Author Archives: இரா. அசோகன்

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து இங்கே தொகுத்து விற்பனை செய்தனர். தற்போது மற்ற பாகங்கள் யாவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மோட்டாரும் அதன் கட்டுப்பாட்டகமும் (inverter) ஓரளவு… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 22. மூன்று சக்கர மின்னூர்திகள்

மூன்று சக்கர மின்னூர்திகள் இரண்டு வகை. குறைந்தத் திறன் கொண்ட மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) ஈய அமில மின்கலம் வைத்து வருகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஈய அமில மின்கலத்தைவிட லித்தியம் அயனி மின்கலம் அதிக ஆற்றல் கொண்டது. ஆகவே எடை குறைவு. துரிதமாக மின்னேற்றம் செய்யவும் முடியும். ஆனால் விலை அதிகம். இங்கு லித்தியம் அயனி மின்கலம் பொருத்திய அதிகத் திறன் கொண்ட மின்-ஆட்டோக்கள் (E-Auto) பற்றிப் பார்ப்போம்.  மோட்டார்  இவற்றில் பெரும்பாலும் தொடியற்ற… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய நிறுவனங்களும் பல சந்தையில் வந்துள்ளன. மின் ஸ்கூட்டர் மோட்டார்கள் சில குறைந்த திறன் கொண்ட ஸ்கூட்டர்களும், மோபெட்களும் சக்கரத்திலேயே மோட்டார்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து வடிவமைப்பு செய்கிறார்கள். ஆகவே இவற்றை இருப்பதை வைத்து சமாளித்த வடிவமைப்பு என்றுதான் சொல்லமுடியும். மின்னூர்திகளுக்காகவே உருவாக்கிய ஆகச்சிறந்த வடிவமைப்பு என்று… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 19. மின்னூர்திப் பாதுகாப்பு

மின்கலத்திலும் மின்சார அமைப்பிலும் அதிக மின்னழுத்தமும் மின்னோட்டமும் இருப்பதன் காரணமாக மின்னூர்திகளுக்கு மின்சாரப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.  AIS 156 சான்றிதழ் AIS 156 என்பது இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (ARAI) வழங்கும் சான்றிதழாகும், இது இந்தியாவில் இலகுரக மின்னூர்திகளுக்கான (light electric vehicles) பாதுகாப்புத் தரநிலை ஆகும். இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இலகுரக மின்னூர்திகளுக்கும் AIS 156 சான்றிதழைப் பெறுவது கட்டாயம். ஏனெனில் இது வளர்ந்து வரும் மின்னூர்தி சந்தையின் பாதுகாப்பையும்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 18. மீளாக்க நிறுத்தல்

வழக்கமாக வண்டியின் நிறுத்த மிதியை (brake pedal) அழுத்தினால் என்ன நடக்கிறது வழக்கமாக முடுக்கிக்கும் (accelerator) நிறுத்த மிதிக்கும் (brake pedal) வலது காலையே பயன்படுத்துகிறோம். நிறுத்த மிதியை அழுத்த வேண்டுமென்றால் முதலில் முடுக்கியிலிருந்து காலை எடுக்க வேண்டும். உடன் எஞ்சினுக்குள் பெட்ரோல் காற்றுக் கலவை செல்வது குறையும். அப்படியே நாம் நிறுத்த மிதியை அழுத்தாமல் இருந்தால், உந்தம் (momentum) விளைவாக வண்டி சிறிது தூரம் ஓடித்தான் நிற்கும். நிறுத்த மிதியை அழுத்தினால் வண்டி துரிதமாக நிற்கும்.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 17. வணிக மின்னேற்றிகள்

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் பயன்படுத்தும் 3 kW வீட்டு மின்னேற்றி முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது என்று பார்த்தோம். ஆனால் நாம் வெளியூர் செல்லும்போது வழியில் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. ஆகவே மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேறு என்ன வழிகள் உள்ளன என்று பார்ப்போம். காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட் பெரும்பாலான கார்கள் CCS2 (Combined Charging System 2) என்ற தரநிலைப்படி மின்னேற்ற சாக்கெட் வைத்து வருகின்றன. ஏனெனில் நாம் செல்லுமிடங்களில் மையங்களிலுள்ள… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். இது மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பதால் முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது. 15 ஆம்பியர் 3-துளை மின்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை செய்ய இயலாது. மேலும் வெப்பம் மிக அதிகமானால் பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். மின்காப்பு பழுதடைதல் (insulation failure), மின்கசிவுகள் (short… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே பயனர் பாதுகாப்பையும் ஊர்தியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளுக்குள் மின்னூர்திகளை இயக்குவது மிகவும்… Read More »