Waze என்பது அதன் விரைவான போக்குவரத்து நிலவரங்கள் , சாலை எச்சரிக்கைகள் காரணமாக பல ஓட்டுநர்களுக்குப் பிடித்தமான வழிசெலுத்தல் செயலியாக உள்ளது, ஆனால் இந்த ஆண்ட்ராய்டு தானியங்கி செயலிஆனது பயணங்களின் போது ஆண்ட்ராய்டு கைப்பேசியின் மின்கலணின் மின்சாரத்தினை விரைவாக காலிசெய்துவிடும். இந்த செயலிகளை மாற்றுவதற்குப் பதிலாக, ஆண்ட்ராய்டு அமைவுகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திறன்பேசியின் மின்கலணின்மின்சாரம் விரைவாககாலியாகும் சிக்கலைஎளிதாக சரிசெய்யலாம்.
Wazeஆனது மின்கலணின்மின்சாரம் காலியாவதை சரிசெய்வதற்கான முக்கிய அமைப்புகள் பின்வருமாறு
• இருப்பிட அணுகலைக் கட்டுப்படுத்திடுக (Restrict Location Access): இயல்பாக, Wazeஎனும் செயலியானது நம்முடைய இருப்பிடத்தை எப்போதும் இடைவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கக்கூடும்.அதனால் இந்த செயலியைப் பயன்படுத்தும் போது மட்டும் இருப்பிட அனுமதிகளை அமைத்திடுக, இதன் மூலம் அது வழிசெலுத்தலின் போது மட்டுமே GPS-ஐ அணுகமுடியும் இதற்காக (Settings > Apps > Waze > Permissions > Location) என்றவாறு செயற்படுத்திடுக.
• மின்கலண் மேம்படுத்தலைச் சரிபார்த்திடுக: Waze-க்கு வரம்பற்ற மின்கலண் பயன்பாட்டை வழங்குவதைத் தவிர்த்திடுக. இந்த செயலியானது தேவையற்ற பின்னணி வளங்களைப் பயன்படுத்தாதவாறு, ஆண்ட்ராய்டு செயல்படும் கைப்பேசியில் நிலையான மின்கலண் மேலாண்மையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்க இதற்காக (Settings > Apps > Waze > Battery) என்றவாறு செயற்படுத்திடுக..
• பின்னணி செயல்பாட்டைக் கட்டுப்படுத்திடுக(Limit Background Activity): நாம் நம்முடைய இலக்கை அடைந்து வாகனத்தை நிறுத்தியவுடன், Waze எனும் செயலியானது இனி இயங்கத் தேவையில்லை எனும்போது . அமைவுகளின் வரம்புகளின் மூலம் அது பின்னணியில் நீடிப்பதைத் தடுத்திடுக .அதற்காக (Settings > Battery > Background usage limits).என்றவாறு செயற்படுத்திடுக.
• மின்கலண் பயன்பாட்டைக் கண்காணித்திடுக(Monitor Battery Usage): திரையின் பிரகாசம், புளூடூத் அல்லது செல்லிட சைகையின் வலிமை போன்ற காரணிகளுடன் ஒப்பிடுகையில், Waze எனும் செயலிதான் உண்மையான காரணமா என்பதைச் சரிபார்க்க, பயணங்களின்போது மின்கலண் பயன்பாட்டைக் கண்காணித்திடுக அதற்காக(Settings > Battery > Battery usage). என்றவாறு செயற்படுத்திடுக.
இட அணுகல், பின்னணி அனுமதி ஆகியவற்றினைச் சரிசெய்வது, ஆண்ட்ராய்டு தானியங்கிசெயலில் முழுமையான வழிசெலுத்தல் இயல்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, Wazeஎனும் செயலியானது நம்முடைய கைப்பேசியின் மின்கலணின் மின்சக்தியைத் தேவையற்ற முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.