KDE போன்ற திறமூல மென்பொருட்களானவை, தொழில்நுட்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் அணுகக்கூடியவைகளாகும். குறிமுறைவரிகளை எழுதுவதன்மூலமும், வடிவமைத்தலின் மூலமும், மொழிபெயர்த்தலின் மூலமும், அல்லது வெறுமனே OS-ஐப் பயன்படுத்துவதன்நமூலமும், அதன் வளர்ச்சிக்கு தீவிரமாகப் பங்களிக்கலாம்.
- முடிந்தவரை KDE-ஐப் பயன்படுத்துக
மேசைக்கணினியை இயக்குவது மட்டுமே மேம்படுத்துநர்கள் சூழலமைப்பை மேம்படுத்த உதவுகிறது:
- தானியங்கியான செயலிழப்பின் அறிக்கைகள்: Dr Konqi போன்ற உள்ளமைக்கப்பட்ட கருவிகள், மேம்படுத்துநர்கள் சிக்கல்களைப் பிழைதிருத்தம் செய்ய உதவும் வகையில், கணினியின் விவரங்களுடன் செயலிழப்பின் அறிக்கைகளைத் தானாகவே அனுப்புகின்றன.
- தொலைஅளவியின்தரவு:பயன்பாட்டுத் தரவு, செயலி அளவீடுகளை அநாமதேயமாகப் பகிர்ந்துகொள்ள, கணினி அமைவுகளில் உள்ள பயனர் பின்னூட்டத் தொகுதியை இயக்கிடுக.
- பிழைகள் , வசதிஆலோசனைகளை கைமுறையாகப் புகாரளித்திடுக
அதிகசிக்கலான சிக்கல்கள் அல்லது தானியங்கி அறிக்கை இல்லாத பயன்பாடுகளுக்கு, KDE Bugzilla எனும் சிக்கல் கண்காணிப்பான் வழியாக விரிவான பிழை அறிக்கைகளை சமர்ப்பித்திடுக , வசதியின் கோரிக்கைகளைச் சமர்ப்பித்திடுக அல்லது பாதுகாப்பு பாதிப்புகள் குறித்து மேம்படுத்துநர்களை எச்சரித்திடுக.
- வடிவமைப்புத் திறன்களை வெளிப்படுத்திடுக
உள்ளுணர்வுமிக்க இடைமுகங்களையும் காட்சிகளையும் உருவாக்க மேம்படுத்துநர்களுக்கு பெரும்பாலும் உதவி தேவைப்படுகிறது. கட்டணமற்ற கட்டற்ற மென்பொருளை (எ.கா., GIMP, KolourPaint) அல்லது Figma போன்ற கூட்டுப்பணிகளுக்கான கருவிகளைப் பயன்படுத்தி வால்பேப்பர்கள், உருவப்பொத்தான்கள், இடம்சுட்டிகள் அல்லது வலைப்பக்கங்களை வடிவமைக்கத்திடுக.
- செயலியின் உரையையும் ஆவணங்களையும் மொழிபெயர்த்தல்
KDEஆனது உலகளவில் 60முதல் –80வரையிலான மொழிகளை ஆதரிக்கிறது. KDE உள்ளூர்மயமாக்கல் குழு, தனிப்பட்ட அஞ்சல் பட்டியல்களின் மூலம் மொழி மொழிபெயர்ப்புகள், உருவப்பொத்தானை பன்னாட்டுமயமாக்கல் ,உரை குறியாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
- ஆவணங்களை எழுதுதல்
ஆங்கிலத்தில் நன்றாக எழுதக்கூடியவராக இருந்தால், இறுதிப் பயனர் கையேடுகள், வழிகாட்டிகள், இணையத்தின் விக்கிகளுக்குப் பங்களித்திடுக. kde-doc-english என்பதுஅஞ்சல் பட்டியல், ஆவண எழுத்தாளர்களுக்கான மையமாகச் செயல்படுகிறது.
- தகவலைப் பரப்புதல் (சந்தைப்படுத்தல் & விளம்பரம்)
சமூக ஊடக உத்தியாளர்களும் தொடர்பாளர்களும், வலைப்பதிவு இடுகைகளை எழுதவும், தொழில்நுட்ப மாநாடுகளில் கலந்துகொள்ளவும், புதிய பங்களிப்பாளர்களைச் சேர்க்கவும், சாத்தியமான பயனர்களுக்கு மேசைக் கணினியைச் சந்தைப்படுத்தவும் KDE விளம்பரக் குழுவில் சேர்ந்திடுக.
- நிரலாக்க பங்களிப்புகளைச் செய்திடுக
நிரலாக்கத்தை எழுத முடிவு செய்தால், KDE கட்டணமற்ற மேம்படுத்துநர் கருவித்தொகுப்புகள், kde-devel அஞ்சல் பட்டியல் வழியாக வழிகாட்டுதல், ஒருவருக்கொருவர் வழிகாட்டும் செயல்திட்டங்களை வழங்குகிறது. பிழை வகைப்படுத்தல் , மென்பொருள் சோதனை போன்ற நிரலாக்கம் எழுதாத தொழில்நுட்பப் பணிகளிலும் மேம்படுத்துநர்கள் உதவலாம்.
தொடங்குதல்
ஒவ்வொரு பங்களிப்பும்—எவ்வளவு சிறியதாக இருந்தாலும்—இலட்சக்கணக்கான பயனர்களுக்காக சிறந்த மென்பொருளை உருவாக்க உதவுகிறது. ஏதேனுமொரு செயல்திட்ட அஞ்சல் பட்டியலில் சேர்ந்து பங்களிக்கத் தொடங்கிடுக,இதற்காக முதன்மையான KDE Get Involved எனும் பக்கத்தைப் பார்வையிடுக.