லினக்ஸ் ஏன் குறிமுறைவரிகளை எழுதுவதற்கு கற்றுக்கொள்ள சிறந்த இடமாக உள்ளது

லினக்ஸ்ஆனது, GCC, GDB, Vim , Emacs போன்ற பல்வேறு கட்டணமற்ற நிரலாக்க கருவிகளை வழங்குகிறது, அவை முன்பே நிறுவுகைசெய்யப்பட்டவைகளாகவும், பயனுள்ளவைகளாகவும் உள்ளன.
WSL போன்ற கருவிகளைப் பயன்படுத்தி OS ஐ முழுமையாக மாற்றாமல் Linux இல் குறிமுறைவரிகளை எழுதலாம், இது Windows, Mac , Chromebook ஆகியபயனர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
Linux இல் குறிமுறைவரிகளை எழுதுவதற்கு கற்றுக்கொள்வது ஒரு தொழில்முறை சூழல், திறமூலக் குறிமுறைவரிகளுக்கான அணுகல், ஏராளமான ஆவணங்கள் , சமூககுழுவின் ஆதரவு ஆகிய வசதிவாய்ப்புகளை வழங்குகிறது.
குறிமுறைவரிகளை எழுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று கனவினை மட்டும் கண்டு கொண்டிருக்கின்றநிலையில், எப்படி தொடங்குவது என்று தடுமாறலாம். நிரலாக்க பயணத்தைத் தொடங்க Linux ஆனது சிறந்த OS ஆக இருக்கின்றது. நல்லதொரு நிறுவனத்திலுள்ள ஒரு தொழில்முறை நிபுணரைப் போன்று நிரலாக்கத்தினை செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதில் Linux ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு புதிய நிரலாளராக அவர்களுக்கு எது நல்லது என்பதற்கான பல காரணங்கள் பின்வருமாறு.
நிரலாக்கக் கருவிகள் நிறையஉள்ளன
லினக்ஸ் ஆனது யூனிக்ஸிலிருந்து ஏராளமான நிரலாக்க கருவிகளைப் பெற்றுள்ளது. GCC ,Clang போன்ற தொகுப்பிகள், GDB போன்ற பிழைத்திருத்திகள் , Vim , GNU Emacs போன்ற திருத்திகள் உள்ளன. இவை அனைத்தும் நிரலாக்கம் செய்ய அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும் மற்ற அமைப்புகளைப் போன்றில்லாமல் கட்டணமற்றவைகளாகும், . நாம் விரும்பினால் அவற்றை நாம் விரும்பியவாறு மாற்றலாம், ஆனால் சில இயல்புநிலைகள் இருப்பது எளிதாகத் தொடங்க உதவும்.
இன்னும் சிறப்பாக, அவற்றில் பல பைதான் போன்ற கணினிமொழிகள் உட்பட பல்வேறு கருவிகள் லினக்ஸ் விநியோகங்களில் முன்பே நிறுவுகை செய்யப்பட்டே கிடைக்கின்றன.
அதன்வாயிலாக நாம் விண்டோஸ் அல்லது மேக் இயக்கமுறைமைையத் தவிர்க்காமல் லினக்ஸைப் பயன்படுத்தலாம்
நாம் செய்ய விரும்புவது குறிமுறைவரிகளில் ஈடுபடுவது மட்டுமே என்றால், புதிய இயக்க முறைமையைப் பயன்படுத்துவது கடினமாகத் தோன்றலாம். லினக்ஸில் நிரலாக்கத்தைத் தொடங்க நமக்குப் பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியதில்லை. நம்மிடம் இருக்கும் OS இன் மேல் லினக்ஸ் மேம்பாட்டை நிறுவுகைசெய்திடலாம்.
விண்டோஸ் 10 அல்லது 11 இல் இருந்தால் தொடங்குவதற்கு Windows Subsystem for Linux (WSL) ஒரு நல்ல வழியாகும். ஒரு Chromebook ஐப் பயன்படுத்துகின்றோம் என்றால், இதேபோன்று லினக்ஸ் மேம்பாட்டு சூழலை நிறுவுகைசெய்திடலாம்.
ஒரு Mac பயனராக இருந்தால், பல பிரபலமான திறமூல நிரலாக்க கருவிகளை இயக்கும் உள்ளமைக்கப்பட்ட முனைமை பயன்பாடு பயன்படுத்த தயாராக உள்ளது. இது லினக்ஸுக்குப் பதிலாக BSD ஐ அடிப்படையாகக் கொண்டது, ஆனால் HTG இல் உள்ளதைப் போன்ற பல நிரலாக்க பயிற்சிகளுடன் பின்பற்றக்கூடிய போதுமான ஒற்றுமைகள் உள்ளன.
கட்டளை வரி குறிமுறைவரிகளை விரும்பினால், இரட்டை இயக்கமுறைமையின் துவக்கம் அல்லது மெய்நிகர் கணினியின் மூலம் முழு லினக்ஸ் அனுபவத்தையும் முயற்சி செய்யலாம்.
தொழில்முறை நிரலாளர்கள் லினக்ஸைப் பயன்படுத்துகிறார்கள்
லினக்ஸில் குறிமுறைவரிகளை எழுதுவதற்குக் கற்றுக்கொள்ளும்போது, ​​தொழில்முறை நிரலாளர்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பயன்பாடுகளையும், வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படுத்தும் கருவிகளையும் பயன்படுத்துகின்றோம். உண்மையான நிரலாக்கப் பணிகளுக்கு மிஞ்சும் சில பொம்மை மொழியை நாம்கற்றுக் கொள்வதில்லை.
லினக்ஸ் அதன் மேம்பாட்டு கருவிகள் மூலம் யூனிக்ஸின் வளமான பாரம்பரியத்தை உருவாக்குகிறது. லினக்ஸ்ஆனது நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ள சிறந்த இடமாகும், ஏனெனில் இது உண்மையான மேம்படுத்துநர்களுடன் செயல்முறையில் நன்கு பரிசோதிக்கப்பட்டது.
பலர் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைகளில் தீவிர நிரலாக்கத் செயல்திட்டங்களை உருவாக்கக் கற்றுக்கொள்கிறார்கள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் போன்ற பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு லினக்ஸ் அடிப்படையிலான ஆய்வகங்கள் , நிரல் மேம்பாட்டிற்கான தொலைநிலை அமைப்புகளை கட்டமைத்துள்ளன. இது முக்கியமாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் AT&T மாணவர்கள் படிப்பதற்கான மூலக் குறிமுறைவரிகளை உள்ளடக்கிய யூனிக்ஸிற்கான மலிவான கல்வி உரிமங்களை வழங்கியது.
லினக்ஸுக்கு யூனிக்ஸ் மூலக் குறிமுறைவரிகள் இல்லை என்றாலும், இது பல்கலைக்கழக கணினிஅறிவியில்(CS) துறைகளிடையே பிரபலமானது, ஏனெனில் இது கட்டணமற்ற, பல்வேறு வகையான வன்பொருளில் இயங்குகிறது, மேலும் பேராசிரியர்கள் ஏற்கனவே லினக்ஸை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
இந்த மாணவர்கள் பட்டம் பெற்று நடப்பு உலகிற்குச் சென்ற பிறகு, அவர்கள் தங்கள் லினக்ஸ் அனுபவத்தை அவர்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். W3Techs இன் கூற்றுப்படி, Unix போன்ற அமைப்புகள் இணைய சேவையகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் நடைமுறையில் அது பெரும்பாலும் Linux இன் சில பதிப்புகளாக இருக்கலாம்.
மூலக் குறிமுறைவரிகளைப் படிக்கலாம்
குறிமுறைவரிகளைஎழுதக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி நிறைய படிப்பதுதான். இது மூலக் குறிமுறைவரிகளையும் புத்தகங்களுக்கும் பொருந்தும். Linuxஇல் மூலக் குறிமுறைவரிகள்திறந்திருக்கும், எனவே அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய குறிமுறைவரிகளை நாமே ஆய்வு செய்திடலாம்.
துவக்ககால டாட்-காம் நாட்களில், சில இணையதளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய விரும்புகின்றபோது, உலாவியில் “view source” என்பதைக் சொடுக்குதல் செய்தால்போதுமானதாகும். HTML, CSSஆகியவற்றின் அடிப்படைகளை இப்படித்தான் கற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான மூலக் குறிமுறைரிகளை், குறிப்பாக Linuxஇன் உருவாக்கமையம், சற்று குழப்பமாகத் தோன்றினாலும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஒத்த நுண்ணறிவைப் பெற்றிடுவோம்.
கண்டிப்பாக, திறமூல மென்பொருள் விண்டோவிற்குக் கிடைக்கிறது, ஆனால் லினக்ஸ் சமூககுழுதான் இந்தக் கருத்தை ஆதரிக்கிறது. திற மூல மென்பொருளை ஆதரிப்பதில் Linuxஇன் சமூககுழு நீண்ட காலமாக பிடிவாதமாக உள்ளது. Windows இல் உள்ள பெரும்பாலான திறமூல மென்பொருள் Linux இல் எழுதப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நிறைய ஆவணங்கள் கிடைக்கின்றன
தனியுரிமை மொழிகள் , அமைவுகளை விட, லினக்ஸ் , திறமூல நிரலாக்க மொழிகளில், இணையம் அச்சிட்டவைஆகிய இரண்டிலும் அதிக ஆவணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது லினக்ஸின் திறந்த தன்மை காரணமாக இருக்கலாம், இது தொழில்நுட்ப ஆசிரியர்கள் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைகாண அனுமதிக்கிறது. பல பயிற்சிகள் யூனிக்ஸ் போன்ற சூழலில் இருப்பதாகக் கருதுகின்றன.
பெரும்பாலான நிரலாக்க மொழிகளிலும் , கருவிகளிலும் விக்கிகள் போன்ற இணையதள ஆவணங்கள் உள்ளன. நாம் விரும்பினால் அச்சிட்ட புத்தகங்களையும் பெறமுடியும். CSU East Bay இல் படிக்கின்றபோது, ​​நூலகத்தில் Unix பற்றிய ஏராளமான புத்தகங்களைக் காணலாம், அவற்றில் பல 90கள் , அதற்கு முந்தையவை என்றாலும், Unix போன்ற முன்னுதாரணம் தொழில்முறை நிரலாளர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். கணினி அறிவியல் மாணவனாக இல்லாதவர்கள்கூட அதிலிருந்து எப்படி தப்பித்திடுவார்கள் என்று இன்னும் தெரியாது.
சமூககுழுவிலிருந்து உதவி பெறலாம்
ஏதேனுமொரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், யாராவதொருவரிடமிருந்து உதவி பெறலாம். பல நிரலாக்க மொழிகள் , பிற திறமூல செயல்திட்டங்களில் இணையதள மன்றங்கள், IRC channels, கைவிடபட்ட சேவையகங்கள் ,நிரலாளர்கள் hang out செய்து உதவி வழங்கக்கூடிய பிற வழிமுறைகள் உள்ளன. அவர்களை நேரில் சந்திக்க விரும்பினால் நேரடியாக கூடுகின்ற பயனர் குழுக்களிலும் கலந்து கொள்ளலாம்.
சமூக உணர்வு என்பது லினக்ஸ்ஆனது யூனிக்ஸிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது, ஏனெனில் யூனிக்ஸ் இணை உருவாக்கியவர் டென்னிஸ் ரிட்சி ஒரு சமூககுழுவினை உருவாக்கக்கூடிய ஒரு அமைப்பை விரும்பினார்.
மற்ற அமைப்புகளிலிருந்துகூட உதவி பெற முடியும், ஆனால் லினக்ஸ் , திற மூல மென்பொருளை தனியுரிமை மென்பொருளிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், அதை உருவாக்கிய நபர் கேள்விகளுக்கு பதிலளிப்பதை காணலாம். ஒரு பெரிய திறமூல செயல்திட்டத்திற்கு பங்களித்த ஒருவருடன் சாதாரணமான உரையாடலாக இருப்பதை உணரும்போது கூட ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆச்சரியப்பட்டிடுவார்கள். மைக்ரோசாப்டில் வேலை செய்யாவிட்டால் விண்டோ மேம்படுத்துநர்களை அணுகுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இருக்காது.

Leave a Reply