AnduinOS ஆனது இயக்கமுறைமையின் சிறந்த வெளியீடுகளில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது. விண்டோவிலிருந்து மாறுவதை முடிந்தவரை சிரமமில்லாததாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இதன் சமீபத்திய பதிப்பு 2.0 வெளியீடு, முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட நிலைத்தன்மை, நேர்த்தியான பயனர் இடைமுகம் , குறைவான தழுவல் உணர்வு ஆகியவற்றினை வழங்குகிறது.
பழக்கமான, விளம்பரமில்லா மாற்றம்
AnduinOSஆனதுபுதிய லினக்ஸ் பயனர்களுக்குப் பழக்கமான சூழலையும் முக்கிய லினக்ஸ் நன்மைகளையும் வழங்குவதன் மூலம் இடைவெளியை நிரப்புகிறது:
- பழக்கமான அறிமுகம்: இதிலுள்ள ஒருநிறுவுகைவழிகாட்டி ஆனது , பயனர்களை விண்டோஸ் 11 அல்லது வகைகளின் பட்டி இடஅமைவுகளைத் தேர்வுசெய்யவும், பிரபலமான மென்பொருளை நிறுவுகை செய்திடவும், Xbox கட்டுபாட்டு ஆதரவை (xpadneo வழியாக) இயக்கவும், விண்டோவின் செயலியின் இணக்கத்தன்மைக்காக Bottlesகளை உள்ளமைக்கவும் அனுமதிக்கிறது.
- கவனச்சிதறல் இல்லாத சூழல்: விண்டோவைப்போன்றில்லாமல், AnduinOS ஆனது கட்டாய இணைய கணக்குகள், தொடர்ச்சியான வசதி அறிவிப்புகள் உப்பியமென்பொருள் ஆகியவற்றை அறவே நீக்குகிறது.
- ஆழ்ந்த தனிப்பயனாக்கம்: GNOME நீட்டிப்புகள்,ArcMenu போன்ற கருவிகளின் உதவியுடன், பயனர்கள் விண்டோபோன்ற தோற்றத்தை இதில் பொருத்தலாம் அல்லது தளவமைப்பு, வண்ணங்கள், ஒளிபுகும் தன்மையை முழுமையாகத் தனிப்பயனாக்கலாம்.
செயல்திறனும் தினசரிப் பயன்பாடும்
பயன்பாட்டிற்குத் தயாராக, அருகலை (Wi-Fi), ஊடலை(Bluetooth) , ஒலிப்பதற்கான வன்பொருள் ஆதரவு ஆகியவற்றுடன் தடையின்றி செயல்படுகிறது. முக்கிய செயல்பாட்டு மாற்றங்கள் பின்வருமாறு:
- Flatpak மீதான கவனம்:இந்த OSஆனது, உபுண்டுவின் Snap தொகுப்புகளைக் கைவிட்டு, Flatpak-ஆல் இயக்கப்படும் ஒரு app storeஐ பயன்படுத்துகிறது. இதில் Vivaldi ,Lutris போன்ற கருவிகள் எளிதாக நிறுவுகைசெய்யப்படுகின்றன.
- விளையாட்டுகளின் அமைப்பு:சொந்த வெள்ளோட்ட நிறுவுகையில் விடுபட்ட சார்புநிலைகள் (dependencies) சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றாலும், துவக்கத்தில் மெதுவாகத் தொடங்கினாலும், Flatpak பதிப்பு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது.
செயல்திட்டத்தின் ஆயுட்காலம் குறித்த தொடக்கநிலையிலானக் கவலைகள் தணிந்து வருகின்றன. இதன் முன்னணி உருவாக்குநர்—முன்னர் மைக்ரோசாஃப்ட் ஊழியராக இருந்தவர்—தற்போது இந்த செயல்திட்டத்திற்கு அதிக நேரத்தை ஒதுக்கி, பெருநிறுவன ஆதரவை உள்ளடக்கிய ஒரு வருவாய் ஈட்டும் உத்தியுடன் இதற்குப் பின்புலமாக நல்ல ஆதரவுஅளிக்கிறார். எளிதில் பராமரிக்கக்கூடிய ஒரு பிரகடன மாதிரியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள AnduinOS 2.0, ஒரு சாதாரண உபுண்டு மறுவடிவமைப்பைக் கடந்து நிற்கிறது; இதன் குழு 2041 ஆம் ஆண்டு வரை ஆதரவளிப்பதாக ஒரு உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளது. விண்டோவை விட்டு வெளியேறும் எவருக்கும் இது ஒரு சிறந்த படிக்கல்லாகத் திகழ்கிறது