Author Archives: நித்யா

jQuery-ஓர் அறிமுகம்

jQuery என்பது Javascript-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு framework ஆகும். வரிவரியாக நிரல்களை எழுதி Javascript செய்யும் ஒருசில வேலைகளை jQuery- ஆனது சுலபமாகச் செய்துவிடும். அதாவது ஒரு வேலையை செய்வதற்கு பக்கம் பக்கமாக javascript-ல் நிரல்கள் தேவைப்படின், அவை அனைத்தும் jQuery-ன் ஒரு method-க்குள் அடங்கிவிடும். எனவே அந்த method-ஐ மட்டும் அழைத்து இயக்கினால் போதுமானது. சுருங்க நிரல் அடித்து விரிவான வேலைகளை செய்து முடிக்கும் சிறப்பினை jQuery பெறுகிறது. இது வலைத்தளப் பக்கங்களின்… Read More »

Form Validations, Javascript Objects & Animations

11 தகவல்களை சோதித்தல் ஒரு விண்ணப்பப் படிவத்தை நாம் பூர்த்தி செய்துவிட்டு Submit பொத்தானை சொடுக்கினால், உலாவியானது நாம் கொடுத்த விவரங்களை server-க்கு அனுப்புவதற்கு முன்னர், எல்லாம் சரியாக உள்ளதா எனச் சோதிக்கும். ஏதாவது விவரங்களை நாம் கொடுக்கத் தவறியிருந்தாலோ அல்லது தவறுதலாகக் கொடுத்திருந்தாலோ, உலாவியானது ஒரு popup மூலம் அதனை நமக்குத் தெரியப்படுத்தும். சரியான விவரங்களைக் கொடுத்து முழுவதுமாக படிவத்தைப் பூர்த்தி செய்யும்வரை, எந்த ஒரு விவரத்தையும் server-க்கு அனுப்பாது. இதுவே  Client side validations… Read More »

Dialog Boxes and Exception Handling

9 Dialog Boxes Javascript-ல் 3 முக்கியமான பெட்டிகள் உள்ளன. அவற்றைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டில் காணலாம். “Alert box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “This is a warning message!” எனும் செய்தி வெளிப்படும் வகையில் ஒரு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை எச்சரிக்க உதவும் alert() பெட்டி ஆகும். “Confirm box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “Do you want to continue?” என்ற ஒரு கேள்வியைக்… Read More »

Functions & Events in JavaScript

7 Functions & Events Functions என்பது மறுபயன்பாட்டிற்கு உதவும் வகையில் எழுதப்படுகின்ற நிரல்கள் ஆகும். ஒரு மிகப்பெரிய program- ஐ நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒருசில குறிப்பிட்ட நிரல்களை மட்டும் நமது தேவைக்கேற்ப நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிரல்களை ஒரு பொதுவான பெயர் வைத்து சேமித்துக்கொள்ள functions பயன்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு மிகப்பெரிய program-ஐ சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கையாளுவதற்கு functions பயன்படுகிறது. இதை parameters ஏற்றுக்கொண்டு செயல்படுபவை, parameters இல்லாமல்… Read More »

Conditional and Looping Statements in javascript

5 Conditional statements ஒரு variable-ல் சேமிக்கப்பட்டுள்ள மதிப்பானது பல்வேறு நிபந்தனைகளோடு ஒப்பிடப்படும். ஒவ்வொரு நிபந்தனையும் பல்வேறு வகையான நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். ஒப்பிடப்படுகின்ற மதிப்பானது எந்த நிபந்தனையோடு ஒத்துப்போகிறதோ, அதனுடைய நிகழ்வினை நிகழ்த்தும் செயலுக்கு If…Else மற்றும் switch_case போன்ற conditional statements பயன்படுகின்றன. If…Else பின்வரும் உதாரணத்தில் age எனும் variable-ல் உள்ள மதிப்பு 18 முதல் 21 வரை இருப்பின் “Legally fit for marriage” எனும் வாக்கியத்தையும், 21-ஐ விட அதிகமாக இருந்தால்… Read More »

Variables & Operators in Javascript

3 Variables Javascript-ல் உள்ள variable-ஆனது முதல் நிலைத் தரவு வகைகளான(primitive data types) எண்கள், எழுத்துக்கள் மற்றும் ‘true’ , ‘false’ என்பது போன்ற Boolean மதிப்புகளை சேமிக்கும் வல்லமை கொண்டது. மேலும் Null மற்றும் undefined என்பது போன்ற பிற நிலைத் தரவு வகைகளையும் இது ஆதரிக்கும். Variable Declaration & Initialization Javascript-ல் உள்ள ஒரு variable-ஆனது எழுத்துக்கள், எண்கள் மற்றும் தசம எண்கள் போன்ற அனைத்து விதமான தரவுகளையும் தானாகவே அடையாளம்… Read More »

JavaScript

1 JavaScript  – அறிமுகம் JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் ‘எளிய தமிழில் HTML’ எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு Client side scripting language ஆகும். அதாவது… Read More »

GNU/Linux Networks-ன் அடிப்படைகள்

GNU/Linux-ஐ install செய்வது என்பது, ஒரு புதிய server அல்லது இணைதளத்தை (Website) உருவாக்குவதற்கான முதல் படி ஆகும். இவ்வாறு உருவக்கப்பட்ட server-ஐ முழுமையாகக் கையாளுவதற்கு networks-ன் அடிப்படைகளைப் பற்றிச் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கணிணியும் ஒரு server-ஐப் பெற்றிருக்கும். Networks என்பது ஒவ்வொரு server-ம் மற்ற server-களுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இங்கு OSI Network Model மற்றும் TCP/IP Network Model-ஐப் பற்றி விளக்கமாகக் காணலாம். OSI Network… Read More »

Selenium Webdriver – 2

Search Results-ஐ வெளிப்படுத்தல் magento-demo.lexiconn.com/ இந்த வலைத்தளத்தின் searchbox-ல் சென்று “Bed & Bath” எனக் கொடுக்கும்போது, அது பின்வருமாறு 12 விடைகளை வெளிப்படுத்துகிறது. இதை automate செய்வதற்கான code பின்வருமாறு அமையும். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode… Read More »

Selenium Webdriver – 1

உங்களுடையது linux கணிணியாக இருந்தால் terminal-ல் சென்று sudo pip install selenium என்று கொடுக்கவும். இது selenium webdriver-ஐ install செய்துவிடும். அப்படியே python-ஐயும் install செய்து கொள்ளவும். WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை Webdriver – மூலம் தானாக இயங்க வைப்பதற்கான python code இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently… Read More »