விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள்

விண்டோவை பயன்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டோம், ஆனால் லினக்ஸை பயன்படுத்துவது பயம் ஏற்படுகின்றது எனில் சில லினக்ஸ் வெளியீடுகள் விண்டோவைப் போல தோற்றமளித்து, பயனாளரின் நட்புடன் கூடிய முனைமகட்டணமற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.எனவே எளிதாக இந்த லினக்ஸ் வெளியீட்டினை பயன்படுத்தி கொள்க. விண்டோவை போன்ற அனுபவத்தை வழங்கும் ஐந்து லினக்ஸ் விநியோகங்கள் பின்வருமாறு, !

1 Q4OS: லினக்ஸ்வெளியீடுகளில் ஒரு மறைக்கப்பட்ட இரத்தினம் போன்றது

Q4OS என்பது டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் வெளியீடு ஆகும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை ,ஆகியவற்றுடன் விண்டோ போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இது மேசைக்கணினி சூழலின்-KDE Plasma, இலகுரக Trinity ஆகிய இரண்டு முக்கிய பதிப்புகளில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த வெளியீடு ஒரு தனித்துவமான இரட்டை மேசைக்கணினி வாய்ப்பினை ஆதரிக்கிறது, இது Trinity , -KDE Plasma ஆகிய இரண்டையும் அமைக்க அனுமதிக்கிறது அல்லது அந்த செயலில் ஏதேனும் இரண்டுமேசைக்கணினி சூழல்கள் அமைக்க அனுமதிக்கிறது அவற்றுக்கிடையே தடையின்றி மாறவும்அனுமதிக்கின்றது.

Trinity னது வெறும் 350 மெகா ஹெர்ட்ஸ் CPU , 256 MB RAM இல் இயங்குவதற்கு உகந்ததாக உள்ளது, இது பழைய , பலவீனமான வன்பொருளுக்கு ஏற்றதாக அமைகிறது. இது விண்டோ எக்ஸ்பியை நினைவூட்டும் வகையில் மிகவும் பழக்கமான விண்டோவின் பாணி அழகியலைக் கொண்டுவருகிறது. இதற்கு நேர்மாறாக, Plasma சற்று அதிகமாகக் கோருகிறது, குறைந்தபட்சம் 1 GHz CPU , 1 GB RAM தேவைப்படுகிறது. இது உள்ளுணர்வுடனான விண்டோவின்பாணி அமைப்பைப் பின்பற்றுகிறது விரிவான தனிப்பயனாக்குதல் வாய்ப்புகளை வழங்குகிறது, இது நவீன வன்பொருளுக்கான வலுவான மாற்றாக அமைகிறது.

Q4OSஆனது அதன் விண்டோவின் நிறுவியின் மூலம் நிறுவுகைசெய்திடுகின்ற பணியை எளிதாக்குகிறது. அதன் EXE கோப்பை இயக்கி, அதுகூறுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றிடுக, உடன் விண்டோஸ் , Q4OS உடன் கணினியின் இரட்டை தொடக்க இயக்க அமைவைப் பெறலாம்.

எச்சரிக்கை: இரட்டை தொடக்க இயக்க அமைவாக செய்யும் போது, ​​குறிப்பாக Windows 10 அல்லது அதற்குப் பிறகு, இரண்டு இயக்க முறைமைகளையும் ஒரே இயக்கிக்கு பதிலாக தனித்தனி இயக்கிகளில் வைக்க முயற்சித்திடுக.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கான இணையதளமுகவரி q4os.org/downloads1.html ஆகும்

2 Zorin OS: அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் சிறிதுவித்தியாசமானது

Zorin OS அனைவருக்கும் மிகவும் பிடித்த விண்டோஸ் போன்ற வெளியீடாகும். இது விண்டோவின் தோற்றத்தை மாற்றியமைக்க முயற்சிக்கவில்லை. மாறாக, இது விண்டோ தளவமைப்பு பாணியை மீண்டும் உருவாக்குகிறது, எனவே எல்லாம் எங்குள்ளது நம்முடைய பணியை எவ்வாறு செய்வது என்பது நமக்குத் தெரியும். இருப்பினும், வடிவமைப்பு, தீம் ஆகியவை மிகவும் இலகுவாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதால், ஜோரினுக்கு அதன் சொந்த ஆளுமையை அளிக்கிறது.

