கணினியில்(செயற்கைநுன்னறிவு(செநு(AI))) உருவாகிவளர்ந்தவரும்போது, அது முன்வைக்கின்ற பல்வேறு நெறிமுறைகளுக்கேற்ப நடைமுறையிலான சவால்களுக்கான தீர்வுகளுடன் நாம் பின்தொடர வேண்டும். இந்த கட்டுரையானது செநு(AI)இன் புதிய போக்குகள் , நம்முடைய தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினை பற்றிய சுருக்கமான விவரமாகும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ஆழ்கற்றல் (DL), மரபணு வழிமுறைகள் நரம்பியல் வலைபின்னல்கள் ஆகியவை ஒரே மாதிரியானவை அல்லது குறிப்பிட்ட ஒரே செயலையேச் செய்கின்றன, ஆனால் அவை தருக்கமுறைகளால் மேன்மையடைகின்றன என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது.
உண்மையில், செயற்கை நுண்ணறிவு (செநு(AI) என்பது தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை கணித, புள்ளியியல் மாதிரிகள் (எ.கா., நிகழ்தகவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி கணினிகளால் மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கின்ற ஒரு பாரம்பரியமான மாதிரியாகும்.பின்னர் இயந்திர கற்றல் (ML) மனிதமூளை செயல்பாடுகளின் நிரலாக்க மாதிரிகளை உருவாக்கவும், பல்வேறு கற்றல் அணுகுமுறைகள் மூலம் செநு(AI) மாதிரிகளின் நடத்தையை மேம்படுத்தவும், எதிர்கால கணிப்புகளுக்கு இயந்திர கற்றல் மாதிரிகளின் முடிவுகளை சேமிக்கவும் வடிவமைக்கப்பட்டது. இது மனித மூளையின் முக்கிய சேமிப்பு அடுக்கான நரம்பியல் வலைபின்னலமைப்பின் பயன்பாட்டால் ஈர்க்கப்படுகின்றது. இந்த நரம்பியல் வலைபின்னல் அடிப்படையிலான தீர்வின் செயலாக்கதிறனை மேம்படுத்த, பொருளை கண்டறிதல், பகுப்பாய்வு திறன்கள் என்பன போன்ற பல்வேறு மனித மூளையின் செயல்பாடுகளை விரைவாக செயலாக்குவதற்கும் உருவகப்படுத்துவதற்கும் விநியோகிக்கப்பட்ட மாதிரியாக செயல்படுத்தப்பட்டது.
செநு(AI) ஆனது இக(ML) மாதிரிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும், அவற்றைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சியைக் குறைக்கவும், நரம்பியல் வலைபின்னல்களில் அறிவுத் தளத்தை மேம்படுத்தவும், சுதந்திரமான-கற்றல் திறன், உள்ளுணர்வுடன் கூடிய ஆழ்கற்றல் மாதிரிகளை மரபணு வழிமுறைகள் மேம்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, உருவாக்க செநு( Generat AI)ஆனது, உள்ளடக்கச் சுருக்கம், உள்ளடக்க மீளுருவாக்கம், சுதந்திரமான-கற்றல் ஆகி.ய திறன்களின் மூலம் உள்ளடக்கத்தைப் பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகளைக் கையாள பெரிய மொழி மாதிரிகளை (LLM) பயன்படுத்துகிறது. இந்த வழிமுறைகள் அனைத்தும் மனிதனைப் போன்ற சிந்தனையைப் பின்பற்றுவதற்கான கணினி அடிப்படையிலான பயன்பாடுகளின் திறனை மேம்படுத்துவதற்கும், மாதிரிகளை உருவாக்குவதற்கும் பயிற்சி செய்வதற்கும் உள்ள முயற்சியைக் குறைப்பதற்கும், பல்வேறு செயற்களபகுதிகளில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன், நேரத்தைச் சந்தைப்படுத்துவதில் செலவைக் குறைப்பதற்கும் பங்களிக்கின்ற தீர்வுகளாகும்..
செநு(AI) இன் புதிய போக்குகளைக் கண்காணிப்பதன் முக்கியத்துவம்
செநு(AI)இன் பதிய போக்குகளைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
போட்டியில் முன்னோக்கி இருத்தல்: தற்போது செநு(AI)ஆனது மிகவிரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது, மேலும் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பும் வணிகநிறுவனங்கள் இதனுடைய சமீபத்திய புதியபோக்குகளைப் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.செநு(AI)இன் புதிய போக்குகளைக் கண்காணிப்பதன் மூலம், வணிகநிறுவனங்கள் புதிய வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் முன்கூட்டியே கண்டறிமுடியும், மேலும்இதன்வாயிலாகா அவை தாம் முன்னேறுவதற்கான உத்திகளை உருவாக்கமுடியும்.
புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் காணுதல்: செநு(AI)ஆனதுபல்வேறு வகையான தொழில்களிலும் பயன்படுத்திகொள்ளப்படுகிறது, புதியபுதிய பயன்பாடுகள் எப்போதும் வந்துகொண்டேயிருக்கின்றன. செநு(AI)இன் புதிய போக்குகளைக் கண்காணிப்பது வணிகநிறுவனங்கள் பயன்படுத்தப்படாத புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
சிறந்த உத்திமிக்க.தந்திரமான(strategic) முடிவுகளை எடுத்தல்: தரவைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும், தோரணிகளை அடையாளம் காணவும் ,கணிப்புகளைச் செய்யவும் செநு(AI)ஐ பயன்படுத்திகொள்ளலாம். வணிக நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகள், சேவைகள் செயல்பாடுகள் பற்றிய சிறந்த உத்திமிக்க.தந்திரமான முடிவுகளை எடுக்க இந்தத் தகவலைப் பயன்படுத்திகொள்ளலாம்.
செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துதல்: செநு(AI) ஆனது பணிகளை தானியக்கமாக்குகிறது, முடிவெடுப்பதை மேம்படுத்துகிறது செயல்முறைகளை மேம்படுத்துகிறது. செநு(AI)இன்புதிய போக்குகளைக் கண்காணிப்பதன் மூலம், வணிகநிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியலாம்.
செலவுகளைக் குறைத்தல்: செநு(AI) ஆனது தற்போது மனிதர்களால் செய்யப்படும் பெரும்பாலானபணிகளைத் தானியங்குபடுத்துகிறது, இதன் விளைவாக செலவு மிச்சமாகும். செநு(AI)இன்புதிய போக்குகளைக் கண்காணிப்பது வணிகநிறுவனங்கள் செலவுகளின்-சேமிப்பு வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.
வாடிக்கையாளர் பட்டறிவினை மேம்படுத்துதல்: செநு(AI)ஆனது வாடிக்கையாளர் பட்டறிவுகளைத் தனிப்பயனாக்கலாம், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கலாம், வாடிக்கையாளர் தேவைகளைக் கணிக்கவும் முடியும். செநு(AI)இன் பதிய போக்குகளைக் கண்காணிப்பது வணிகநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் பட்டறிவை மேம்படுத்த உதவுகிறது.
படம் 1: AIML இன் முன்னுதாரணம்
தெளிவாக்கம்செய்கின்ற செநு(AI)
தெளிவாக்கம்செய்கின்ற செயற்கை நுண்ணறிவு (XAI) என்பது செநு(AI)அமைவுகளின் வளர்ச்சியைக் குறிக்கிறது, இது முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கு புரிந்துகொள்ளக்கூடிய, வெளிப்படையான விளக்கங்களை வழங்க கின்றது. தெசெநு (XAI) என்பது தற்போது இன்றியமையாதது, ஏனென்றால் பாரம்பரிய செநு(AI) மாதிரிகள், ஆழ்ந்த நரம்பியலான வலைபின்னல்கள் போன்றவை பெரும்பாலும் யாராலும் பார்வையிட முடியாத ‘கருப்பு பெட்டிகளாக (black boxes)’ செயல்படு கின்றன, அவை ஏன் குறிப்பிட்ட முடிவுகளை அல்லது கணிப்புகளை அடைகின்றன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் சவாலானசெயலாகும்.
