Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

மதுரையில் தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு

பெண்ணியம் நாட்டார் மரபு 2025 போட்டியை ஒட்டி தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு பெண்ணியம் நாட்டார் மரபு போட்டியை ஒட்டி, விக்கிப்பீடியத் தகவல்களில் பாலினப் பாகுபாட்டைக் குறைக்கவும், மதுரை சார்ந்த பண்பாட்டுத் தரவுகளை அதிகரிக்கவும், தமிழ் விக்கிப்பீடியா வழங்கும் ஒருநாள் பயிலரங்கு. நாள்:பிப்ரவரி 22, 2025 (காலை 9:30 முதல் 5:30 வரை) இடம்:Blaze Web Services, கண்மாய் கரை சாலை, காளவாசல், மதுரை 625016 கட்டணமில்லை ஆனால் முன்பதிவு அவசியம்  ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’

எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கும் ஆவணக வெளியீடுகளும்

அனைவருக்கும் வணக்கம்! கடந்த இரு ஆண்டுகளாக எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்று வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இந்த ஆண்டு கருத்தரங்கு நேரடியாகவும் மெய்நிகராகவும் (hybrid), எதிர்வரும் சனவரி 25, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  நிகழ்ச்சிகள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும். அன்று தமிழ் தொடர்பான ஆவணப்படுத்தல், நூலகவியல், ஆவணகவியல், தமிழியல் உட்பட்ட துறைகளில் இங்கு செயற்படுபவர்கள் நேரடியாக சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.  பேராசிரியர் வில்சன் அவர்களின் ஆவணக்… Read More »

PostgreSQL database – இலவச இணைய வழி தொடர் வகுப்பு

PostgreSQL என்பது ஒரு இலவச, கட்டற்ற, திறமூல database மென்பொருள் ஆகும்.இது பல்வேறு மென்பொருள் உருவாக்கத்துக்கான தகவல்களை சேகரிக்கும் கிடங்கு ஆகப் பயன்படுகிறது. இதைக் கற்பதன் மூலம் தகவல் சார் மென்பொருட்களை எளிதில் உருவாக்கலாம். இப்பயிற்சி வகுப்புகளில் SQL அடிப்படைகளையும் PostgreSQL பயன்படுத்துவதையும் கற்போம். யாவரும் இணையலாம். அனுமதி இலவசம். ஆசிரியர் – சையது ஜாபர் contact.syedjafer@gmail.com வகுப்பு தொடக்கம் – 18-Nov-2024 7-8 PM IST திங்கள், புதன், வெள்ளி மாலை 7-8 PM IST… Read More »

Machine Learning – ஓர் அறிமுகம் – இலவச இணைய உரை

நாள் – நவம்பர் 9 2024நேரம் – 11.30 AM – 1.30 PM IST இணைப்பு – meet.google.com/ykj-aksq-whw YouTube Live : www.youtube.com/live/rxH2k-kpgqw உரை – திரு. ராஜ வசந்தன்EachOneTeachOne Youtube channel நிறுவனர்CTO, Grids and Guides அனைவரும் வருக.

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…! உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா ? எனவே, பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைநம் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் – இணைய உரையாடல்

தலைப்பு: நுட்பகத்தில் கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் உப தலைப்பு: நுட்பகம் சமூக மையத்தின் செயற்பாடுகள் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 162 காலம்:12.10.2024சனிக்கிழமை இரவு 7.30 – 8.30 உரையாளர்: லெனின் குருசாமி, கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவர்,FreeTamilEbooks.com தளத்தில் தன்னார்வலர், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729                            மின்னஞ்சல் : thamizharitham@gmail.com சூம் நுழைவு எண் : 891 3342 8935… Read More »

காரைக்குடியில் கணியம் அறக்கட்டளை மற்றும் நுட்பகம் திறப்பு விழா நிகழ்வு

கணியம் அறக்கட்டளையின் காரைக்குடி கிளை திறப்பு விழா நிகழ்வு செப்டம்பர் 22, 2024 ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. இதனுடன் ‘நுட்பகம்’ என்ற சமுதாயக் கூடம் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கின்றோம். இந்த நிகழ்வில் மென்பொருள் சுதந்திர தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. இது காரைக்குடியில் நிகழும் முதல் மென்பொருள் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு Open Street Map பங்களிப்பாளர்கள் பலர் வருவதால் செப்டம்பர் 21, 2024 சனி அன்று படமிடல் நிகழ்வு (Mapping Party) ஒன்றையும்… Read More »

தமிழில் Docker – இலவச இணைய வழிப் பயிற்சி

GNU/Linux Administration, Devops துறைகளில் நடந்த சமீபத்திய சாதனைகளில் ஒன்று Docker Container முறை. மென்பொருட்களை எளிதாக பல இடங்களில் நிறுவி, இயக்கி, மேலாண்மை செய்ய Docker Container பயன்படுகின்றன. இப்பயிற்சியில் Docker பற்றி கற்கலாம். தொடக்கம் – செப் 15 2024 7-8 PM. IST வகுப்பு இணைப்பு பெற t.me/parottasalna டெலிகிராம் குழுவில் இணைக. காணொளி பதிவுகள் இங்கே ஆசிரியர் – சையது ஜாஃபர் syed jafer contact.syedjafer@gmail.com