இப்போது நான்கு வழிகளில் ஒரு சில்லின் NPU ஆனது கணினியை சிறப்பாக ஆக்குகிறது

By | August 10, 2025

தற்போது செய்யறிவானது (AI) தேடுதலிற்கான கருவிகள் முதல் கானொளி அழைப்புகள் வரை அனைத்தையும் இயக்குகிறது, ஆனால் சில மடிக்கணினிகள் இன்னும் அவ்வாறான வசதிகளை ஒரே சீராக இயக்க சிரமப்படுகின்றன. ஏனெனில் சில மையச்செயலிகள்(CPU) நிகழ்நேர செய்யறிவின்(AI) பணிகளை திறமையாக கையாளுமாறு வடிவமைக்கப் படவில்லை.புதியதாக ஏதேனும் ஒரு கணினியை நாம் கொள்முதல்செய்கின்றபோது, மையச்செயலி(CPU), தற்காலிகநினைவகம்(RAM) ஆகியவை பற்றிய விவரக்குறிப்புகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் அதில் NPU என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units(NPU)) உள்ளனவா இல்லையா என்பதைப் பார்த்திருக்கமாட்டோம். அந்த நிலை தற்போது மாறத் தொடங்குகிறது.
நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units)ஆனவை, மையச் செயலிக்கு(CPU) அதிக பணிச்சுமையை வழங்காமல் மங்கலான பின்னணி, நேரடி திரைபட பிடிப்புகள் , குரலொலியை தனிமைப்படுத்தல் போன்ற செய்யறிவின்(AI) இயல்புகளைக் கையாளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நம்முடைய மடிகணிக்கு சிறந்த மின்கலணின் ஆயுள், மென்மையான செயல்திறன், பின்புலத்தில் அதிகமாகபயன்பாடுகள் செயல்படும்போது கூட பயன்பாடுகளின் விளைவுகள் விரைவாக இருக்கின்றவாறு உதவியை வழங்குகிறது. இவை அனைத்தும்சரிதான், ஆனால் உண்மையில் நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு உதவுமா? ,ஆம் குறிப்பாக செய்யறிவின்(AI) இயல்புகள் இயங்கும் போது.கண்டிப்பாக இந்த வேறுபாட்டினை உடனடியாக உணர்ந்திடுவோம்
1. நீண்ட மின்கலணின் ஆயுள் – செய்யறிவின்(AI) இயல்புகள் இயங்கும் போது கூட விரைவாக மின்சக்தி குறைந்திடாமல் திறமையாக இருக்கும்.
கணினியில் செய்யறிவின்(AI) இயல்புகளை பயன்படுத்துவது மிகவும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம், ஆனால் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் கணினியில் செய்யறிவின்(AI) இயல்புகள் செயல்படுவதற்குத் கூடுதலான மின்சக்தி தேவையாகும். மடிக்கணினி அதிக அளவில் பணிகளைக் கையாளும்போது, இதற்காக மின்னேற்றியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இது அன்றாட வழக்கமான பணிகளுடன் கூடுதலான ஒரு பணியைச் சேர்ப்பது போன்றது. ஒவ்வொன்றும் சிறியதாகத் தோன்றினாலும், அவை அதிகமாக சேர்ந்து மடிக்கணினியை மேலும் சோர்வடையச் செய்து மெதுவாக செயல்படச் செய்கின்றன. ஏதேனும் ஒரு உருவப்படத்தை உருவாக்குகின்ற செய்யறிவின்(AI) மாதிரி நம்முடைய அறிதிறன்பேசியை முழுமையாக மின்னேற்றம்செய்வது போன்றே மடிக்கணினியிலும் அதிக மின்ஆற்றலைப் பயன்படுத்தலாம் என்று Enovix நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மடிக்கணினியில் நரம்பியல் செயலிகள்(NPU) இல்லை யென்றால் நம்முடைய அன்றாட பணிகளுக்காக செய்யறிவினை(AI) பயன்படுத்திடும்போதும் வரைகலைச்செயலி(GPU) , மையச்செயலி(CPU) ஆகிய இரண்டும் மிககடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
வரைகலைச்செயலி(GPU) , மையச்செயலி(CPU)ஆகிய இரண்டும் வழக்கமாகக் கையாளுகின்ற செய்யறிவின்(AI) பணிகளை நரம்பியல் செயலி(NPU) எடுத்துக் கொள்கிறது. அதே பணிகளுக்கு குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், நரம்பியல் செயலிகள்(NPU) மின்கலணில் ஆயுள்நீண்ட காலம் நீடிக்கவும், மின்கலணை அடிக்கடி மின்னேற்றம் செய்திடாமல் மடிக்கணினியை இயக்கவும் உதவுகின்றன.
2.விரைவான பயன்பாட்டு செயல்திறன் – செய்யறிவின்(AI) பணிகள் இனி எல்லாவற்றையும் மெதுவாக்காது


நரம்பியல் செயலிகளை(NPU) பற்றி நாம் கேள்விப்படுவதற்கு முன்பே, மங்கலான பின்னணி அல்லது நேரடி திரைபட பிடிப்புகள் போன்ற செய்யறிவின்(AI) இயல்புகள் மையச்செயலி(CPU)அல்லது வரைகலைச்செயலி(GPU)யிலிருந்து தங்களுக்கான சக்தியைப் பெறுகின்றன. அதாவது இவையிரண்டும் செயல்படுவதால் மற்ற பயன்பாடுகள் மெதுவாகிவிடும், குறிப்பாக பல்வேறு பயன்பாடுகளை செயல்படுத்தி நமக்கான பல்வேறுபணிகளை செய்து கொண்டிருந்தால்.தற்போது, நரம்பியல் செயலிகள்(NPU) செய்யறிவின்(AI) பணிகளைக் கையாளுகின்றன, எனவே கணினியின் அமைவு விரைவாக இயங்குகிறது. நரம்பியல் செயலிகள்(NPU) ஆனவை மேட்ரிக்ஸ் பெருக்கலை எளிதாகக் கையாள முடியும்; இது தொடர்ச்சியாகப் பயன்படுத்துகின்ற கணித செய்யறிவின்(AI) வகையைச் சேர்ந்தது, ஆனால் வரைகலைச்செயலி(GPU)களும், மையச்செயலி(CPU)களும் அதைச் சிறப்பாகக் கையாளும் வகையில் உருவாக்கப் படவில்லை என்பதே உண்மையான களநிலவரமாகும்.
ஒரேநேரத்தில் ஏதனுமொரு Google Docs கோப்பைத் திருத்தலாம், பல்வேறு Chrome தாவல்களைத் திறந்து இணையத்தில் உலாவரலாம் அல்லது பயன்பாடுகளுக்கு இடையில் தாவிச்செல்லாம். செய்யறிவின்(AI) விளைவுகள் பின்னணியில் இயங்கினாலும், கணினி மெதுவாக செயல்படுவதாக நாம் உணரமாட்டோம்.
நரம்பியல் செயலிகளுடன்(NPU) இணைந்து செயல்படுகின்ற மடிக்கணினியைப் பயன்படுத்தியவுடன், அதன் செயல்வேகத்தில் உள்ள வேறுபாட்டினைக் காணலாம். பயன்பாடுகள் விரைவாகத் திறக்கும், சீராக இயங்கும், மேலும் செய்யறிவு(AI) தொடர்பான ஒன்றைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எதுவும் செயல்படுவதற்கு போதுமான மின்சக்தி இல்லாமல்உறைந்து போகாது.
3.நரம்பியல் செயலிகளுடன்(NPU) சாத்தியமான புதிய செய்யறிவின்(AI) இல்புகள் – விரைவாக செயல்படுகினற கருவிகள், சிறந்த முடிவுகள் , உள்ளமைக்கப்பட்ட அதிக தனியுரிமைஆகியன