மனிதர்கள் செநு(AI)இன் அமைவுகளைப் புரிந்துகொள்வதற்கும் நம்புவதற்கும் உதவுவதன்வாயிலாக புதிய தெசெநு (XAI)ஆனது மனிதர்களுக்கும் செநு(AI)இற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இது செநு(AI) ஐ மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதற்காக மாதிரி விளக்கம், இயல்புநிலை முக்கியத்துவ பகுப்பாய்வு , விதி அடிப்படையி லான அமைவுகள் போன்ற நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த வெளிப்படைத் தன்மையானது பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது, பிழைத்திருத் தத்தையும் மாதிரிகளையும் மேம்படுத்த உதவுகிறது, மேலும் செநு(AI)இன் அமைவுகளானவை நெறிமுறை, ஒழுங்குமுறை ஆகிய தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது.
தெசெநு (XAI)இல்பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன,அவற்றுள் குறிப்பிட்ட செநு(AI) மாதிரியையும் பயன்பாட்டையும் பொறுத்து சிறந்த அணுகுமுறை உள்ளது.
இயல்புநிலை முக்கியத்துவம்: செநு(AI) மாதிரியின் முடிவெடுப்பதற்கான மிக முக்கியமான இயல்புகளைக் கண்டறிகின்றது
எதிர் விளக்கங்கள்: உள்ளீட்டு இயல்புகளின் வேறுபட்டால் செநு(AI) மாதிரியின் கணிப்பு எவ்வாறு மாறும் என்பதைக் காண்பிக்கிறது
வளாக விளக்கங்கள்: ஒரு குறிப்பிட்ட உள்ளீட்டு எடுத்துக்காட்டிற்கு செநு(AI) மாதிரியின் முடிவிற்கு விளக்கமளிக்கிறது
மாதிரி உள்முகநோக்குதல்(introspection ):செநு(AI) மாதிரியின் உள்ளக செயல்பாடுகளை ஆராய்ந்திட பயனர்களை அனுமதிக்கிறது
தெசெநு (XAI) என்பது தற்போது செயல்பட்டுகொண்டிருக்கும் ஆராய்ச்சியுடன் விரைவாக வளர்ந்து வருகின்ற ஒருபுதியதுறையாகும், மேலும் இதுசெநு(AI) அமைவுகளை மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும், நியாயமானதாகவும் மாற்றியமைத்திடுகின்ற ஆற்றலைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவமனையானது தெசெநு (XAI)ஐப் பயன்படுத்தி ஒரு இயந்திரக் கற்றல் மாதிரியைகொண்டு புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையைப் பற்றி எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதை விளக்கமாககூறலாம். இது மாதிரியின் காரணத்தைப் புரிந்துகொள்ளவும் சிறந்த மருத்தவசிகிச்சை முடிவுகளை எடுக்கவும் மருத்துவர்களுக்கு உதவுகின்றது. தரவு அல்லது மாதிரியில் உள்ளக சார்புகளை அடையாளம் காண இந்த தெசெநு (XAI)ஐப் பயன்படுத்திகொள்ளலாம், இது மாதிரியின் கணிப்புகளின் துல்லியத்தையும் நேர்மையையும் மேம்படுத்த உதவுகின்றது.
