தற்போது செய்யறிவு(AI) ஆனது லினக்ஸ் சூழலில் வேகமாக நுழைந்து வரும் நிலையில், “செய்யறிவினை(AI) மையமாகக் கொண்ட ( AI-native )” மேசைக்கணினியை உருவாக்கப் பல்வேறு செயல்திட்டங்கள் தனித்துவமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன. இத்துறையில் முன்னணியில் உள்ள அவ்வாறான ஐந்து லினக்ஸ் விநியோகங்களும் உபுண்டுவின் (Ubuntu) குறிப்பிடத்தக்க வரவிருக்கும் வசதி ஆகியவை இந்த கட்டுரையில் இப்போது காண்போம்.
1. Omarchy: Arch Linux-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த Omarchy ஆனது செய்யறிவு(AI) முகவர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக்கூடிய ஒரு இயக்கமுறைமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்முறை அமைக்கும்போது, Claude Code, Codex அல்லது Copilot CLI போன்ற ஒரு இயல்புநிலை செய்யறிவு(AI) முகவரைத் தேர்ந்தெடுக்கலாம். இது பிழைகளைச் சரிசெய்தல், தீம்களை (themes) உருவாக்குதல் , எளிய உரை விளக்கங்களின்மூலம் செயலிகளை உருவாக்குதல் என்பன போன்ற பணிகளுக்கு உதவுகிறது.
2. Shadowfetch Linux: இது Shadowfetch, ‘Mission Control’ எனப்படும் அமைப்பின் மூலம் பாதுகாப்பிற்கும் மனிதக் கண்காணிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நம்முடைய ஒப்புதல் இல்லாமல் செய்யறிவு(AI) முகவர் செய்யும் எந்தச் செயலும் உறுதிப்படுத்தப்படாது; மாற்றங்கள், சோதனைகள் , வெளியீடுகள் ஆகிய அனைத்தையும் இது முதலில் நம்முடைய பார்வைக்குக் கொண்டுவருகிறது. இது இணையத்தின் மேககணினியின் பணிகளுக்கான “Fire” எனும் பயன்முறை, இணைய இணைப்பில்லாத “Ice” எனும் பயன்முறை ஆகிய இரண்டு பயன்முறைகளை வழங்குகிறது; அதே சமயம், இந்த முகவரானது தேவையற்ற நிலையில் கணினி கோப்புகளை அணுகுவதைத் தடுக்க ‘Firebreak’ எனும் பாதுகாப்பு எல்லையைப் பயன்படுத்துகிறது.
3. Gnoppix AI Linux: நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் Debian-அடிப்படையிலான செயல்திட்டமான Gnoppix ஆனது , Mistral 7B போன்ற செய்யறிவு(AI)மாதிரிகளை நம்முடைய கணினியிலேயே (locally) , இணையத் தொடர்பின்றி (air-gapped) என்பதை இயக்குவதன் மூலம் நம்முடைய தரவின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட மறைகுறியாக்கம்(encryption), VPN, தனியுரிமையை மையமாகக் கொண்ட தேடுபொறி , மாதிரிகளை பரிசோதித்துச் செம்மைப்படுத்துவதற்கான பாதுகாப்பான இடம் ஆகியவை அடங்கும்.
4. MakuluLinux: இந்த MakuluLinux-என்பதில் ‘Electra’ எனும் செய்யறிவு(AI)உதவியாளர் உள்ளது; இது மிதக்கும் திரைப்பட்டியின் (floating screen bar) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. உரையாட, நிரல் எழுத அல்லது கணினிப் பணிகளைச் செயல்படுத்த எளிய ஆங்கிலத்தில் கட்டளைகளை உள்ளிடலாம். இது API திறவுகோள்கள் (API keys) இல்லாமலேயே தனது சொந்த செய்யறிவு(AI) பின்னணியை இயக்குகிறது, கடந்தகால உரையாடல்களை நினைவில் கொள்கிறது, மேலும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் தானாகவே கணினியிலேயே உள்ள மாதிரிக்கு மாறிக்கொள்கிறது.
5. Deepin: கணினி அளவிலான செய்யறிவை(AI) தொடக்கத்திலேயே ஏற்றுக்கொண்ட Deepin ஆனது , தனது UOS AIஎனும் அடுக்கை (layer) உலாவி, மின்னஞ்சல் செயலி , கணினித் தேடல் ஆகியவற்றில் நேரடியாக ஒருங்கிணைக்கிறது. இதன் சிறப்பம்சமான ‘Intelligent Search’, துல்லியமான கோப்புப் பெயர்களுக்குப் பதிலாக ” (financial spreadsheets modified yesterday)” போன்ற இயல்பான சொற்றொடர்களைப் பயன்படுத்தி கோப்புகளைக் கண்டறிய நம்மை அனுமதிக்கிறது.
சிறப்புக் குறிப்பு: உபுண்டு ஆனது இன்னும் முழுமையாக செய்யறிவு(AI)சார்ந்த வெளியீடாக இல்லாவிட்டாலும், உபுண்டு போன்ற வரவிருக்கும் வெளியீடுகள் மைனாவை அறிமுகப்படுத்துகின்றன—இது நம்முடைய கணினியில் முழுமையாக இயங்கும், விசைப்பலகை குறுக்குவழியால் தூண்டப்படும் ஒரு கணினியிலேயே உள்ள, இணையஇணைப்பிலாத போதும் பேச்சினை–உரையாக எழுதும் கருவியாகும்.