இந்த வெளியீடு தனிப்பயனாக்கத்தை அதன் முன்னணியில் வைக்கிறது. Windows XP அல்லது Windows 7 போன்ற பல்வேறு தளவமைப்பு மாறுபாடுகளுக்கு இடையில் மாறுவதற்கு Zorin Appearance Appஐ பெறலாம்.Windows 11 போன்ற பாணியை கட்டண பதிப்பான Zorin OS Pro உடன் மேலும் பல வசதிகளுடன் பெறலாம்.

hood என்பதன் கீழ், உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு (LTS) வெளியீடுகளால் Zorin OS இயங்குகிறது. இது சிறந்த மென்பொருள் கிடைக்கும் தன்மையுடன் நிலையான உறுதியான அடித்தளத்தை உறுதி செய்கிறது. , இது இயல்பாகவே விண்டோஸ் பயன்பாட்டு ஆதரவுடன் வருகிறது. இதன் தளத்தில் பலவிதமான Windows பயன்பாடுகளை (சில விதிவிலக்குகளுடன்) இயக்க நமக்கு உதவ, இது Wine , PlayOnLinuxஆகியவற்றினைப் பயன்படுத்திகொள்கிறது.

ஒட்டுமொத்தமாக, இது மிகவும் பயனர் நட்புடனான வெளியீடுகளில் ஒன்றாகும், இது புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் லினக்ஸ் உலகத்தைப் பற்றிய உணர்வைப் பெற நம்மை அனுமதிக்கிறது. கிட்டத்தட்ட நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் வரைகலை பயன்பாடுகள் மூலம் இதில் நிறைவேற்றலாம்—முனைம கட்டளைவரி எதுவும் தேவையில்லை.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கான இணையதளமுகவரி zorin.com/os/download/ ஆகும்

3 லினக்ஸ் Mint: இது மிகவும் பரிந்துரைக்கப்பட்ட வாய்ப்பாகும்

லினக்ஸில் புதியவர்களுக்கு, குறிப்பாக விண்டோ பயனர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட வெளியீடாக, லினக்ஸ் Mintஆனது People’s Choice எனும்விருதை வென்றுள்ளது. இது விண்டோ 8க்கு முந்தைய சகாப்தத்தின் சாரத்தை அற்புதமாக படம்பிடித்து, ஒரு சின்னமான பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

Mintஐ பதிவிறக்கம் செய்திட,நமக்கு Cinnamon, MATE, Xfce ஆகிய மூன்று பதிப்புகளின் வாய்ப்புகள் உள்ளன— . இந்த வகைகளில் Cinnamon எனும் தேர்வு, விண்டோ 7 இல் நவீனமயமாக்கப்பட்டதை வழங்குகிறது, இது கற்றல் வளைவு இல்லாமல் உடனடியாக பணி செய்ய அனுமதிக்கிறது. MATE ஆனது Windows XPக்கு மிகவும் ஒத்ததாகும். Xfce மிகவும் காலாவதியான வரைகலை இடைமுகத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த பதிப்பு மிகவும் இலகுவானது பழைய வன்பொருளைப் புதுப்பிக்க ஏற்றது.

முன்கூட்டியே நிறுவுகைசெய்யப்பட்ட பயன்பாடுகள், எழுத்துருக்கள், பல்லூடக codecs ஆகிய ,நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு Mintஆனது பெட்டியின் வெளியே செயல்படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதியமேசைக் கணினியை எவ்வாறு அமைப்பது என்பது குறித்த நீண்ட பயிற்சிகளை பெற வேண்டிய அவசியமில்லாத ஒரு செருகியவுடன் செயல்படுத்திடுகின்ற அனுபவமாகவும்.திகழ்கின்றது முனைமத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் நமக்குவொரு வாய்ப்பான வெளியீடுகளில் இதுவும் ஒன்றாகும். அனைத்து முக்கியமான பணிகளையும் கையாள வரைகலை பயன்பாடுகளின் வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் முழுமையாகப் பெறலாம்.

மீண்டும், இது உபுண்டு அடிப்படையிலான விநியோகமாகும், ஆனால் இது உபுண்டுவின் சிறந்ததை மட்டுமே வைத்திருக்கிறது அதில் சர்ச்சைக்குரியசெய்திகளை அறவே நீக்குகிறது. எடுத்துக்காட்டாக, Mintஇல் Snaps எதுவும் இல்லை—இயல்புநிலையாக நம்மிடம் Flatpaks உள்ளது. Telemetry உம் முடக்கப்பட்டுள்ளது, இது மிகவும் பயனர் தனியுரிமையை உறுதி செய்கிறது. இருப்பினும், உபுண்டுவின் LTS வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இது rock-solid, super stable,ஆகிய உபுண்டுவின் களஞ்சியத்தில் கிடைக்கும் பயன்பாடுகளின் வளங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கான இணையதளமுகவரி www.linuxmint.com/download.php ஆகும்

