எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல தானியங்கி கருவிகள் குறித்தும், சென்சார்கள் குறித்தும், டையோடுகள் குறித்தும், இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்தும் கடந்த 15 கட்டுரைகளில் விவாதித்து இருக்கிறோம்.
இன்றைக்கு நான் உங்கள் மத்தியில் குறிப்பிட இருப்பது எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து அல்ல! மாறாக, எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்றைக்கு இணையத்தின் மூலம் இயங்கும் கருவிகள்(IOT), தானியங்கி வீட்டு வசதி சாதனங்கள்(Home automation devices)ஆகியவை எளிய வகையில் கிடைக்கின்றன.
கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா(alexa ) போன்ற சேவைகள் உலகளாவிய அளவில் தானியங்கி வீட்டு வசதி துறையில் பிரபலமாக இருக்கின்றன.
இத்தகைய பெரு நிறுவனங்களைக் கடந்து, சில சிறு,சிறு நிறுவனங்களும் தானியங்கி சேவைகளை வழங்குகின்றன.
ஆனால், இவற்றில் எதுவும் திறந்த நிலை பயன்பாடுகளாக இருப்பதில்லை.
அதற்குரிய மாதாந்திர தொகை(subscription cost),கருவியை வாங்குவதற்கான தொகை(buying cost) மேலும், இன்ன பிற செலவுகளையும்(value added cost) கவனிக்க வேண்டிய உள்ளது.
சிலர் குறைந்த தரத்திலான மூன்றாம் தர நிறுவன பொருட்களை(mostly replica) பயன்படுத்துவார்கள். ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது உங்களை பிறர் எளிமையாக உளவு(spying) பார்க்க முடியும்.
இத்தகைய பிரச்சினைகளை நாம் கடந்து, அனைவருக்கும் ஆன ஒரு கட்டற்ற( opensource)தானியங்கி வீட்டு வசதி சாதனம் இருக்கிறதா? என்று கேட்டால், அதற்கான தீர்வாக உங்கள் மத்தியில் வந்திருப்பது தான் homeassistant.io .
போதாக்குறைக்கு பெருநிறுவனங்களே உங்களுடைய தரவுகளை சேகரிக்க(data collecting )தவறுவதில்லை.
இந்த ஹோம் அசிஸ்டன்ட் முழுக்க, முழுக்க ஒரு திறந்த நிலை திட்டமாகும்.
இதன் மூலம்z உங்களுடைய தரவுகள் 100 சதவிகிதம் பாதுகாக்கப்படுகிறது.
இதை நிர்வகிக்க, மாதாந்திர தொகை எதையும் செலுத்த வேண்டியது தேவை கிடையாது.
இவர்கள் வழங்கக்கூடிய கருவியை வாங்குவதற்கு மட்டும், 99டாலர்கள்(99$) செலவழிக்க வேண்டும்.
Google மற்றும் அலெக்சாவோடு இணைந்து பணியாற்றக்கூடிய திறனை ஹோம் அசிஸ்டன்ட் பெற்றிருக்கிறது.
இந்த நிறுவனம், பின்னாளில் எந்த பெரு நிறுவனத்தோடும் இணைய போவதில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
எனவே உங்களுடைய தரவுகள் நான் மேற்குறிப்பிட்டது போல, பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் தன்னலம் பாராத பல கட்டற்ற நிரலாக்க கலைஞர்களின் மூலமாக, தினம்தோறும் மேம்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.
உங்களுடைய இல்லத்தை தானியங்கி கூடாரமாக மாற்ற, அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டு வருகிறது.
Rasberry pie போன்ற இலகு ரகு மென்பொருளில் இயங்கக்கூடிய திறனை பெற்றிருக்கிறது.
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் கட்டுப்படுத்த முடியும்
அலாவுதீன் மந்திர விளக்கில் வருவது போல, உங்கள் வீட்டில் நீங்கள் மாயாஜாலங்களை செய்ய முடியும்.
நீங்கள் பேசுவதன் மூலமாகவே விளக்குகளை எரிய வைக்க முடியும். மின்விசிறியை இயக்க முடியும், இன்ன பிற வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, இந்தியாவிலிருக்கும் உங்கள் வீட்டின் சமையலறை மின்விசிறியை இயக்க முடியும்.
மேற்கூறிய அனைத்தையும், பிற நிறுவனங்களும் வழங்கும்போதும் ! நான் முன்பே குறிப்பிட்டது போல அவை அனைத்தும், லாப நோக்கத்திற்காக இயங்கும் நிறுவனங்கள்.
லாப நோக்கமின்றி,கட்டற்ற தொழில்நுட்பமாக வடிவெடுத்து இருக்கும் ஹோம் அசிஸ்டன்ட் சாதனத்திற்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
இதன் மூலமே இதுபோன்ற பல கட்டற்ற கருவிகள் நமக்கும் காணக் கிடைக்கும்.
வருங்காலத்தில் கட்டற்ற ஒரு தொழில்நுட்ப சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.
எனவே, வாய்ப்பு இருக்கும் அனைவரும் இந்த ஹோம் அசிஸ்டன்ட் சாதனத்தை பயன்படுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறைந்தபட்சம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை யாவது பார்வையிடுங்கள்.
மேற்படி, வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஹோம் அசிஸ்டன்ட் கருவியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது.
Official site:www.home-assistant.io/
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில்-02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com/