நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions)
பயன்படுத்தியிருப்பீர்கள்.
அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான்.
அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன .
அந்த ஐந்து சிறப்பான துணை கருவிகள், எவை?எவை? என்பதை ஒன்றொன்றாக பார்க்கலாம்.
அதற்கு முன்பாக, மேற்படி இந்த கட்டுரையானது itsfoss இணையதளத்தில் சாய் சுயம் தாஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
1. இருள் படிப்பான் ( dark reader)
உங்கள் கணினி திரையில் இருந்து வெளியாகும், அதிகப்படியான வெளிச்சத்தால் கண்கள் கூச கூடும். மேலும், தொடர்ந்து அதிகப்படியான வெளிச்சத்தை காண்பது கண் பார்வையையும் பாதிக்க கூடியது.
இதைத் தவிர்ப்பதற்கு மிகவும் எளிமையான வழியை தருவது தான் இருள் படிப்பான்(dark reader)எனும் chrome துணை கருவி(extension). பயர்பாக்ஸ் உலாவியில் கூட இந்த துணைக் கருவி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக, பல வகைகளில் உங்கள் திரையின் ஒளி அளவை மாற்றி அமைக்க முடியும். எனவே, நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள்.
2. எளிய மொழிப்பெயர்ப்பான்
நம்மைப் போன்றோருக்கு ஆங்கிலத்தில் கட்டுரைகளை படிப்பதற்கு, எப்போதும் கடினமாகவே இருக்கும்.
அதை களைவதற்காக, ஒவ்வொரு முறையும் அவற்றை கூகுள் ட்ரான்ஸ்லேட் கருவியில் செலுத்தி மொழி பெயர்க்க வேண்டியிருக்கும்.
அதை எளிமையாக்குவதற்கு தான், கீழ்காணும் துணைக் கருவி மிகவும் உதவுகிறது. இந்த கருவியை பயன்படுத்தி எளிமையாக வலைதள தகவல்களையும் மொழிபெயர்க்க முடியும். நீங்கள் கற்றுக் கொள்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது.
3.Ghostery ( விளம்பர தடுப்பான்)
நமது கணியம் பைத்தான் வகுப்புகளை யூடியூபில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இரண்டு நிமிடத்திற்கு தவிர்க்க முடியாத(non skipping ads) விளம்பரங்கள் வரும்போது, நீங்கள் எரிச்சலடைய கூடும்.
இவை அனைத்தையும் தடுப்பதற்கு தான், ஒரு எளிமையான துணை கருவியாக வருகிறது ghostery.
இதன் மூலம் பெரும்பாலான, தேவையற்ற விளம்பரங்களை உங்களால் தடுக்க முடியும்.
4.Light house
ஒரு இணையதளத்தின் செயல்பாடு(website performance) எவ்வாறு இருக்கிறது என அறிந்து கொள்ள வேண்டுமா?
அதற்காகவும், ஒரு துணைக் கருவி இருக்கிறது அதுதான் லைட் ஹவுஸ்.
ஒரு இணையதளத்தின் பாதுகாப்பு, அதில் எவ்வாறு தரவுகள்(data encryption ) பாதுகாக்கப்படுகின்றன? மேலும், ஏதேனும் முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டுமா? என்பதை அறிந்து கொள்ள முடியும் இதையும் முயற்சி செய்து பாருங்கள்.
5.pass bolt
உங்களது தனிப்பட்ட கடவு சொற்களை(passwords ) சேமித்து வைக்கவும்.
உங்களது குழுவினுடைய கடவுச்சொற்களை சேமித்து வைக்கவும், பாதுகாப்பான ஒரு செயலி எப்போதும் தேவைதான்.
பலரும் குறிப்புகள்(notepad ) போன்ற பாதுகாப்பற்ற செயலிகளில், கடவுச்சொற்களை சேமித்து வைப்பது பார்க்க முடிகிறது.
இதற்கு மாற்றாக, மிகவும் ஒரு பாதுகாப்பான வழியை வழங்குவது தான் pass bolt துணைக் கருவியாகும்.
இதன் மூலம் துரிதமாக, மிகவும் பாதுகாப்பான கடவுச்சொற்களை கூட உருவாக்க முடியும்(generating strong passwords) என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் -02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com