Ubuntu 20 வருடங்களை நிறைவு செய்தது

By | October 21, 2024

உபுண்டு வெளியீடுகள், கட்டற்ற பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான லினக்ஸ் வெளியீடுகளாகும்.

உலகெங்கிலும் இருக்கக்கூடிய, கோடிக்கணக்கான பயனர்கள் உபுண்டு பயன்படுத்துகிறார்கள்.

இதன் பயணம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் màtaro நகரத்திலிருந்து தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அதன் முதல் வெளியீடாக kubuntu வெளியிடப்பட்டது.

அடிப்படையில், இந்தக் கட்டுரையை எழுதும் என்னை விடவும் உபுண்டு ஒரு மாதம் மூத்தது தான்.

எந்தவித லாப நோக்கமும் இன்றி, கட்டற்ற வகையில் உலகில் இருக்கக்கூடிய ஆகச் சிறந்த நிரல் ஆக்க கலைஞர்களின் உதவியால் இன்றைக்கு நம்மிடையே, நம் கணிணிகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது உபுண்டு.

உபுண்டு எனும் வார்த்தை கூட ஒரு ஆப்பிரிக்க மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு மனிதநேயம் எனும் பொருள் உள்ளது.

உண்மையிலேயே மனித நேயத்தின் வெளிப்பாடாகவே உபுண்டு இயங்குதளம் இயங்குகிறது.

அதன் இருபதாம் ஆண்டு சிறப்பை போற்றும் விதமாக Oracular Oriole எனும் வெளியீடை வெளியிட்டிருக்கிறது.

தொடர்ந்து உபுண்டுவின் பயணம் நூற்றாண்டை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உபுண்டுவின் செயல்பாடுகளை நீங்கள் வாழ்த்த விரும்பினால், அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுங்கள்.

தொடர்ந்து கட்டற்ற தொழில்நுட்பத்தை வளர்ப்போம்.

மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com

இணையம் : ssktamil.wordpress.com