எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்
பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current – DC) மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். மின்தடங்கல் ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து வரும் நேர்மின்சாரத்தை மாறுமின்சாரமாக மாற்றி விளக்கு, மின்விசிறி… Read More »