MUIbase என சுருக்கமாக அழைக்கப்பெறும் பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுதளம்(Magic data BASE with User Interface )என்பது வரைகலை பயனர் இடை முகத்துடனான, நிரலாக்கம் செய்து பயன்படுத்திகொள்ளக்கூடிய தரவுத்தளமாகும்.
மேலும் MUIbase ஆனது ஒரு விரைவான நெகிழ்வான தரவுத்தள அமைப்பாகும். வசதியான, சக்திவாய்ந்த முறையில் தரவை நிர்வகிக்க விரும்பும் மேம்பட்ட மேசைக்கணினி பயனர்களை இது இலக்காகக் கொண்டது. இந்தMUIbase என்பதை கொண்டு எந்த வகையான தரவையும் நிர்வகிக்க முடியும், எ.கா. முகவரிகள், உரைவடிவிலான தொடர்கள், திரைப்படங்கள், புகைப்படத் தொகுப்புகள், குடும்பத் தலைமுறை மரம், தனிநபரின் வரவு, செலவு விவரங்கள் போன்றவை.
MUIbase இன் சக்தியானது அதன் தெளிவான, சக்திவாய்ந்த வரைகலை பயனர் இடைமுகம் அதன் நிரலாக்க திறன் ஆகியவற்றில் உள்ளது. MUIbase எனும் நிரலாக்கமானது பல்வேறு வழிகளில் தரவைச் செயலாக்க நம்மை அனுமதிக்கிறது, எ.கா. பயனர் உள்ளீடு, அறிவிக்கைகளின் உருவாக்கம், தரவு பதிவிறக்கம் பதிவேற்றம் போன்றவற்றின் மீதான தானியங்கி கணக்கீடுகள். எடுத்துக்காட்டாக இந்த MUIbaseஐ மொத்த வருமானம் அல்லது CD இல் பதிவுசெய்யப்பட்ட மொத்த நேரத்தைக் கணக்கிடுவதற்கும் அல்லது தானாக தொடரை உருவாக்கி அச்சிடுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு கடிதங்களை அனுப்பிடுவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
முக்கிய வசதிவாய்ப்புகள்
MUIbase ஒரேயொருகணினியில் அல்லது வெவ்வேறு கணினிகளில் இயங்கும் பல நிகழ்வுகளிலிருந்து செயல்திட்டத்திற்கான பகிரப்பட்ட அணுகலைகொண்டது.
வரம்பற்ற செயல்திட்டங்களை, அட்டவணைகளை, பண்புக்கூறுகளை, பதிவுகளை. கொண்டது
இது பண்புக்கூறுகளின் வகையிலான சரம், நினைவூட்டல்(பல வரி உரை), முழு எண், உண்மையான தேதி, நேரம், தொகுப்பு, தேர்வு (பல உருப்படிகளில் ஒரு உருப்படி), குறிப்பு (மற்றொரு அட்டவணையின் பதிவைக் குறிப்பிட எளிதான வழி), பொத்தான் ( MUIbase நிரல்களைத் தொடங்குவதற்கு), மெய்நிகர்செயல்பாடு (இயங்கும்போது மதிப்பைக் கணக்கிடுதல்)ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது
இதனை கொண்டு சரவகைகள், கோப்புகள் , எழுத்துருக்களின் பட்டியல்களையும் நிர்வகிக்கலாம். ஒரு சரம் என்பது வரைகலை பயனர் இடைமுகத்தில் காட்டப்படும் வெளிப்புற உருவப்படத்தைக் குறிக்கும்.
பதிவுகளின் மாறுதலை பதிவேற்றம்செய்தல். தேவையில்லாத பதிவுகள் நினைவகத்திலிருந்து நீக்கம்செய்தல் (எ.கா. நினைவகம் குறைவாக இருக்கும்போது). ஆகியவற்றினை செய்கின்றது
இது சிறந்த நிரலாக்கத்திறன் கொண்டுள்ளது . எளிமையான சக்திவாய்ந்த MUIbase நிரலாக்க மொழி மூலம் சிக்கலான பணிகளைச் செயல்படுத்த முடியும்.மேலும் , தரவை விரைவாக மீட்டெடுப்பதற்கான வசதியான வழியாகவுள்ள இதனுடைய ,எங்கிருந்தும் தேர்வுசெய் என்ற வினவலை செயல்படுத்தி பயனபெறலாம்.
பண்புக்கூறுகளின் சேர்க்கைகள் மூலம் பதிவுகளை வரிசைப்படுத்துதல் நெகிழ்வான , சக்திவாய்ந்த தேடுதல் , வடிகட்டிடுதல். ஆகியவசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது
இதனுடைய வினவல் பதிப்பாளரானது எங்கிருந்தும் வினவல்களை உள்ளிடவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.கூடுதலாக வினவல்களைச் சேமிக்கவம் , முடிவுகளை அச்சிடவும் அனுமதிக்கிறது..
கணினி பதிவு அட்டவணையில் மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகளின் பதிவு (பதிவுகளைச் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல்).வசதிகொண்டது
HTML ,PDF இல் பயனர் நிரலாக்க கையேடு உட்பட முழு ஆவணங்களும் இதில் உள்ளன
இது(MUIbase) விண்டோ, மேக், லினக்ஸ் , ஆகியஅனைத்து இயக்க முறைமைைகளிலும் செயல்படும் திறனமிக்கது. Source forge செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இதனுடைய மூலக் குறிமுறைவரிகள் கிடைக்கின்றன
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (GPLv3)எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்றது .மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் muibase.sourceforge.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க