திறன்பேசிகள், மேசைக்கணினி/மடிக்கணினி ஆகிய இரண்டிற்குமான இணைப்புகள் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு உதவி வருகின்றன. பல நேரங்களில், இது செயல்களை ஒத்திசைவில் வைத்திருப்பதைத் தவிர வேறில்லை. ஒருவேளை தொடர்புகளை இரண்டு இடங்களிலும் நிர்வகிக்கக்கூடியதாக வைத்திருக்க நாம் விரும்பலாம். அல்லது ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு கோப்புகளை பரிமாற்றம்செய்ய வேண்டியிருக்கலாம்.கோப்புகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிமாற்றம்சேய்ய வேண்டிய தேவைஏற்படலாம் (அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம்).
அல்லது ஒருவேளை — Android கைபேசியிலிருந்து Linuxஇல் செயல்படுகின்ற மேசைக்கணினியைக் கட்டுப்படுத்த விரும்பலாம். இவைஎல்லாவற்றையும் தற்போது அருமையாகச் செய்கிறார்கள், அது எப்படி முடிந்தது என்பதை இப்போது நாம் காண்போம்.
இந்தவசதியில் என்ன செய்ய முடியும்?
Android சாதனத்தில் KDE Connect எனும்பயன்பாட்டையும் மேசைக்கணினியில் KDE Connect எனும் பயன்பாட்டையும் பயன்படுத்தி, சில செயல்களைச் செய்ய நம்முடைய கைபேசியிலிருந்து கட்டளைகளை அனுப்பலாம்.
எடுத்துக்காட்டாக, கணினியிலிருந்து விலகிவெகுதூரம் சென்றபின்னர் அதைநிறுத்தம்செய்ய மறந்துவிட்டதை உணர்ந்திருக்கலாம். அல்லது கணினியின் செயலை நிறுத்தம் செய்யவேண்டியிருக்கலாம்,அல்லதுஏதேனுமொரு செயலியைத் திறந்து செயல்படுத்த வேண்டியிருக்கலாம், ஏதாவது ஒன்றை அச்சிட வேண்டியிருக்கலாம் அல்லது ஒரு பல்லூடக கோப்பை இயக்க வேண்டியிருக்கலாம். உண்மையில், என்ன செய்ய முடியும் என்பது கற்பனையால் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
KDE Connectஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படிAndroid இலிருந்து Linux PC ஐக் கட்டுப்படுத்த முதன்முதலான கட்டளையை எவ்வாறு உருவாக்குவது என்பதை இப்போது காண்போம்.
முதல் கட்டளையை உருவாக்குதல்
நமக்குத் தேவையானது: இதற்கு நமக்குத் தேவையானது Android கைபேசியிலும் மேசைக்கணினியிலும் நிறுவுகைசெய்யப்பட்ட KDE Connect என்பதுமட்டுமே. KDE Plasma என்பது மேசைக்கணினியைப் பயன்படுத்தவில்லை என்றால், KDE Connect ஐ நிறுவுகைசெய்வது ஏராளமான சார்புகளையும் நிறுவுகைசெய்யவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க.
Google Play Store இல் Android பயன்பாட்டைக் காணலாம்.
1. சாதனங்களை இணைத்திடுக
சாதனங்களை அருகலை (Bluetooth) அல்லது கம்பியில்லாவலைபின்னலின்(wireless) மூலம் இணைக்கலாம். பொதுவாக நம்மில் பலர் கம்பியில்லா வலைபின்னலின்(wireless) வழியில் செல்லவே விரும்புவார்கள், ஏனெனில் இது அதிக வரம்பை வழங்குகிறது . மிகவும் நம்பகமானது.
சாதனங்களை இணைக்க, Android பயன்பாட்டில் KDE Connect எனும்பக்கப்பட்டியைத் திறந்து “Pair new device.” என்பதைத் தட்டுக. இணைத்தல் நேரடியானது, எனவே அதைச் செய்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
2. Create a command வசதியைத் திறந்திடுக
இது சற்று சிக்கலானது, ஆனால் அது செயல்படுகிறது. கைபேசியில் KDE Connect ஐத் திறந்து Run Command என்பதை சொடுக்குதல் செய்திடுக. இது மேசைக்கணினி அல்லது மடிக்கணினியில் சரியான KDE Connect எனும்சாளரத்தைத் திறக்கும்.
3.கட்டளையை உருவாக்கிடுக
“Run commands” எனும் சாளரத்தில், சாளரத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “Add command” என்பதைக் சொடுக்குதல் செய்திடுக.
4. கட்டளையைத் தனிப்பயனாக்கிடுக
இதன் விளைவாக வரும் சாளரத்தில், கட்டளைக்கு ஒரு பெயரைக் கொடுத்து, பின்னர் இயக்க விரும்பும் கட்டளையைச் சேர்த்திடுக. எந்த கட்டளையைப் பயன்படுத்துவது என்று தெரியாவிட்டால், கீழிறங்கு பட்டியை சொடுக்குதல் செய்து, முன் வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் பட்டியலிலிருந்து ஏதேநுமொன்றினை தேர்ந்தெடுக்கலாம்.
மேசைக்கணினி திரையைப் பூட்டும் ஒரு கட்டளையை உருவாக்க விரும்புவதாகக்கொள்க. அதைச் செய்ய, “lock screen” போன்ற ஒன்றை பெயராகத் தட்டச்சு செய்து, கட்டளைக்கு loginctl lock-session என தட்டச்சு செய்திடுக.
இந்த பணிமுடிந்ததும், Add என்பதைக் சொடுக்குதல் செய்திடுக, அவ்வளவுதான் இந்த பணியை முடித்துவிட்டோம்.
புதிய கட்டளையைப் பயன்படுத்துதல்
புதிதாக உருவாக்கப்பட்ட கட்டளையைப் பயன்படுத்துவது எளிது. கைபேசியில் KDE Connect ஐத் திறந்து, Run Command ஐத் தட்டுக, பின்னர் பட்டியலிலிருந்து நாம் உருவாக்கிய கட்டளையைத் தட்டுக. மேசைக்கணினி உடனடியாக பூட்டப்படுவதை கவனித்திடுக.
சேர்க்கக்கூடிய பிற கட்டளைகளில் பின்வருவன அடங்கும்:
Shutdown – systemctl poweroff
Reboot – systemctl reboot
Suspend – systemctl suspend
Screen Unlock – loginctl unlock-screen
மேசைக்கணினிபின் திரைபடபிடிப்பை தானாகவே எடுத்து தானாகவே கைபேசிக்கு அனுப்பும் ஒரு கட்டளையைகூட உருவாக்கலாம். அந்தக் கட்டளைக்கு “screen to phone” என்று பெயரிடலாம், மேலும் கட்டளை பின்வருமாறு இருக்கும்:
மேலே உள்ள கட்டளை Spectacle எனும் திரைபடபிடிப்பு கருவியைப் பொறுத்தது. Spectacle நிறுவுகைசெய்யப்படவில்லை என்றால், அதை நிறுவுகைசெய்திடலாம் அல்லது மேசைக்கணினிபில் பயன்படுத்தக்கூடிய வகையில் கட்டளையை சரிசெய்யலாம்.
KDE Connect என்பது Linux கணினியை கைபேசியிலிருந்து கட்டுப்படுத்த மிகவும் எளிதான கருவியாகும். இந்த செயலியை முயற்சித்திடுக.