பெரும்பாலான மக்களுக்குப் பயன்பாட்டு வசதியில் Windows முன்னணியில் இருந்தாலும், சில அன்றாடப் பணிகள் Linux-இல் உண்மையில் எளிமையான வையாகவே உள்ளன. மென்பொருளைப் புதுப்பித்தல் (updating), இயக்கிகளை (drivers) நிர்வகித்தல் , சிக்கல்களைக் கண்டறிதல் ஆகிய அனைத்தும் Linux-க்குச் சாதகமாக அமைகின்றன; இதற்குக் காரணம் அதன் வடிவமைப்பில் துவக்கத்திலிருந்தே சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.
1.அனைத்து மென்பொருட்களையும் ஒரே நேரத்தில் புதுப்பித்தல் – ஒரேயொரு கட்டளையின் மூலம் முழு அமைவையும் நிர்வகிக்கலாம்
Linux-இல், APT, DNF அல்லது Pacman போன்ற ‘தொகுப்பு மேலாளர்கள்’ (package managers), நிறுவுகைசெய்யப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து மென்பொருட்களையும் ஒரு ஒருங்கிணைந்த அமைவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. apt update && apt upgrade போன்ற ஒரு கட்டளையை இயக்குவதன் மூலம், இயக்கமுறைமையானது (OS), இயக்கிகள், விநியோகத்தின் (distribution) களஞ்சியங்கள் (repositories) வழியாக நிறுவுகைசெய்யப்பட்ட அனைத்து செயலிகளின் புதிய பதிப்புகளும் சரிபார்க்கப்படுகின்றன; பின்னர் அவை அனைத்தும் ஒரே முயற்சியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவுகைசெய்யப்படுகின்றன. டஜன் கணக்கான வெவ்வேறு நிரல்களைத் தனித்தனியாகத் திறக்கவோ அல்லது மறைவான அமைப்புகள் பட்டிகளில் (settings menus) உள்ள புதுப்பிப்பு பொத்தான்களைத் தேடவோ வேண்டிய அவசியமில்லை.
இதற்கு மாறாக, Windows-இல் புதுப்பிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத பல அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘Windows Update’ ஆனது இயங்குதளம் , Microsoft Store செயலிகளை நிர்வகிக்கிறது; ஆனால் பெரும்பாலான மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் அவற்றின் சொந்த உள்ளமைக்கப்பட்ட புதுப்பிப்பு முறையைச் சார்ந்திருக்கின்றன, அல்லது மோசமான நிலையில், புதிய நிறுவுகைக்காக (installer) இணையதளத்தை கைமுறையாகச் சரிபார்க்க வேண்டியுள்ளது. இணைய உலாவிகள், பல்லூடகசெயலிகள், ஆக்கப்பூர்வமான கருவிகள், பயன்பாட்டு மென்பொருட்கள் (utilities) ஆகிய ஒவ்வொன்றும் தங்கள் சொந்தப் புதுப்பிப்புச் சுழற்சியை நிர்வகிக்கின்றன; அவற்றில் பல தானாகவே புதுப்பிப்புகளைச் சரிபார்ப்பதில்லை. நவீன Windows பதிப்புகளில் முன்பே நிறுவுகை செய்யப் பட்டிருக்கும் Winget போன்ற கருவிகள், Ninite அல்லது Chocolatey போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் இந்த இடைவெளியை ஓரளவுக்குக் குறைத்துள்ளன; இருப்பினும், ஒரு Linux விநியோகத்தின் களஞ்சியங்கள் செய்யும் அளவுக்கு அனைத்து மென்பொருட்களையும் இவை முழுமையாக உள்ளடக்குவதில்லை.
ஒரு கணினி நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படும்போது இந்த வேறுபாடு ஆனது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. டஜன் கணக்கான செயலிகளைக் கொண்ட ஒரு Linux அமைவை, ஒரேயொரு கட்டளையுடன் , மிகக் குறைந்த செயல்பாட்டின் மூலம் ஓரிரு நிமிடங்களில் முழுமையாகப் புதுப்பித்துவிட முடியும். Windows-இல் அதே பணியைச் செய்யும்போது, பலவிதமான புதுப்பிப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கும், தனிப்பட்ட நிரல்களை மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும், மேலும் சில சமயங்களில் புதுப்பிப்பு வாய்ப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கும்.
