பகுதி 1: நம்முடைய சொந்த செய்யறிவை(AI) நாமேஉருவாக்குதல் – செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும் ஒருஅறிமுகம்

தற்போது செய்யறிவு(AI), இயந்திர கற்றல்(ML) ஆகியவை நம்முடைய வாழ்வையே உருமாற்றுகின்ற தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன, இவை சுகாதாரப் பராமரிப்பு முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து தொழில்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சுய-ஓட்டுநர் மகிழ்வுந்துகளை இயக்குவது, பரிந்துரை அமைப்புகளை இயக்குவது அல்லது சிறந்த மெய்நிகர் உதவியாளர்களை வழங்குவது என எதுவாக இருந்தாலும், செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும்எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. இந்த கட்டுரையானது அவைகளின் கருத்தமைவுகளில் தெளிவை வழங்குவதையும், நம்முடைய சொந்த செய்யறிவு(AI), அமைப்புகளை உருவாக்குவதற்கான நம்முடைய பயணத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்யறிவு(AI) என்றால் என்ன?
கணினியின் மையசெயலகத்தில், செய்யறிவு(AI) என்பது கணினி அறிவியலின் ஒரு கிளையாகும், இது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படுகின்ற பணிகளைச் செய்யக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தப் பணிகளில் சிக்கல்களை தீர்க்கும் திறன், முடிவெடுப்பது, இயற்கை மொழியைப் புரிந்துகொள்வது, வடிவங்களை ஏற்புகைசெய்வது, கலை அல்லது இசை உருவாக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளும் கூட அடங்கும்.
செய்யறிவினை(AI) பின்வருமாறு மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்:
குறுகிய செய்யறிவு(AI): செய்யறிவானது(AI) எந்தவொரு பணியிலும் நிபுணத்துவம் பெற்றது (எ.கா., மெய்நிகர் உதவியாளர்கள், உருவப்பட ஏற்புகை).
பொதுவானசெய்யறிவு(AI): இது மனிதன் செய்யக்கூடிய எந்தவொரு அறிவுசார் பணியையும் (தற்போது தத்துவார்த்த(theoretical)) செய்யக்கூடிய செய்யறிவாகும்(AI).
முதன்மைசெய்யறிவு(AI): மனித நுண்ணறிவை விஞ்சும்வகையிலான தத்துவார்த்த(theoretical) (இன்னும் ஊகத்திலும் தத்துவார்த்திலும்).
இயந்திர கற்றல் (ML) என்றால் என்ன?
இயந்திர கற்றல் (ML) என்பது செய்யறிவின்(AI) துனைக்குழு ஆகும், இது அமைப்புகள் வெளிப்படையாக நிரலாக்க்கத்தினை செய்யப்படாமல் தரவிலிருந்து கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் உதவுகிறது. பணிகளுக்கான கடின குறிமுறைவரிகளின் விதிகளுக்குப் பதிலாக,இயந்திர கற்றலின் (ML) வழிமுறைகள் கணிப்புகள் அல்லது முடிவுகளை எடுக்க தரவுகளில் உள்ள வடிவங்களை பகுப்பாய்வு செய்கின்றன.
இயந்திர கற்றலின் (ML) வகைகள்:
மேற்பார்வையிடப்பட்ட கற்றல்: வழிமுறை அடையாளமிடப்பட்ட தரவிலிருந்து கற்றுக்கொள்கிறது (எ.கா., மின்னஞ்சல்களை குப்பையானவகளா அல்லது இல்லையா என வகைப்படுத்துதல்).
மேற்பார்வையிடப்படாத கற்றல்: வழிமுறை அடையாளமிடப்பட்ட விளைவுகள் இல்லாமல் தரவை ஆராய்கிறது (எ.கா., நடத்தை மூலம் வாடிக்கையாளர்களைக் சேர்த்தல்).
வலுவூட்டிய கற்றல்: வழிமுறை அதன் சூழலுடன் தொடர்புகொள்வதன் மூலம் பரிசோதனை , பிழைகண்டறிதல் ஆகியவற்றின மூலம் கற்றுக்கொள்கிறது (எ.கா., AlphaGo போன்ற விளையாட்டு விளையாடும் செய்யறிவு(AI).
செய்யறிவிற்கும்(AI) .இயந்திர கற்றலிற்கும் (ML) இடையிலான வேறுபாடு என்ன?
செய்யறிவு(AI) என்பது மனிதனைப் போன்ற நுண்ணறிவுடனான அமைப்புகளை உருவாக்குவதற்கான பரந்த கருத்தமைவாக இருந்தாலும், இயந்திர கற்றலானது (ML) குறிப்பாக அமைப்புகளின் தரவிலிருந்து கற்றுக்கொள்ள உதவுவதில் அதிககவனம் செலுத்துகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில்:
செய்யறிவு(AI) என்பது இலக்கு (நுண்ணறிவு) ஆகும்., இயந்திர கற்றல் (ML) என்பது வழிமுறை (தரவிலிருந்து கற்றல்) ஆகும்.