படம் 2: ஆழ்கற்றலிற்கு மனித நுண்ணறிவின் ஒருமைப்பாடு
உருவாக்க செநு(AI)
ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளில் உருவாக்க செநு(AI) ஆனது முன்னணியில் உள்ளது. நரம்பியல் வலைபின்னல்களின் மூலம், இந்த தொழில்நுட்பம் உள்ளடக்கம், கலை, இசை , மனிதனைப் போன்ற உரையை உருவாக்க உதவுகிறது. கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் , ஆசிரியர்கள் ஒரு வகையானபடைப்புகளை , கண்டுபிடிப்பு படைப்புகளை வெளியிட இந்த உருவாக்க செநு(AI)ஐப் பயன்படுத்திகொளிகின்றனர். செநு(AI)-ஆல் இயக்கப்படுகின்ற தொழில்நுட்பங்கள் வடிவமைப்புத் துறையில் தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்க உதவுகின்றன, அதே சமயம் உருவாக்க செநு(AI)ஆனது இசைத் துறையில் கேட்போரை வசீகரிக்கின்ற வகையிலான இசை.அமைப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், deepfake உள்ளடக்கம் , தவறான தகவல்களை உருவாக்கும் திறன் ஆகியவற்றின்காரணமாக இதில்நெறிமுறைக் கவலைகள் எழுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், உருவாக்க செநு(AI) கணிசமான முன்னேற்றங்களைச் கண்டுவருகின்றது, இது பரந்த அளவிலான பகுதிகளில் மிகவும் யதார்த்தமானதும் கற்பனையானதுமான உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கிறது. மறுதலையான உருவாக்க வலைபின்னல்களின் (generative adversarial networks (GANs)) கண்டுபிடிப்பு, ஒரு வகை இயந்திர கற்றல் மாதிரி, உருவாக்கக்கூடிய செநு(AI)இன் மிகச் சிறந்த முன்னேற்றங்களில் ஒன்றாகும். (GANs)ஆனவை உருவாக்குபவர் பகுத்தறிபவர் ஆகிய இரண்டு நரம்பியல் வலைபின்னல்களால் ஆனவை உருவாக்குபவர்புதிய தரவின் நிகழ்வுகளை உருவாக்குகிறது, அதே நேரத்தில் பகுத்தறிபவர் அவற்றை சரிபார்க்கின்றது. இவ்விரண்டு வலைபின்னல்களும் ஒரே செயல்பாட்டில் போட்டியிடுதலைபோன்று செயல்படுகின்றன, இதில் உருவாக்குபவர் உண்மையான தரவுகளிலிருந்து பிரித்தறிய முடியாத தரவை உருவாக்க விரும்புகிறது பகுத்தறிபவர் அவ்வாறான உண்மையாக ,உருவாக்கப்பட்ட தரவை மிகச்சரியாக வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உருவாக்க செநு(AI) இன் சமீபத்திய முன்னேற்றங்களில் சில பின்வருபவை.
உயர்தர பட தொகுப்பு: (GANs)ஆனவை உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்க முடியும், அவை பெரும்பாலும் உண்மையான புகைப்படங்களை ஒத்திருக்கும். இது கலை, வடிவமைப்பு, அதுமட்டுமல்லாத மற்ற பிற செயல்களின் அல்லது பகுதிகளின் ஒளிக்காட்சிப் பிரதிநிதித்துவங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
பாணி பரிமாற்றம் ,கலை ரீதியிலான வரைவு: உருவாக்கசெநு(AI) ஆனது பயனர்கள் தங்களுடைய ஒரு படத்தின் பாணியை மற்றொன்றின் உள்ளடக்கத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கிறது.செநு(AI) ஆல்-உருவாக்கப்பட்ட கலையில் பல்வேறு பாணிகளின் பொருட்களின் குணங்களை ஒருங்கிணைப்பதன் விளைவாக வெளிப்பட்டுகின்றது.