2.இயக்கியின் (Driver) ஆதரவு – பெரும்பாலான இயக்கிகள் ஏற்கனவே உருவாக்கமையத்தில் (kernel) இணைக்கப்பட்டுள்ளன
Windows-ஐ விட Linux பெரும்பாலான வன்பொருள் இயக்கிகளை (hardware drivers) வித்தியாசமாகவே கையாளுகிறது: அவற்றை தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்வதற்குப் பதிலாக, பெரும்பாலான இயக்கிகள் நேரடியாக ‘உருவாக்கமையத்தில்(kernel)’ தொகுக்கப்படுகின்றன அல்லது விநியோகத்துடனேயே வரும் தொகுதிகளாக (modules) சேர்க்கப்படுகின்றன. ஒரு புதிய சுட்டி, விசைப்பலகை, இணையவிளையாட்டு அல்லது பெரும்பாலான Wi-Fi பொருத்திகளையும் வலைபின்னல் அட்டைகளையும் இணைத்தாலே போதும்; உருவாக்கமையம் பொதுவாக எந்தவிதமான கூடுதல் அறிவிப்புகளோ அல்லது பதிவிறக்கங்களோ இல்லாமலேயே அந்தச் சாதனத்தை தானாகவே அடையாளம் கண்டு அமைத்துவிடுகிறது. உற்பத்தியாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதரவளிப்பதை நிறுத்திவிட்ட பழைய வன்பொருட்களுக்கு இது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், அவற்றின் இயக்கிகள் (drivers) பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவுச் சுழற்சியுடன் பிணைக்கப்படாமல், திறமூல சமூகத்தால் ஒருமுறை எழுதப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
Windows-இல் பொதுவாகச் சற்று கூடுதல் செயல்பாடு தேவைப்படுகிறது. பொதுவான பாகங்களுக்கான (components) இயக்கிகளை (drivers) தானாகவே நிறுவுகைசெய்வதில் Windows Update மேம்பட்டிருந்தாலும், குறிப்பாக அச்சுப்பொறிகள், வருடிகள் , சிறப்புச் சாதனங்கள் (peripherals) ஆகியவற்றிற்கு சமீபத்திய பதிப்பைப் பெற உற்பத்தியாளரின் இணையதளத்தைப் பார்வையிடுமாறு அது அடிக்கடி பயனர்களைக் கோருகிறது. புதிய Windows கணினியை அமைத்த எவருக்கும் ‘Device Manager’-ஐத் திறந்து, மஞ்சள் நிற எச்சரிக்கை குறியீட்டைக் கொண்ட ஒரு பாகத்தைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய சரியான இயக்கியின் தொகுப்பைத் தேடும் நடைமுறை தெரிந்திருக்கும்.
இந்த அனுகூலம் எல்லா இடங்களிலும் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியுரிமை GPU இயக்கிகள் (குறிப்பாக புதிய NVIDIA அட்டைகளுக்கு) Linux-இல் சரியாக நிறுவுகைசெய்து அமைப்பதற்கு, Windows-இல் ஒரு ‘installer’-ஐ இயக்குவதை விடச் சற்று சிக்கலானதாக இருக்கலாம்; மேலும், மிகப்புதிய அல்லது அரிதான வன்பொருள்களுக்கு (hardware) அறிமுகத்தின்போது Linux ஆதரவு இல்லாமலும் போகலாம். ஆனால், சந்தையில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அன்றாடப் பயன்பாட்டுப் பாகங்களுக்கு, இயக்க முறைமையிலேயே (OS) இயக்கியின் ஆதரவை நேரடியாக இணைக்கும் Linux-இன் அணுகுமுறை, அமைப்பதற்கான நேரத்தை கணிசமாகக் மிச்சப்படுத்துகிறது. இது மிகவும் சிறப்பான ஒரு செய்தியாகும்.
3.சிக்கலை தீர்த்தல் (Troubleshooting) – கணினியின்அமைவுப் பதிவுகள் (System logs) சிக்கல்களை எளிமையான மொழியில் விளக்குகின்றன.
Linux அமைவில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போது, அதற்கான காரணத்தைக் கண்டறிவது என்பது பொதுவாக எளிமையான, தெளிவான மொழியில் எழுதப்பட்ட பதிவு கோப்பை (log file) வாசிப்பதைப் பொறுத்தது. journalctl அல்லது dmesg போன்ற கட்டளைகளும், /var/log கோப்பகத்தின் உள்ளடக்கங்களும், என்ன தோல்வியடைந்தது, எந்தச் செயல்முறை (process) சம்பந்தப்பட்டது ,பெரும்பாலும் அதற்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. இவை பெரும்பாலான Linux விநியோகங்களில் (distributions) ஒரே மாதிரியான , தேடக்கூடிய வடிவத்தில் வழங்கப்படுகின்றன. இயக்க முறைமையும் அதில் இயங்கும் பெரும்பாலான மென்பொருட்களும் திறமூல (open source) வகையைச் சேர்ந்தவை என்பதால், பிழைச் செய்திகள் விரிவான விளக்கத்தைக் கொண்டிருக்கின்றன; மேலும், சிக்கலுக்கான காரணமான குறிப்பிட்ட நிரல் வரி (line of code) அல்லது உள்ளமைவுக் கோப்பை (configuration file) கண்டறிவது வரை பெரும்பாலும் சாத்தியமாகிறது.
Windows-இல் சிக்கல் தீர்க்கும் செயல்முறை பெரும்பாலும் குறைவான வெளிப்படைத்தன்மையுடனேயே தொடங்குகிறது. ‘Event Viewer’ இருந்தாலும் , கணினிச் செயல்பாடுகளைப் பதிவு செய்தாலும், அதில் உள்ள பதிவுகள் பெரும்பாலும் ‘hexadecimal’ பிழைக் குறியீடுகள், பொதுவான விளக்கங்களால் நிரம்பியிருக்கும்; அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவே தனித்தனியாகத் தேட வேண்டியிருக்கும். பல Windows பிழைகள் தெளிவற்ற உரையாடல் பெட்டிகள் (dialog boxes) மூலமாகவே வெளிப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, எந்த விளக்கமும் இல்லாமல் ஒரு நிரல் திடீரென மூடிக்கொள்வது அல்லது தனித்தனியாகத் தேட வேண்டிய எண்ணின் குறிமுறைவரிகளைக் காட்டும் செய்தி போன்றவை. இயக்க முறைமை , அதன் இயக்கிகளில் பெரும்பகுதி ‘மூடிய மூலங்களின் (closed source)’ வகையாக இருப்பதால், சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தின் தெளிவான விளக்கத்திற்குப் பதிலாக, சமூககுழுவின் (community) மூலம் கிடைக்கும் தீர்வுகள் பெரும்பாலும் ஊகங்கள் அல்லது தற்காலிக மாற்று வழிகளாகவே (workarounds) மட்டுப்படுத்தப்படுகின்றன.
இணையத்தில் உதவி தேடும்போது இந்த வேறுபாடானது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட லினக்ஸ் பிழைச் செய்தியைத் தேடுபொறியில் நேரடியாகத் தேடினால், அது பொதுவாக அந்தச் சிக்கலைத் தீர்க்கும் ஒரு குழுவின் உரையாடலுக்கோ அல்லது ஆவணப் பக்கத்திற்கோ இட்டுச் செல்லும். விண்டோஸ் பிழைக் குறிமுறைவரிகளைத் தேடினால், பெரும்பாலும் தொடர்பில்லாத முடிவுகள், காலாவதியான ஆலோசனைகள் அல்லது பொருந்தக்கூடிய அல்லது பொருந்தாத பொதுவான பழுதுநீக்கும் வழிமுறைகள் ஆகியவற்றின் கலவையே கிடைக்கும்.