Calibre – மின் புத்தக நிர்வாகம்
Calibre E-book Management , உங்கள் மின் புத்தங்கங்களை(e-book) நிர்வாகம் செய்ய சிறந்த “நூலக -மென்பொருள்’ இது. என் பார்வையில், சிறந்த மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள். இது கிட்டத்தட்ட எந்த வடிவம் கொண்ட புத்தகங்களையும் வாசிக்கும் திறன் படைத்தது. ஓர் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேர் உடன் ஒரு வெப்சர்வர்(webserver) உள்ளது, இதுமூலம் நீங்கள் உங்கள் நூலகத்தை மற்றவருக்கு நெட்வொர்க்கில்(network) உங்கள் சேகரிப்பை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
Calibre – இணைய புத்தக நிர்வாகம் மென்பொருளை நிறுவ(to Install), பின்வரும் கட்டளையை பின்பற்றவும்.
sudo python -c “import urllib2;exec urllib2.urlopen(‘http://status.calibre-ebook.com/linux_installer’).read(); main()”
உபுண்டு/டெபியான் – இல்
sudo apt-get install calibre
ஃபெடோரா – இல்,
yum install calibre
OS பயன்பாடுகள் மெனுவிலிருந்து(start menu) அல்லது ரன்-கட்டளை(run) உரையாடல் பெட்டியிலிருந்து calibre என்று type செய்து மென்பொருளை துவங்கலாம்.
Calibre முக்கிய சாளரத்தில் உள்ள அமைப்புகள்,
1) முதன்மை கருவிப்பட்டை பகுதி – Main Menu
2) இடது பக்கம் உள்ள பிரிவு பகுப்பு பகுதி – left catagory panel
3) மையத்தில் புத்தகத்தின் வாசிப்பு பகுதி – book list panel
4) வலது பக்கம் உள்ள புத்தகத்தின் அட்டை முன்னோட்ட பகுதி – preview panel
அனைத்து முதன்மை செயல்பாடுகள் என்பது இ-புக் சேர்ப்பதற்கு(addiing), இ-புக் தகவல்களை திருத்த(meta edit), மற்றும் இ-புக் மாற்றம் செய்ய(convert) உதவும். நீங்கள் புத்தகத்தில் டேக்(tag) மற்றும் உங்கள் தலைப்பு(titile), பிற விவரங்களை சேர்க்கலாம். மேலும் நீங்கள் தேட(search) மற்றும் வரிசைப்படுத்துவதன்(short) மூலம் இதனை எளிமையாக கையாளலாம்.
உள்ளடக்க சர்வர்:
நாம் எந்த கணினி அல்லது ஐபோன், Android மொபைல் போன்ற சாதனங்களிலும் புத்தகங்களை படிக்க முடியும், எனவே நீங்கள் உங்கள் நெட்வொர்க்கில் உங்கள் நூலகத்தை பகிர்ந்து(network sharing) கொள்ள வேண்டும். அதற்கு
1) முக்கிய கருவிப்பட்டியில், “பகிர்ந்து / இணை” (connet / share) என்ற பொத்தானை அழுத்தவும்.
- “உள்ளடக்கம் சேவையகத்தை துவக்க” (start content server) தேர்ந்தெடுக்கவும்.
ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கவும், மற்றும் பட்டனின் மேல் மூன்று நீல நிற பல்பு பச்சை நிறமாக மாறிவிடும், இந்த வழியாக உங்கள் சர்வர் இயங்கும்
நாம் இப்போது URL <hostname>:8080/ வழியாக நூலகத்தை அணுக முடியும்.நான் கூட இப்பொது என் ஐபோன் மூலம் என் நூலகத்தை அணுகவும் முடியும்.
இப்போது நீங்கள் நெட்வொர்க்கில் உங்கள் முழு நூலகம் அணுக முடியும்! இது சூப்பர் இல்லை?
மேலும், இது, பிற மின்னூல் வடிவங்களான, mobi, ebub க்கு மாற்ற உதவுகிறது.
லட்சுமிசந்திரகாந்த், கடந்த 6 ஆண்டுகளாக linux admin -ஆக பணியாற்றி வருகிறேன். இப்போது Autodesk, Singapore -ல் பணியாற்றி கொண்டும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் SystimaNX IT Solutions Pvt, Ltd. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளேன். 2003 -ம் ஆண்டு முதல் லினக்ஸ், FOSS மீது கொண்ட அன்பால் ஒரு கணினி நிறுவனம் அமைத்து, விரும்பும்படி வேலை செய்யவேண்டும் என்ற கனவை கடந்த 4 ஆண்டுகளாக நிஜமாக்கி உழைத்துக்கொண்டு உள்ளேன். ஓய்வுநேரங்களில் தகவல் தொழில்நுட்பம், தமிழ் புத்தகம், புகைப்படம் எடுத்தல், சுவையாக சமைப்பது, கால்பந்து பார்ப்பது , வலை பதிவுகள் என்று பொழுது போக்கிகொண்டு உள்ளேன்
வலை பதிவு : opennetguru.com
மின்அஞ்சல் : malan.in@gmail.com