உரையிலிருந்துஉருவகப்படுத்தப்பட்ட தொகுப்பு: உருவாக்க செநு(AI) ஆனது தற்போது உரை குறிப்பைக் கொடுக்கும்போது உடன்குறிப்பிட்ட காட்சிகளுடன் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய படக்காட்சிகளை உருவாக்குகின்றது, இது எழுத்துபடைப்பு, விளம்பரம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
கானொளிகாட்சி உருவாக்கமும் கையாளுதலும்: (GANs)இன் முன்னேற்றங்கள் கானொளிகாட்சி உருவாக்கத்தையும் கையாளுதலையும் எளிதாக்குகிறது, உருவாக்க செநு(AI) ஆனது தற்போதைய கானொளி காட்சிக்கு பிறகு புதிய கானொளிகாட்சியின் உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது, மேலும் தடையற்ற மாற்றங்களை உருவாக்க காட்சி திரைகாட்சிகளுக்கு இடையில் இடைக்கணிப்புசெய்கிறது.
குரல், இசை தொகுப்பு: படங்களுக்கு அப்பால், உருவாக்கசெநு(AI) ஆனது இசை தொகுப்பாக விரிவடைந்து, பொழுதுபோக்கு, விளையாட்டு, குரல்வழி உதவியாளர்கள் போன்ற பேச்சு, இசை, ஒலி விளைவுகளை உருவாக்குகிறது.
மருந்து கண்டுபிடிப்பும் மூலக்கூறு உருவாக்கமும்: குறிப்பிட்ட அளவுகோள்களுடன் பொருந்தக்கூடிய இரசாயன கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் புதுமையான மருத்துவ கலவைகளை அடையாளம் காண உருவாக்க செநு(AI) உதவுகிறது. இது சாத்தியமான மூலக்கூறுகளின் பரந்த அளவிலான ஆய்விற்கு ஆராய்ச்சியாளர்களை அனுமதிப்பதன் மூலம் புதியமருந்து கண்டுபிடிப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
யதார்த்தமான மனித முக உருவாக்கம்: செநு(AI) மாதிரிகள் நம்பமுடியாத அளவிற்கு மனித முகங்களை உருவாக்குகின்றன, ஆயினும் ஆழமான உள்ளடக்க உருவாக்கத்தில் எதிர்கால பயன்பாடுகள் பற்றிய நெறிமுறை சிக்கல்களை எழுப்புகின்றன.
செநு(AI)-உருவாக்கிய உள்ளடக்கக் கண்காணிப்பு: குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது உள்ளீடுகளைப் பொறுத்து ஆலோனைகளைப் பரிந்துரைப்பதன் மூலமும், வரைவுகளை உருவாக்குவதன் மூலமும், இசை அல்லது உரைப் பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் உள்ளடக்க உருவாக்குனர்களை உருவாக்க செநு(AI) ஆதரிக்கிறது.
குறுக்குதள-செயற்கள பயன்பாடுகள்: உருவாக்க (Generative)செநு(AI) ஆனது செயற்களன்கள் முழுவதும் பயன்பாடுகளைக் கண்டறிந்து, கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், அறிவியிலாளர்கள் , பொறியாளர்கள் ஆகியோர்பல்வேறு பயன்பாடுகளில் அதன் ஆக்கப்பூர்வ சக்திகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
உருவாக்க செநு(AI) ஆனது வளர்ந்துமுன்னேறும்போது, வணிகநிறுவனங்களை மாற்றுவதற்கும், படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும், பொருட்களுடன் ஈடுபடுவதற்கும் புதியபொருட்களைதயாரிப்பதற்கும் புதிய வழிமுறைகளை வழங்குவதற்கும் சாத்தியமாகும். இருப்பினும், தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் , செநு(AI)-உருவாக்கிய உள்ளடக்கத்தின் பொறுப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் என்பனபோன்ற நெறிமுறைக் கவலைகள், இந்தத் தொழில்நுட்பம் முன்னேறும்போது கவனிக்கப்பட வேண்டும்.
