கடந்த 04.02.2026 அன்று, காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில், MCA முதல் ஆண்டு மாணவர்களுக்கு , From projects to products, Engineering Real world Micro SaaS for the modern portfolio என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் பரமேஸ்வர், Thirsty Minds அமைப்பின் தனசேகர், கணியம் அறக்கட்டளையின் சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினர்.
- காஞ்சி லினக்ஸ் பயனர் குழு, கணியம் அறக்கட்டளை, Thirsty Minds ன் செயல்பாடுகள்
- கட்டற்ற மென்பொருள், லினக்ஸ் பயன்படுத்துவதின் அவசியம்
- Devops, Cloud துறைகளின் வேலை வாய்ப்புகள்
- பைத்தான் மொழியின் திறன்கள்
- ஒரு சிறிய SaaS மென்பொருள் உருவாக்கி, வெளியிடும் வழிகள்
- பல்வேறு மென்பொருள் உருவாக்க யோசனைகள்
- கட்டற்ற மென்பொருளுக்கு பங்களித்தல்
- வேலைக்கு தயாராதல்
போன்ற தலைப்புகளில் உரையாடல் நடத்தப்பட்டது.
அடுத்த கட்ட செயல்பாடுகளாக, விரைவில் செயல் முறையில் கற்கும் பயிற்சிப் பட்டறையும், Academic Project களுக்கு வழிகாட்டுதலும் செய்ய, முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ஆதரவு தந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், கணினி ஆய்வக பொறுப்பாளர்கள், பேராசிரியர் ஜெ.சீனிவாசன், துறைத்தலைவர் Dr. ரமேஷ், பேராசிரியர் Dr. S. பாபு ஆகியோருக்கு மிக்க நன்றி.
