புதிய ஆண்ட்ராய்டு கைபேசியில் எப்போதும் முதலில் நிறுவுகை செய்திடவிரும்புகின்றகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்( apps)

By | November 16, 2025

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியை கட்டமைப்பதுஎனும் செயல் நமக்கு எப்போதுமே உற்சாகமாக இருக்கும், ஆனால் துவக்க அமைப்பை முடித்தவுடன், நமக்குப் பிடித்த பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது பொதுவாக அடுத்த படிமுறையாகும். இந்த பயன்பாடுகள்(apps) அடிப்படையில் நம்முடைய முழு அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைகின்றன. stock apps என்பதுஅடிப்படைகளை உள்ளடக்கி யிருந்தாலும், உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும், தனியுரிமையை மேம்படுத்தவும், பயன்பாட்டினை மேம்படுத்தவும் கூடிய கட்டற்றகட்டணமற்ற கருவிகளுக்கு பஞ்சமில்லை.
வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவது , கோப்புகளைப் பகிர்வது முதல் படத்தில் திருத்தத்தை கையாளுதல், மறைக்கப்பட்ட சாதன வசதிவாய்ப்புகளைக் கண்டறிதல் வரை, இருக்க வேண்டியவை மட்டுமல்லாது – அவை அவசியமானவைகளுமாகும். அவை தொடர்ந்து ஆண்ட்ராய்டு அனுபவத்தை சிறந்ததாகவும், விரைவானதாகவும், திறமையாகவும் ஆக்குகின்றன.
Image Toolbox – Batch editingபணியை எளிதாக்குதல்
பெரும்பாலான ஆண்ட்ராய்டு கைபேசிகள் ஏற்கனவே கூகிள் புகைப்படங்கள் அல்லது உள்ளமைக்கப்பட்ட Gallery app உடன் வருகின்றன, மேலும் அவை செதுக்குதல், சுழற்றிஅமைத்தல் அல்லது வடிப்பான்களைச் சேர்ப்பது போன்ற அடிப்படை திருத்துதல் செயலில் ஒரு சிறந்த பணியைச் செய்கின்றன. ஆனால், மின்னஞ்சலுக்கு ஏற்றவாறு படத்தை சிறியதாக மாற்றுவது, சேமிப்பிடத்தைச் சேமிக்க புகைப்படத்தை சுருக்குவது அல்லது படத்தை வேறு வடிவத்திற்கு மாற்றுவது போன்ற நடைமுறைக்குரிய ஏதாவது தேவைப்படும்போது என்ன செய்வது?
அவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் Image Toolbox எனும் பயன்பாடாகும்இது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற பயன்பாடாகும், இது புகைப்படங்களுக்கு சுவிஸ் இராணுவ கத்தியைப் போன்று செயல்படுகிறது. அடிப்படைத் திருத்தங்களுக்கு அப்பால், தனியுரிமைக்காக உயர்மட்டதரவினை அகற்றவும், இணையத்தில் பகிர்வுக்கான நீர்வரிக்குறிகளைச் சேர்க்கவும் அல்லது படங்களை ஒன்றாக படத்தொகுப்புகளாக இணைக்கவும் இது அனுமதிக்கிறது. இதில் வடிப்பான்களும் அடங்கும், ஆனால் அதன் உண்மையான பலம் அதன் தொகுப்பான திருத்துதல் வசதியில் உள்ளது, இது டஜன் கணக்கான புகைப்படங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் மாற்றங்களைப் பயன்படுத்தஅனுமதிக்கிறது. படங்களுடன் தொடர்ந்து பணிபுரியும் எவருக்கும், இந்தபயன்பாடு இன்றியமையாததாக உணர்கிறது.
Activity Launcher – அன்றாட பணிகளுக்கு குறுக்குவழிகளை உருவாக்குதல்
Activity Launcher என்பது நம்முடைய கைபேசியை புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் உணர வைக்கும் குறைத்து மதிப்பிடப்பட்ட பயன்பாடுகளில் ஒன்றாகும். குறிப்பிட்ட பட்டிகள், மறைக்கப்பட்ட பயன்பாட்டு இயல்புகளுக்கான குறுக்குவழிகளை உருவாக்க இது அனுமதிக்கிறது, எனவே முடிவற்ற அமைப்புகளின் திரைகளின் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, நமக்குத் தேவையானதை மட்டும்நேரடியாகப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக, கைபேசியில் அறிவிப்பு வரலாற்றை அடிக்கடி சரிபார்த்திடும்போது. பொதுவாக, Settings > Notifications > Advanced Settings > Notification History என்றவாறு செல்ல வேண்டும். அது ஒவ்வொரு முறையும் நான்கு முறை தட்ட வேண்டும். இந்த பயன்பாட்டின் மூலம், முகப்புத் திரையில் ஒரு குறுக்குவழியை வைத்து, ஒரே தட்டலில் அதை அணுக முடியும்.
மின்கலன் பயன்பாட்டு புள்ளிவிவரங்கள், மேம்படுத்துநர் வாய்ப்புகள் அல்லது பயன்பாடுகளுக்குள் மறைக்கப்பட்ட செயலிகளுக்கு குறுக்குவழிகளை உருவாக்கலாம். செயல்பாட்டு துவக்கிக்குள் ஒரு பயன்பாட்டைத் தட்டவும், கிடைக்கக்கூடிய செயல்பாடுகளை உலாவரவும் செய்திடலாம், நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும். அடையாளசீட்டுகள் கொஞ்சம் இரகசியமாகத் தெரிந்தால், துவக்க செயல்பாட்டு வாய்ப்பினைப் பயன்படுத்தி அவற்றை விரைவாக பரிசோதிக்கலாம்.
MacroDroid -வாழ்க்கையை எளிதாக்க மேக்ரோக்களைப் பயன்படுத்திடுக.
கைபேசியை உடனடியாக திறன்மிக்கதாக உணர வைக்கும் ஒரு பயன்பாடு இருந்தால், அது MacroDroid ஆகும். “if this, then that” என்ற எளிய விதிகளை அமைத்து, மேக்ரோக்கள் என்று அழைக்கப்படும் மற்றவற்றை கைபேசி கையாள அனுமதிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, படபிடிப்பு பயன்பாட்டைத் திறக்கும்போது அறிவிப்புகளை தானாகவே நிறுத்தம்செய்திட, படுக்கை நேரத்தில் விழிப்பூட்டல்களை அமைதிப்படுத்த அல்லது ஹெட்ஃபோன்களை செருகும்போதெல்லாம் இசை பயன்பாட்டைத் தொடங்க இதை அமைக்கலாம்.
MacroDroid ஐ மிகவும் பயனர் நட்பாக மாற்றுவது என்னவென்றால், மற்ற தானியங்கி பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு அணுகக்கூடியது என்பதுதான். இடைமுகம் படிப்படியாக நமக்கு வழிகாட்டுகிறது: ஒரு தூண்டுதலைத் தேர்வுசெய்யவும், ஒரு செயலைத் தேர்ந்தெடுக்கவும், நாம் முடித்துவிட்டோம். நாம்ஆலோசனைகளை விரும்பினால் அல்லது புதிதாகத் தொடங்க விரும்பவில்லை என்றால் Templatesஎனும் தாவலில் சமூககுழுக்கள் பகிரும் மேக்ரோக்களின் பெரிய நூலகம் கூட உள்ளது. பயன்பாடு இனி முற்றிலும் கட்டணமற்றம் இல்லை என்றாலும், விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் அதை எந்த செலவும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
LocalSend – வேகமான, குறுக்கு-தள கோப்பு பகிர்வு
மற்ற Android கைபேசிகளுக்கும் Windows PC க்கும் கோப்புகளை அனுப்புவதற்கு Android ஏற்கனவே Quick Share எனும் பயன்பாட்டினைக் கொண்டிருந்தாலும், LocalSend என்பது அனைத்து கோப்பு பகிர்வு தலைவலிகளையும் தீர்க்கும் ஒரு கட்டற்ற பயன்பாடாகும். இது முற்றிலும் கட்டணமற்றது Windows, Mac, Linux, iOS , Google TV உட்பட அனைத்து முக்கிய தளங்களிலும் செயல்படுகிறது. வைத்திருக்கும் ஒவ்வொரு சாதனத்திலும் இதை நிறுவுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொள்ளலாம்.
புகைப்படம், கானொளிகாட்சி அல்லது ஆவணத்தைப் பகிர்வது மிகவும் எளிமையானது. கோப்பைத் தேர்ந்தெடுத்து, அதை அனுப்ப விரும்பும் அருகிலுள்ள சாதனத்தைத் தேர்வுசெய்தால் போதும், பெறுநர் ஏற்றுக்கொள்ள தட்டுவார். கோப்பு உடனடியாகத் தோன்றும். இது Quick Share அல்லது AirDrop போல உணரச்செய்கிறது, ஆனால் ஒரு வணிகபெயரின் சுற்றுச்சூழல் அமைப்பில் பூட்டாமல்உள்ளது.
F-Droid – கட்டற்ற பயன்பாடுகளைக் கண்டறிதல்
கட்டற்ற பயன்பாடுகளை விரும்பும் Android பயனர்களுக்கு F-Droid ஒரு மறைக்கப்பட்ட புதையல் பெட்டி போன்றதாகும். Google Play Store போன்றில்லாமல், தனியுரிமைக்கு ஏற்ற கட்டற்ற பயன்பாடுகளை இது தனிப்பட்டதாக பட்டியலிடுகிறது. Play Store இல் காணாத மறைக்கப்பட்ட இரத்தினங்களைக் கண்டறிய இது ஒரு அருமையான இடமாகும். URLCheck, KeePassDX, Open Camera,போன்ற பல நமக்குப் பிடித்த சில கட்டற்ற பயன்பாடுகளை நிறுவுகைசெய்திடவும் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்திகொள்ளலாம்.
தளத்தில் உள்ள அனைத்தும் தனியுரிமைக்காக சரிபார்க்கப்படுகின்றன, எனவே பதிவிறக்கங்களில் தேவையற்ற டிராக்கர்கள் தொகுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளாம். பிரபலமான பயன்பாடுகளைத் தாண்டி, F-Droid பயன்பாடுகளை ஆராய்வதை விரும்பும் எவருக்கும் இது அவசியம் தேவையாகும்.
சரியான பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது Android கைபேசியை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை முற்றிலுமாக மாற்றும். தேர்வுசெய்யும் பயன்பாடுகள் சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்தது என்றாலும், மேலே உள்ள பெரும்பாலான வாய்ப்புகள் கூடுதல் செலவு இல்லாமல். உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அன்றாட பணிகளை எளிதாக்கவும், தனியுரிமையை மேம்படுத்தவும் உதவும் -எனவே, அவற்றை ஒரு முறை முயற்சித்துப் பார்த்திடுக.

Leave a Reply