4 லினக்ஸ் Lite: பழைய வன்பொருளுக்கு விண்டோவை போன்றது

புதியவர்களுக்காக உகந்ததாக இருக்கும், விண்டோ போன்று தோற்றமளிக்கும், மேலும் பத்தாண்டுகள் பழமையான வன்பொருளில் சிறப்பாக இயங்கும் லினக்ஸ் வெளியீட்டினை விரும்பினால், Linux Lite நமக்காக உருவாக்கப்பட்டது. அது அங்கு மிகவும் இலகுவான வெளியீடு அன்று. அதற்கு பதிலாக, மிதமான பழைய வன்பொருளில் செயல்படுகின்ற அளவுக்கு இலகுவாக இருக்கும்போது நவீன பயனர் அனுபவத்தை வழங்குவதற்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்துகிறது – 10 ஆண்டிற்கு முந்தை கணினிகளில் இதை பயன்படுத்திடலாம்.

லினக்ஸ் Lite இயங்குவதற்கான குறைந்தபட்ச கணினித் தேவை 1ஜிபி ரேம் உடன் 1.5GHz வேகத்தில் இயங்கும் CPU ஆகும். இது Ubuntu LTS வெளியீடுகளின் அடிப்படையில் மிகவும் நிலையானது, மேலும் Xfce ஐ அதன்மேசைக்கணினி சூழலாகப் பயன்படுத்துகிறது. இது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது Xfce இன் மிக அழகான செயலாக்கம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பயனர் அனுபவத்தைப் பொறுத்தவரை, ” Lite” நம்மை முட்டாளாக்க விட்டிடவேண்டாம் இந்த வெளியீடு அனைத்து அத்தியாவசிய பொருட்களுடன் வருகிறது. நம்முடைய அலுவலகபணிகளின் தேவைகளுக்கு LibreOffice, படங்களைத் திருத்துவதற்கான GIMP , பல்லூடகத்தினற்கு VLC ஆகியவை இதனோடு கூடவே கிடைக்கின்றது. கூடுதலாக, நமக்குத் தேவையான கூடுதல் பயன்பாடுகளைப் பதிவிறக்க உபுண்டுவின் முழு மென்பொருள் repo வையும் அணுகலாம்.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கான இணையதளமுகவரி www.linuxliteos.com/download.php ஆகும்

5 குபுண்டு: இது விண்டோவின் திறன்விரும்பும் பயனர்களுக்கான உபுண்டு

குபுண்டு என்பது உபுண்டுவின் அதிகாரப்பூர்வ சுவையான KDE Plasma GNOME க்கு பதிலாக இயல்புநிலைமேசைக்கணினி சூழலாக இயக்குகிறதுஇதுதான் உபுண்டுவுடன் பெற்றிடுவோம். இந்த Plasma ல் இயங்கும் உபுண்டு அடிப்படையிலான வெளியீடுவின் சிறப்பு என்ன?

முந்தைய வெளியீடுகள் உபுண்டு LTS வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டவைஇவை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிவரும். மேலும் என்னவென்றால், ஒரு புதிய பதிப்பைப் பெறுவதற்கு முன், புதிய LTS வெளியீட்டில் வெளியீடுகள் உருவாக்கப்படுவதற்கு, இரண்டு வாரங்கள், மாதங்கள் காத்திருக்க வேண்டும். சமீபத்திய மென்பொருள் வசதிகளின் புதுப்பிப்புகளுடன் புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், இது சிறந்ததாக இருக்காது.

அதிர்ஷ்டவசமாக, உபுண்டுவுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு புதிய பதிப்பை குபுண்டு பெறுகிறது. இதில் LTS ,LTS அல்லாத வெளியீடுகள் உள்ளன, எனவே நிலைத்தன்மை அல்லது விரைவான வசதி கிடைப்பதற்கு இடையே தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையும் நமக்கு உள்ளது. இது சமீபத்திய KDE Plasma வசதிகளுக்கான ஒப்பீட்டளவில் விரைவான அணுகலைக் குறிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இணையற்ற தனிப்பயனாக்குதல் வாய்ப்புகளை விரும்பும், மென்பொருள் வசதிகள் ஆகிவற்றிற்கான விரைவான அணுகலை அனுபவிக்கும் நன்கு அறியப்பட்ட விண்டோ போன்ற தளவமைப்பை விரும்பும் திறன்மிகு பயனராக இருந்தால், குபுண்டு நமக்கான சிறந்த விநியோகமாகும்.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கான இணையதளமுகவரி kubuntu.org/getkubuntu/ ஆகும்

%d bloggers like this: