Author Archives: நித்யா

Hadoop – hdfs,mapreduce – பகுதி 2

ஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்டமைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java -versionஎனக் கொடுத்து சோதிக்கவும். இது பின்வருமாறு ஒரு வெளியீட்டைக் கொடுத்தால் java நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் பின்வருமாறு கொடுத்து… Read More »

Hadoop – அறிமுகம் – பகுதி 1

HADOOP வரலாறு Hadoop என்பது Apache நிறுவனம் வழங்குகின்ற திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். இதனை Doug Cutting என்பவர் உருவாக்கினார். இது பெரிய தரவில் கூறப்படுகின்ற பல்வேறு வேலைகளையும் குறைந்த செலவில் திறம்பட செய்வதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருள்களின் கூட்டமைப்பு ஆகும். Hadoop உருவாக்கத்திற்கு முன்னர் Doug Cutting என்பவர் ‘Apache Lucene’ எனும் கருவியை உருவாக்கியிருந்தார். இக்கருவியைப் பற்றி நாம் ELK Stack-ல் ஏற்கனவே பார்த்துள்ளோம். வாக்கியங்கள்/வார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாகத் தேடல்களை நிகழ்த்துவதற்கு… Read More »

ELK Stack – பகுதி 4

Kibana Kibana என்பதுElasticSearch-ல் இருக்கும் தரவுகளை வரைபடங்களாக மாற்றி வெளிப்படுத்தஉதவும் ஒரு Visual Interface ஆகும். ElasticSearch-ல் இருக்கும் தரவுகளை வைத்து ஒருசில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு Kibana-வின் வரைபடங்கள் உதவுகின்றன. இதனை அறிக்கைக்கான கருவி (ReportingTool) என்றும் கூறலாம். அதாவது வெறும் எண்ணிக்கையினாலான தகவல்களை மட்டும்வைத்துக்கொண்டு ஒருசில முக்கிய முடிவுகளை எடுப்பது என்பது சற்று கடினமானவிஷயம். எனவேதான் Kibana-வானது அவற்றை அழகிய வரைபடங்களாக மாற்றி, அதனைப் பார்க்கும் போதே தரவுகளின் சாராம்சங்களைப் புரிந்து கொள்ளக் கூடியஅளவுக்கு… Read More »

ELK Stack – பகுதி 3

Logstash Logstash  என்பது  நிகழ்வுகளைப் பெற உதவும் ஒரு  தரவுக் குழாய் (data pipeline)  ஆகும். இது ரூபி மொழியில் எழுதப்பட்ட பல்வேறு வகையான செருகு நிரல்களை(plugins)  வைத்து இயங்குகிறது. எனவே தான் இது “Plugin based events processing data pipeline” என்று அழைக்கப்படுகிறது. இந்த தரவுக் குழாய் 3 வகையான நிலைகளில் தரவுகளைக் கையாள்கிறது.  இது பின்வருமாறு:Logstash  என்பது  நிகழ்வுகளைப் பெற உதவும் ஒரு  தரவுக் குழாய் (data pipeline)  ஆகும். இது ரூபி… Read More »

ELK Stack – பகுதி 2

Elastic Search ElasticSearch என்பது பல கோடிக்கணக்கான தரவுகளை சேமித்து வைத்துக்கொண்டு, நாம் கேட்கும் நேரங்களில் கேட்கும் தகவல்களை துரிதமாக வெளிப்படுத்த உதவும் ஒரு சேமிப்புக் கிடங்கு மற்றும் தேடு இயந்திரம் (Storage area & Search engine) ஆகும். தேடலிலும் நமக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. GitHub, Google, StackOverflow, Wikipediaபோன்றவை இதனைப் பயன்படுத்தி அதிக அளவு தகவல்களை சேமிப்பத்தோடு மட்டுமல்லாமல், பயனர்கள் தங்கள் விருப்பம்போல் தகவல்களை தேடி எடுப்பதற்கு ஏற்ற வகையில் தேடும்… Read More »

ELK Stack – பகுதி 1

ELK Stack – ஓர் அறிமுகம் ELK Stack என்பது Logstash, Elastic Search, Kibana எனும் 3 தனித்தனி திறந்த மூல மென்பொருள் கருவிகளின் கூட்டமைப்பு  ஆகும்.  இவை முறையே 2009 , 2010, 2011   ஆகிய ஆண்டுகளில் தனித்தனி நபர்களால் உருவாக்கப்பட்டு தனித்தனி திறந்தமூலக் கருவிகளாக வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் 2012-ஆம் ஆண்டு “Elastic Search” எனும் நிறுவனம் உருவாக்கப்பட்ட பின்னர், ஒவ்வொருவராக அந்நிறுவனத்தில் இணைய,  அவர்கள் உருவாக்கிய கருவிகளும் இணைக்கப்பட்டு “ELK… Read More »

jQuery கடந்து செல்லும் விதத்தை வரையறுத்தல்

jQuery கடந்து செல்லும் விதத்தை பின்வரும் இரண்டு நிலைகளில் வரையறுக்கலாம். jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றுக்குள் கடந்து செல்லல் jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றின் உட்செய்திகளாக இருப்பவற்றுக்குள் கடந்து செல்லல் இந்த இரண்டிற்கும் each() எனும் method பயன்படுகிறது. jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றுக்குள் கடந்து செல்லல்: சாதாரணமாக jQuery object என்றழைக்கப்படும் $(“p”) என்பது வலைத்தளப்பக்கத்தில் உள்ள ஒவ்வொரு <p> -ஐயும் கடந்து சென்று நமக்கு வேண்டிய மாற்றங்களை நிகழ்த்தும். அவ்வாறு கடந்து செல்லும்போது நமது விருப்பத்திற்கேற்ப, ஒருசில <p>-ஐத்… Read More »

jQuery- வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றுதல்

jQuery மூலம் வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றி அமைக்க முடியும். படங்கள், படிவங்கள், செய்திகள் போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் jQuery-மூலம் அணுகவோ மாற்றி அமைக்கவோ முடியும். இவை ஒவ்வொன்றும் விவரமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. attr( ) மூலம் பண்புகளை மாற்றியமைத்தல் jQuery மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு object-ஐ attr() எனும் பண்பின் மூலம் நாம் விரும்பிய வகையில் மாற்றி அமைக்க முடியும். கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் “Modify Image” பொத்தானை சொடுக்கும்போது வேறொரு படம் திரையில் வெளிப்படுமாறும்,… Read More »

jQuery – CSS – Animations

Jquery CSS-ஐ கையாளும் விதம் CSS என்பது HTML மூலம் உருவாக்கப்படும் பக்கங்களை இன்னும் அழகு படுத்த உதவும். அதாவது எழுத்துக்களின் வகைகள், நிறங்கள், பின்புற வண்ணங்கள் போன்ற பல்வேறு வகையான அழகு சார்ந்த விஷயங்களை ஒருசேர தொகுத்துக் கொடுக்க இந்த css உதவும். “அழகிய பக்கங்களின் ஊற்று” என்பதே “Cascading style sheets” என்பதன் தமிழாக்கம் ஆகும். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள www.kaniyam.com/learn-css-in-tamil-ebook/ எனும் முகவரியை பார்க்கவும். இதுபோன்ற css பண்புகளின் மீது… Read More »

jQuery-ன் அணுகுமுறைகள்

வலைத்தளப் பக்கங்களை உருவாக்குவதற்கு உதவிய பலதரப்பட்ட html tags-ஐ எவ்வாறு jQuery மூலம் பல்வேறு முறைகளில் அணுகுவது என்று இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். பின்வரும் எடுத்துக்காட்டில் அனைத்து வகையான tags-ஐயும் பயன்படுத்தி ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் Desired Changes எனும் பொத்தானை சொடுக்கும்போது அவைகள் jQuery மூலம் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு tag-ம் ஒவ்வொரு விதத்தில் jQuery-மூலம் அழைக்கப்பட்டு ஒவ்வொரு வகையான மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு எடுத்துக்காட்டு… Read More »