பல்வேறு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்து வருகிறோம். கணினிகளில் நிரலாக்க குறிப்புகளை இயக்கி பார்ப்பதற்கு பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors) காண கிடைக்கும்.
மொபைல் கருவிகளில் கூட பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors )இருக்கின்றன. இருந்த போதிலும், இவை கட்டற்ற வகையில் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. மேலும், இவற்றின் செயல் திறன் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.



நிரலாக்கத்தின் ஒவ்வொரு வரிக்கும், வெவ்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
ஆனால், இன்றைக்கு நான் குறிப்பிட விருப்பும் எடிட்டர் செயலியானது, பைத்தான் நிரல் ஆக்க மொழியின் நிரலாக்க குறிப்புகளை சிறப்பாக இயக்குகிறது.
மேலும், உங்களுக்கு விருப்பமான மொழிகளை இங்கு வழங்கப்பட்டு இருக்கும் மொழி வாய்ப்புகளின் மூலம் பதிவிறக்கி இயக்கி பார்த்துக் கொள்ள முடியும்.
இருந்த போதிலும், சில மொழிகளில் பயன்படுத்தி பார்க்கும்போது செயல்பாட்டு குறைபாடுகள் இருப்பதை கவனிக்க முடிந்தது. எனவே, என்னை பொறுத்த அளவிற்கு பைத்தான் மொழி நிரலாக்கங்களை செய்து பார்ப்பதற்கும் அவற்றை சேமித்து வைப்பதற்கும் இந்த செயலி சிறப்பானதாக இருக்கும்.
அதற்காக மிகப்பெரிய பைத்தான் ப்ரோக்ராம்களை இயக்கி பார்ப்பது இங்கே சற்று கடினமான விஷயம்தான். இருந்த போதிலும், நீங்கள் இப்பொழுதுதான் பைத்தான் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், சிறிய நிரலாக்கங்களை இயக்கி பார்த்து பயிற்சி செய்து கொள்வதற்கும் கணினியை கொண்டு செல்ல முடியாத இடங்களிலும் சிறுசிறு பயிற்சிகளை செய்வதற்கும், உங்களிடம் படிக்கும் மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் கணினி இல்லாத பட்சத்தில் அடிப்படையாக கற்றுக் கொள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலியானது பெரிதாக இடத்தையும் அடைத்துக் கொள்வதில்லை. ஓரளவுக்கு அடிப்படையான நிரலாக்கங்களை சிறப்பாகவே கையாளுகிறது.
இந்த செயலியின் பெயர் Acode editor ஆகும். இதற்கான fdroid தளத்தின் இணைப்பை கீழே வழங்கி இருக்கிறேன்.
f-droid.org/en/packages/com.foxdebug.acode/
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com