Copilot+ PC-என்றவாறான கணினியில், பழைய மடிக்கணினிகளால் கையாள முடியாத வசதிவாய்ப்புகளை நரம்பியல் செயலி(NPU)ஆனது இயக்குகிறது. Recall என்பது தனித்துவமான, சர்ச்சைக்குரிய இயல்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய கணினியில் நாம் பார்த்த அல்லது செய்த அனைத்து செயல்களின் தேடக்கூடிய காலவரிசையை உருவாக்குகிறது. “எனது கடைசி குழு அழைப்பின் சிவப்பு சட்டையில் உள்ள நபர்” அல்லது “ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் எனது புகைப்படம்” என்றவாறு நாம் விரும்பியதை கேட்கலாம், மேலும் Recall அதை எங்கே சேமித்தோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவில்லை என்றாலும் நரம்பியல் செயலி(NPU)ஆனது அதைஎளிதாக தேடிக் கண்டுபிடித்திடுவிடும்.
பெயிண்டில் உள்ள Cocreator ஒரு தோராயமான வடிவத்தை வரையவும், நாம் விரும்புவதை விவரிக்கவும், அதை ஒரு உருவப்படமாக மாற்றவும் நம்மை அனுமதிக்கிறது. அதற்காக பயன்படுத்திடதொடங்கிடும்போது அது எதிர்வினையாற்றுகிறது, இது நாம் படம்வரைவதில் திறன் இல்லாவிட்டாலும் நமக்கு உதவுகிறது.
நரம்பியல் செயலி(NPU), ஆனது Windows Studio Effects-ஐயும் இயக்குகிறது, இதில் கண்ணின் காட்சியில் திருத்தம், உருவப்பட விளக்குகள் ,கானொளிகாட்சியின் அசைவூட்டம் செய்யப்பட்டதாக மாற்றுகின்ற வடிப்பான்கள் ஆகியன உள்ளடங்கும். இயல்புகள் உடனடியாகப் பயன்படுத்தப்படும் .கணினியின் மீதமுள்ளவற்றை மெதுவாக்காது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், நேரடி திரைபிடிப்புகள் இப்போது கணினியில் இயங்குவதால் எளிதாக மொழிபெயர்க்க முடியும்.
4. செய்யறிவின்(AI) கருவிகளைப் பயன்படுத்தும் போது சிறந்த தனியுரிமை – தரவு எங்காவது ஒரு சேவையாளரில் அன்று, நம்முடைய கணினியிலேயே இருக்கும்.


நம்முடைய கணினியில் நரம்பியல் செயலி(NPU)ஆனது செயல்பாட்டில் இருக்கும்போது, Recall, Live Captions , Cocreator போன்ற செய்யறிவின்(AI) வசதிகள் மேககணினியை நம்பியிருக்காது. அனைத்தும் நம்முடைய மடிக்கணினியில் நேரடியாக இயங்குகின்றன, உரை,குரலொலி, உருவப்படங்களைச் செயலாக்குதல் ஆகிய செயல்கள் அதற்கான வன்பொருளைப் பயன்படுத்தி கொள்கின்றன. அதாவது அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும்போது எதுவும் நம்முடைய சாதனத்தை விட்டு வெளியேறாது. கடந்த வாரம் காட்சியில் இருந்ததைத் தேடுவது அல்லது கானொளிகாட்சியின் அழைப்பு பின்னணியை சரிசெய்வது கூட நம்முடைய கணினியிலேயே இருக்கும்.
எடுத்துக்காட்டாக, Recall எனும் கட்டளையை எடுத்துக் கொள்க, நம்மடைய செயல்பாட்டின் திரைபடபிடிப்புகாட்சிகளை கணக்கில் இணைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட, மறைகுறியாக்கப்பட்ட கோப்புறையில் சேமித்திடுகிறது. பதிவு செய்வதை வரம்பிடலாம், இடைநிறுத்தம்செய்திடலாம் அல்லது சில பயன்பாடுகள் சேர்க்கப்படுவதைத் தடுக்கலாம். இந்த திரைபடபிடிப்புகாட்சிகள் பதிவேற்றப்படுவதோ பகிர்ந்துகொள்ளப்படுவதோ இல்லை. ஆயினும் இன்னும் அதே வசதிகளைப் பெற்றிடுகின்றோம், ஆனால் எல்லாம் நம்முடன் இருக்கும்.
மேககணினி அல்லது வேறு சேவையாளருகு எதுவும் அனுப்பப்படுவதில்லை. திரைபடபிடிப்புகாட்சிகள் குறியாக்கம் செய்யப்பட்டவை, நம்முடைய கணக்குடன் இணைக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது,
மடிக்கணினியில் நரம்பியல் செயலி(NPU) வைத்திருப்பது ஏன் மதிப்புக்குரியது
ஒரு சில்லின் நரம்பியல் செயலி(NPU)அதிக கவனத்தைப் பெறாமல் போகலாம், ஆனால் அது மடிக்கணினி இயங்கும் விதத்தை அமைதியாக மேம்படுத்துகிறது. பயன்பாடுகள் பதிலளிக்கக்கூடியதாக இருக்கின்றது, செய்யறிவின்(AI) இயல்புகள் சீராக இருக்கும், மேலும் மின்கலணின் வாழ்நாளை நீட்டிக்கின்றது. கணினியை பல்வேறுபணிகள், கானொளி அழைப்புகள் அல்லது படைப்பு கருவிகளுக்குப் பயன்படுத்தினால், நரம்பியல் செயலி(NPU) இருந்தால், அவை யனைத்தும் சிறப்பாக செயல்படுவதை காணலாம்.

 

Leave a Reply