(rows)
print(“Empty rows removed from CSV”)
file = ‘/path/to/your/data.csv’ clean_csv(file)

21. படங்களிலிருந்து உரையை பிரித்தெடுத்தல்
pytesseract எனும் நூலகத்தைப் பயன்படுத்தி படங்களிலிருந்து உரையைப் பிரித்தெடுக்க பைத்தானைப் பயன்படுத்திகொள்ளலாம், அச்சிடப்பட்ட உள்ளடக்கத்தை எண்ணிம மயமாக்க அல்லது வருடுதல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து உரையைப் பிரித்தெடுக்க இது பயனுள்ளதாக இருக்கும்.
from PIL import Image
import pytesseract
def extract_text_from_image(image_path):

Open the image file

img = Image.open(image_path)

Use pytesseract to extract text

text = pytesseract.image_to_string(img)
return text
image_path = ‘path_to_your_image.jpg’
extracted_text = extract_text_from_image(image_path)
print(“Extracted Text:\n”, extracted_text)

முடிவாக
நம்முடையஅன்றாட பணிகளை தானியக்கமாக்க பைதான் என்ன செய்ய முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இவைகளாகும். அதன் எளிய தொடரியல் சக்திவாய்ந்த நூலகங்கள் ஆகியவற்றின் மூலம், பைதான் நாம் குறிப்பிடுகின்ற எந்தவொரு பணியையும் கையாளுகின்ற திறன்மிக்கது.
கோப்புகளை நிர்வகித்தாலும், மின்னஞ்சல்களை அனுப்பினாலும் அல்லது அறிக்கைகளை உருவாக்கினாலும், பைதான் நம்முடைய பொன்னான நேரத்தைச் சேமித்து, உற்பத்தித்திறனை மேம்படுத்துகி்ன்றது. எனவே, இன்றே பைதான் தானியங்கியாக செயல்படுகின்ற உரைநிரலை பயன்படுத்திடத் தொடங்கிடுக, அது தானாகவே நம்முடைய அன்றாட பணிகளைக் கையாளட்டும் நாம் மற்ற அதிமுக்கியம் வாய்ந்த பணிகளில் நம்முடைய கவணத்தை செலுத்திடலாம்!

%d bloggers like this: