ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம்.
முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம், அவ்வாறான செயலி அந்தந்த சாதனத்திலேயே அதிகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் தேவைப்படுகின்ற பாகங்கள் நம்முடைய தேவைகளைப் பொறுத்ததாகும்.
ஆண்ட்ராய்டில் மேசைக்கணினி பயன்முறை(desktop mode) என்றால் என்ன?
முதலில், ஆண்ட்ராய்டு கைபேசிகளில் “மேசைக்கணினி பயன்முறை(desktop mode)” என்பதை பற்றி நாம் விவாதிக்கும்போது, ​​இணையஉலாவிகளில் ஒரு பக்கத்தை அதன் மேசைக்கணினி தளவமைப்பில் கட்டாயப்படுத்தும் வாய்ப்பினை அர்த்தப் படுத்து வதில்லை என்ற செய்தியை மனதில்கொள்க. இங்கு விவாதிப்பது கைபேசியின் முழு சக்தியையும் நல்லதொரு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் ஒரு உருமாற்ற வசதியாகும்.
மேசைக்கணினி பயன்முறை ஆனது கைபேசியை வெளிப்புற கணினியின் திரையுடன் இணைக்கும்போது பாரம்பரிய ஆண்ட்ராய்டு கைபேசியானது பயனாளர் இடைமுகப்பினை(UI) மேசைக்கணினி-நட்புடனான பயனாளர் இடைமுகப்பாக(UI) மாற்றுகிறது. இது விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் காண்பிப்பதை போன்றே காட்சியளிக்கிறது. திரையின் அடிப்பகுதியில் ஒரு பணிப்பட்டி உள்ளது, மேலும் மிதக்கும் சாளரங்களில் பயன்பாடுகள் திறக்கப்படுகின்றன, அவற்றை தேவையெனில் சிறியதாக செய்திடலாம், அல்லது பெரிதாக்கிடலாம். இது மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் நம்முடைய கைபேசி மட்டுமேயாகும் – நம்முடைய அனைத்து பயன்பாடுகள், பல்லூடகம், கோப்புகள் ஆகியவைகூட உள்ளன.
எந்தெந்த ஆண்ட்ராய்டு கைபேசிகளில் மேசைக்கணினி பயன்முறை உள்ளது?
பெரும்பாலான சிறந்த ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ளமைக்கப்பட்ட மேசைக்கணினி பயன்முறையாக இருப்பதை அறிந்து நாம்ஆச்சரியப்படலாம். உற்பத்தியாளரைப் பொறுத்து அதன் பெயர் மாறுபடும், ஆனால் பொதுவான நோக்கம் ஒன்றே.
Samsung இன் Galaxy
சாம்சங்நிறுவனமானது 2017 முதல் அதன் முதன்மை கைபேசிகளில் மேசைக்கணினி பயன்முறையைச் சேர்த்துவெளியிட்டு வருகிறது. இது “DeX” என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு சாதனங்களில் சிறந்த செயல்படுத்துதலாக இருக்கலாம்.
கேலக்ஸி S8 , நோட் 10 முதல் ஒவ்வொரு கேலக்ஸி S தொடரும் DeX ஐ ஆதரிக்கிறது. கேலக்ஸி Z தொடருக்கு, நமக்கு Fold 2 அல்லது அதற்குப் பிந்தையது அல்லது Flip 7 அல்லது அதற்குப் பிந்தையது தேவைப்படும். ஆனால் கேலக்ஸி A தொடர் .போன்ற பிற கேலக்ஸி சாதனங்கள் DeX ஐ ஆதரிக்காது.
Googleஇன் Pixel
மேசைக்கணினி பயன்முறை என்பது பிக்சல் கைபேசிகளுக்கான மிகச் சமீபத்திய மேம்பாடாகும். பிப்ரவரி 2026 இல் இந்த கட்டரையை எழுதும் நேரத்தில், கூகிளின் மேசைக்கணினி பயன்முறை இன்னும் பீட்டா கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும், அதை வேகப்படுத்த இந்நிறுவனம் சாம்சங்குடன் இணைந்து பணியாற்றி வருகிறது, மேலும் இது ஏற்கனவே மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது.
பிக்சல் 8 தொடர், பிக்சல் 9 தொடர், பிக்சல் 10 தொடர் , Pixel Fold ஆகிய கைபேசிகளில் மேசைக்கணினி பயன்முறையை முயற்சி செய்யலாம். ஆனால் Pixel A தொடர் சாதனங்களில் இந்த பயன்முறைஆதரிக்கப்படவில்லை.
மற்ற ஆண்ட்ராய்டு கைபேசிகள்
கூகிளின் மேசைக்கணினி பயன்முறையின் அருமையான செய்தி என்னவென்றால், அது AOSP இல் சேர்க்கப்பட்டுள்ளது, இதை உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மென்பொருளுக்கான கட்டமைப்பாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது, இறுதியில், பெரும்பாலான ஆண்ட்ராய்டு கைபேசிகளில் உள்ளமைக்கப்பட்ட சொந்த மேசைக்கணினி பயன்முறை இருக்கும்.
தற்போதைக்கு, சாம்சங் அல்லது பிக்சல் கைபேசிகளை சேர்க்காத ஆண்ட்ராய்டு மேசைக்கணினி பயன்முறைக்கான நம்முடைய சிறந்த வாய்ப்புகள் Huawei , Motorola ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் Huaweiஇன் “Easy Projection” எனும் பயன்முறையைக் கொண்டுள்ளது. Motorola ஆனதுஅதன் மேசைக்கணினி பயன்முறையை “Ready For,” என்று அழைக்கிறது, மேலும் இது “Smart Connect.” உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மேசைக்கணினி பயன்முறையை எவ்வாறு பயன்படுத்துவது – நாம் நினைப்பதை விட இது மிகஎளிதானதாகஉள்ளது.எல்லாம்சரி, இப்போது இதனுடைய நல்ல செயல்பாடுகளுக்கு வருவோமா. நம்மிடம் மேற்கூறியவாறான இணக்கமான கைபேசி இருப்பதாகக் கருதினால், மேசைக்கணினி பயன்முறையைப் பயன்படுத்துவது ஆச்சரியபடுகின்ற வகையில் மிகஎளிதானதாகும். செயல்முறையின் மிகவும் கடினமான பகுதி கைபேசியை வெளிப்புற கணினித்திரையுடன் இணைப்பதாகும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி HDMI முதல் USB-C அல்லது DisplayPort முதல் USB-C adapter ஆகும் – இது அமேசானில் $20க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றது.
குறிப்பு: சாம்சங்கின் DeX, ஆனது Miracast இன் திரைபிரதிபலிப்பு மூலம் காட்சிகளுக்கு கம்பியில்லா இணைப்பையும் ஆதரிக்கிறது. இது மிகவும் குறைவான பயன்பாட்டு வழக்கமாகும், எனவே இந்த வழிகாட்டியில் கம்பியுடன்கூடிய வழிமுறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு எளிமையான plug and play. ஆகும். நம்முடைய கைபேசியை கம்பியின் மூலம் வெளிப்புற கணினியின்திரையுடன் இணைத்து, நம்முடைய கைபேசியில் தோன்றும் மேல்மீட்புப்பட்டியின் செய்தியை ஏற்றுக்கொள்க. நம்முடைய கணினியின்திரையில் ஒரு மேசைக்கணினி சூழல் நிரப்பப்படுவதை காணலாம்.
வாழ்த்துக்கள், நாம் இப்போது மேசைக்கணினி பயன்முறையில் நுழைந்துவிட்டோம். அடுத்து கண்டுபிடிக்க வேண்டிய செயலியின் இடைமுகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதுதான். மேசைக்கணினி போன்ற தீர்வு Bluetooth விசைப்பலகை இடம்சுட்டியை இணைப்பதாகும். அது ஒரு உண்மையான “கணினி” போன்று உணர வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படுவோம்.
இன்னும் ஈடுபாடு இல்லாத வழிமுறை நம்முடைய கைபேசியை touchpadஐ, விசைப்பலகையாகப் பயன்படுத்துவதாகும். தேர்ந்தெடுக்கப்படும்போது touchpadஐத் திறக்கும் அறிவிப்பை நம்முடைய கைபேசியில் வைப்பதன் மூலம் சாம்சங் நிறுவனமானது இதை மிகவும் எளிதாக்குகிறது. இது multi-touch சைகைகள், உரை உள்ளீட்டை ஆதரிக்கிறது. பிக்சல் உரிமையாளர்கள் இன்னும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இந்த மூன்றாம் தரப்பு “LG இரட்டைத் திரைக்கான touchpad” எனும் பயன்பாடு செயல்படுகிறது (LG தேவையில்லை), ஆனால் இது சற்று தரமற்றது.
அடுத்து, மேசைக்கணினி சார்ந்த வாய்ப்புகளுக்குள் உள்நுழைவுசெய்திடலாம். அமைவுகளைத் திறந்து இணைக்கப்பட்ட சாதனங்களுக்குச் செல்க (> Samsung DeX) என்றவாறு. கணினியின்திரையின் அமைப்புகளை சரிசெய்ய“External displays” அல்லது “Connected display” என்பதைத் தேடிகண்டுபிடித்திடுக. சாம்சங்கில் இதே பகுதியில் சுட்டி, விசைப்பலகை ஆகிய வாய்ப்புகள் உள்ளன. பிக்சல் கைபேசியில், அந்த அமைவுகளைக் கண்டறிய “mouse” , “keyboard” ஆகியவற்றைத் தேடிகண்டுபிடித்திடலாம்.
அவ்வளவுதான் கண்டிப்பாக, பணிப்பட்டியில் எந்தெந்த பயன்பாடுகள் உள்ளன என்பதை நாம் தனிப்பயனாக்க விரும்புவுோம், மேசைக்கணினிபில் சில பொருட்களை (widgets) வைக்க வேண்டும் (இப்போது சாம்சங் மட்டும்), , அனைத்து திறன்களையும் ஆராய வேண்டும். இது வெவ்வேறு பலங்களுடனும், பலவீனங்களுடனும் முற்றிலும் மாறுபட்ட சூழலில் கைபேசியின். எதிர்கால மீச்சிறு கணினியின் பயன்பாட்டிற்கு கொண்டுவருக.

Leave a Reply