படம் 3: செநு(AI) நேர்மையும் சார்பும்
செநு(AI)இன் பிரபலமான அதனை உருவாக்கிய Ray Kurzweil என்பவர் செயற்கை நுண்ணறிவில் ‘ஒருமை (singularity)’’ என்ற சொல்லை உருவாக்கினார், இது செநு(AI), மனித நுண்ணறிவு ஆகியஇரண்டின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது அல்லது AIML துல்லியத்தை மனிதனைப் போன்ற சிந்தனையை அணுகுகிறது. MLஇன் பயிற்சி, மாதிரி, செயல்பாடு ஆகியவற்றில் இந்த மிக உயர்ந்த அளவிலான துல்லியத்தை அடைய, AIML செயல்படுத்துதலில் நேர்மையையும் சார்புநிலையையும் பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமாகும்.
பல்வேறு நிலைகளில் AIML இன்தீர்வை உருவாக்குவதில் ஒரு சார்புநிலையைக் குறைக்கின்ற அல்லது தவிர்க்கின்ற முயற்சிகள் இயற்கையாகவே செயல்பாட்டிலும் முடிவுகளிலும் நேர்மைக்கு வழிவகுக்கும். அமைப்பு மூலம் AIML நிலைகளில் சார்பு தானாகவே நிகழ முடியாது, ஆனால் மனித உள்ளீடுகளால் சார்பு நிலைஏற்படலாம்.
எடுத்துக்காட்டாக, ML மாதிரிப் பயிற்சிக்கான தரவை உருவாக்கிடும் போது, பக்கச்சார்பான விளைவுகளைத் தடுக்க, நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்ட, பக்கச்சார்பற்ற தரவு இருக்க வேண்டும். இதேபோல், தரவை முத்திரையிடுதலின்போதும் குழுவாக்கம் செய்யும் போதும், மனிதனைப் போன்ற சிந்தனையை உருவகப்படுத்த மாதிரியைப் பயிற்றுவித்தல், பயிற்சியின் மூலம் பெற்ற அறிவைக் கொண்டு மாதிரியைப் பயன்படுத்துதல் ML செயல்பாட்டின் முடிவுகளிற்கு விளக்கமளித்தல், முன்கூட்டிய தீர்வு அல்லது பக்கச்சார்பான தனிப்பட்ட நலன்களைத் தவிர்ப்பது அவசியமாகும். முழு அமைவையும் கட்டியெழுப்புவதில் நேர்மையை சமரசம் செய்யவேண்டியுள்ளது.
இதில் இனம், வருமான வகை, பாலியல் நோக்குநிலை, பாலினம், மதம், பயனரை ஓரங்கட்டுதல் , பயிற்சித் தரவை உருவாக்கிடும் போது பயனர் தரவின் எந்தவொரு பாகுபாடும்அடங்குகின்றன, அத்துடன் கணினியைப் பயிற்றுவித்தல், இயந்திர கற்றல் செயல்பாட்டின் முடிவுகளுக்கு விளக்கமளித்தல் ஆகியவைகளும் அடங்கும்.
IBM AI Fairness 360, Microsoft Fairlearn , Google What-if போன்ற பல்வேறு கருவிகள், பயிற்சி மாதிரி, தரவு சேகரிப்பு ஆகியவற்றின் செநு(AI) பயன்பாடுகளில் நேர்மையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் ஏதேனும் ஒருசார்புடன் இருந்தால் சரிபார்ப்பதற்கும் அடையாளம் காண்பதற்கும் விலைமதிப் பற்றவை.யாகும்
செநு(AI) இன்ஆளுகை
செநு(AI) இன்ஆளுகை என்பது செநு(AI)அமைவுகளின் மேம்பாடு, வரிசைப்படுத்தல், பயன்பாடு ஆகியவற்றை நிர்வகிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் கொள்கைகளுடன், அக்கொள்கைகளின் நடைமுறைகளின் தொகுப்பாகும். செநு(AI) உடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில்,செநு(AI) அமைவுகள் பொறுப்பான நெறிமுறையான வழிமுறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, செநு(AI)இன் ஆளுகை.யை வைத்திருப்பது முக்கியமாகும்.
