டொரண்டோ பல்கலைக்கழகத்தின் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கு
வணக்கம், கனடா டொரண்டோ நகரில் உள்ள, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகத்தில் சனிக்கிழமை, சனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாட்டம் மற்றும் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்குக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இக்கருத்தரங்கில் பல்துறை ஆய்வாளர்கள், நூலகவியலாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும், பேராசிரியர் சனாதனன் அவர்களின் சிறப்புப் பேருரையும் இடம்பெறும். நூலகம் – தொழில்நுட்பம் – தமிழியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் பின்வரும் தலைப்புகளில்… Read More »