செய்யறிவு(AI) .இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றினை நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
அதிக தேவை: செய்யறிவு(AI) / இயந்திர கற்றல் (ML) நிபுணர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் விரும்பப்படுபவர்களில் ஒருவராகும் .
நடப்பு உலக பயன்பாடுகள்: சலிப்பூட்டும் பணிகளை தானியக்கமாக்குவது முதல் புதுமையான கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவது வரை, செய்யறிவு(AI) / இயந்திர கற்றல்(ML) திறன்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தீர்வுகளை உருவாக்கிடுவதற்கான அதிகாரம் நமக்கு அளிக்கின்றன.
படைப்பாற்றலும் சிக்கலிற்கான தீர்வும்: இந்த தொழில்நுட்பங்கள் சுகாதாரம், நிதி, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு துறைகளில் சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைத் திறக்கின்றன.
செய்யறிவின்(AI)/ இயந்திர கற்றலின் (ML) நடப்பு உலக பயன்பாடுகள்
சுகாதாரம்: நோய்களைக் கண்டறிவதற்கான செய்யறிவு(AI), மருந்து கண்டுபிடிப்பு, தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் ஆகியனவாகும்.
நிதி: மோசடி கண்டறிதல், பங்குச் சந்தை கணிப்புகள் , கடன்வாங்குகின்ற திறனை மதிப்பிடுதல்(credit rating).
சில்லறை விற்பனை: பரிந்துரை அமைப்புகள், சரக்கு மேலாண்மை, வாடிக்கையாளர் பிரிவு ஆகியன.
பொழுதுபோக்கு: Netflix அல்லது Spotify போன்ற தளங்களில் உள்ளடக்க பரிந்துரைகள்.
போக்குவரத்து: சுய-ஓட்டுநர் மகிழ்வுந்துகள் , போக்குவரத்திற்கான பாதையின் உகப்பாக்கம் செய்தல்.
இயற்கை மொழி செயலாக்கம்: Chatbots, மெய்நிகர் உதவியாளர்கள், மொழிபெயர்ப்பு கருவிகள் ஆகியன.
இந்த கட்டுரை தொடருக்கான பொதுவான ஒட்டுமொத்தவரைபடம்
இந்தத் தொடர் செய்யறிவின்(AI)/ இயந்திர கற்றலின் (ML) அடிப்படைகளைப் புரிந்துகொள்வதிலிருந்து நம்முடைய சொந்த செய்யறிவின்(AI) செயல் திட்டங்களை உருவாக்குவது வரை படிப்படியான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும். வரவிருக்கும் செய்திகளின் முன்னோட்டம் பின்வருமாறு:
சூழலை அமைத்தல் – பைதான், அத்தியாவசிய நூலகங்களையும் கருவிகளையும் நிறுவுகைசெய்தல்.
இயந்திர கற்றலின் (ML) வழிமுறைகள் – மேற்பார்வையிடப்பட்ட கற்றல், மேற்பார்வைசெய்யப்படாத கற்றல், வலுவூட்டல் கற்றல் ஆகியவற்றில்மூழ்குதல்.
நரம்பியல்போன்ற வலைபின்னல்கள் – ஆழ்கற்றலின் அடித்தளத்தை உருவாக்குதல்.
NLP , கணினியின் காட்சி – உரை ,உருவப்படத் தரவுகளுக்கு செய்யறிவைப்(செய்யறிவு(AI)) பயன்படுத்துதல்.
மாதிரி பயன்பாடு – பயிற்சி பெற்ற மாதிரிகளை நடப்பு உலக பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல்.
மேம்பட்ட தலைப்புகள் – உருவாக்குகின்ற மாதிரிகள், நெறிமுறைகள் , எதிர்கால போக்குகள்.
நாம் தொடங்க வேண்டிய பணி பின்வருமாறு
அடிப்படை நிரலாக்கத் திறன்கள்: பைத்தானுடனான அறிமுகம் உதவியாக இருக்கும் ஆனால் அது கட்டாயமன்று.
ஆர்வம்: ஆய்வுசெய்திட, கற்றுக்கொள்ள, உருவாக்க வேண்டும் என்ற அவா மிக முக்கியமான தேவையாகும்.
இந்தத் தொடரின் முடிவில், நாம் கோட்பாட்டைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல்,நம்முடைய சொந்த செய்யறிவின்(AI) தீர்வுகளை உருவாக்கத் தேவையான நடைமுறைத் திறன்களையும் பெற்றிடுவோம். வாருங்கள் இந்த அற்புதமான பயணத்தை இப்போதுத் தொடங்குவோம்! ———–தொடரும்