செநு(AI) ஆளுகையின்(Governance) சில முக்கிய இயல்புகள்:
தரவு ஆளுமை: பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் தரவை நிர்வகித்தல் ,செநு(AI) அமைவுகள் வரிசைப்படுத்துதல், ஆகியவற்றில் தரவு துல்லியமானது, முழுமையானது பக்கச்சார்பற்றது என்பதை உறுதிப்படுத்துகிறது.
தர்க்கநிலை பொறுப்புக்கூறல்: செநு(AI)அமைவுகள் வெளிப்படையானவை, விளக்கமளிக்கக்கூடியவை என்பதை உறுதி செய்தல். எந்தவொருபக்க சார்பு அல்லது நியாயமற்ற விளைவுகளையும் கண்டறிந்துசரி செய்வதற்குசெநு(AI) அமைவுகள் எவ்வாறு முடிவுகளை எடுக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.
மனித மேற்பார்வை: செநு(AI)அமைவுகளின் வளர்ச்சியில் , வரிசைப்படுத்தலில் மனிதர்கள் ஈடுபடுவதை உறுதி செய்தல், இதனால் இந்த அமைவுகள் பாதுகாப்பான, பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
இடர் மேலாண்மை: சார்பு, பாகுபாடு,பணிஇடமாற்றம் உள்ளிட்ட செநு(AI) அமைவுகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் கண்டறிந்து சரிசெய்தல்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்செநு(AI)Iஇன் போக்குகளின் பரிணாமம்
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவேகமாக வளர்ந்து வரும் ஒருதுறையாகும், மேலும் பல்வேறு புதிய போக்குகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறையை வடிவமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சில செநு(AI) இன் போக்குகள் பின்வருமாறு.
வலுவூட்டலான கற்றல் சுய-கற்றல் அமைவுகள்: இந்த அமைவுகள் மிகவும் பரவலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றின் சொந்த பட்டறிவுகளிலிருந்து கற்றுக் கொள்கின்ற திறன் கொண்டது , மனித தலையீடு இல்லாமல் காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
தன்னியக்க வாகனங்கள்: செநு(AI) ஆனது தன்னியக்க வாகனங்களின் ஒரு முக்கிய அங்கமாகும், அவை அவற்றின் சுற்றுசூழல்களை உணர்ந்து முடிவுகளை எடுக்க உதவுகிறது.
உருவாக்க(Generative) செநு(AI): படங்கள், கானொளிகாட்சிகள் , இசை போன்ற புதிய உள்ளடக்கத்தை உருவாக்கிடுவதற்காக இந்த உருவாக்க செநு(AI) இன் பயன்பாடு பொழுதுபோக்கு , விளம்பரம் உட்பட பல்வேறு தொழில்களில் விரிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணிம இணை: தொட்டுணரக்கூடிய பொருட்கள் அல்லது அமைவுகளின் எண்ணிம பிரதிகளை உருவாக்குவது, உற்பத்தி,கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.
கூட்டமைப்பான கற்றல்: இது விநியோகிக்கப்பட்ட இயந்திர கற்றல் அணுகுமுறையாகும், இது செநு(AI)மாதிரிகள் பயனர்களின் சாதனங்களில் இருக்கும் தரவுகளில் பயிற்சி பெற அனுமதிக்கிறது. தனியுரிமைக் கவலைகளைத் தீர்க்கவும் செநு(AI) அமைவுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.
பல்லடுக்குமாதிரியிலான கற்றல்: உரை, படங்கள் , இசை போன்ற பல்வேறு தரவு வகைகளிலிருந்து செநு(AI) மாதிரிகள் கற்றுக்கொள்ளலாம். இது செநு(AI) அமைப்பின் துல்லியத்தையும் வலிமையையும் மேம்படுத்த உதவும்.
இந்தப் போக்குகள் மருத்துவ, போக்குவரத்து, இணையப் பாதுகாப்பு, பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செநு(AI) இல் புதியதொரு துறை உருவாகும்போது, இந்த போக்குகள் பல தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும்