Category Archives: கணியம்

F-droid என்றால் என்ன?

திறந்தநிலை பயன்பாடுகள் தொடர்பாக நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து, மிகவும் கவனித்த ஒரு விஷயம்! பொதுவாக கணிணிகளில் இயங்கக்கூடிய, திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பெரும்பாலும் கட்டுரைகளை பார்க்க முடியும். ஆனால், உண்மையில் நாம் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூட ஒரு திறந்த நிலை தொழில்நுட்பம் தான். அதனால்தான், உலகம் எங்கும் இருக்கக்கூடிய எந்த ஒரு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். அதற்காக, அந்த நிறுவனங்கள்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 18. மீளாக்க நிறுத்தல்

வழக்கமாக வண்டியின் நிறுத்த மிதியை (brake pedal) அழுத்தினால் என்ன நடக்கிறது வழக்கமாக முடுக்கிக்கும் (accelerator) நிறுத்த மிதிக்கும் (brake pedal) வலது காலையே பயன்படுத்துகிறோம். நிறுத்த மிதியை அழுத்த வேண்டுமென்றால் முதலில் முடுக்கியிலிருந்து காலை எடுக்க வேண்டும். உடன் எஞ்சினுக்குள் பெட்ரோல் காற்றுக் கலவை செல்வது குறையும். அப்படியே நாம் நிறுத்த மிதியை அழுத்தாமல் இருந்தால், உந்தம் (momentum) விளைவாக வண்டி சிறிது தூரம் ஓடித்தான் நிற்கும். நிறுத்த மிதியை அழுத்தினால் வண்டி துரிதமாக நிற்கும்.… Read More »

மின்னதிர்ச்சியும், தவிர்க்கும் வழியும்! |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 11

பொதுவாக எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான கட்டுரைகள் மட்டுமே எழுதி வந்தேன். ஆனால், இந்த வாரம் செய்தித்தாளில் மின்னதிர்ச்சியால் இறந்த ஒரு தம்பதியின் செய்தியை படித்த போது மிகவும் வேதனையாக இருந்தது. மின் அதிர்ச்சியால் உயிரிழப்புகள், ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது. மேற்படி, நான் கடந்து வந்த இந்த நிகழ்வில் பக்கத்து வீட்டில் போடப்பட்டிருந்த அலங்கார விளக்குகளிலிருந்து மின்சாரம் கசிந்து! சம்பவம் நடந்த வீட்டில் இருந்து துணி காய வைக்கும் இரும்பு கம்பியில் பட்டு… Read More »

கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – Explore ML– இலவச இணைய வழி குறுந்தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக, தமிழில், இணைய வழியில் கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் குறுத்தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 3 நாட்கள் ( தேவையெனில் இன்னும் ஓரிரு நாட்கள் கூடுதலாக ) செப் 11, 12, 13 – 2024 நேரம் – இரவு 8.30 – 9.30 இந்திய நேரம் (IST) ( புதன், வியாழன், வெள்ளி )காலை 11.00 – 12.00 கிழக்கு நேர வலயம் (EST)… Read More »

தமிழ் 99 விசைப்பொறி

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழில் தட்டச்சு செய்வதற்கான கணினி விசைப்பொறி வடிவம் தான் தமிழ் 99 கணினி விசைப்பொறி. முன்பு, தமிழக அரசாங்கத்தால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில், தமிழ் 99 விசைப்பொறி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில் வெளியாக கூடிய எந்த ஒரு கணிப்பொறியிலோ, மடிக்கணினியிலோ தமிழ் 99 விசைப்பொறி வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தற்கால மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பொறி குறித்து அடிப்படை தகவல்கள் தெரிந்திருப்பதில்லை. அடிப்படையில், நாம் ஆரம்பக் கல்வியில் பயின்று தமிழ்… Read More »

மின் தூண்டிகள் என்றால் என்ன ? அவை குறித்த அடிப்படை தகவல்கள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 10

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் தொடர்ந்து டையோடுகள் குறித்து பல கட்டுரைகளில் விவாதித்து இருந்தோம். இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய தலைப்பு மின் தூண்டிகள்(inductors). நீங்கள் என்னுடைய, இதற்கு முந்தைய எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்கவில்லை என்றால்! கீழே வழங்கப்பட்டிருக்கும் பட்டனை பயன்படுத்தி பழைய கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அடிப்படையில் சில சென்டிமீட்டர் அளவில் ஆன வயரை, சுருள் போன்ற அமைப்பில் சுற்றி வைத்து இருப்பது போல காட்சி அளிக்கும் இதுதான் மின் தூண்டிகள். பொதுவாக தாமிர கம்பிகளை, இரும்பு… Read More »

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள். Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன. மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு வைரஸ்கள்(malware) அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்களும் பரவி வருகின்றன. மேலும், உங்களுடைய முக்கியமான தகவல்கள்(confendial information)இங்கு திருடப்படும் அபாயமும் அதிகமாக உள்ளது.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 17. வணிக மின்னேற்றிகள்

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் பயன்படுத்தும் 3 kW வீட்டு மின்னேற்றி முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது என்று பார்த்தோம். ஆனால் நாம் வெளியூர் செல்லும்போது வழியில் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. ஆகவே மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேறு என்ன வழிகள் உள்ளன என்று பார்ப்போம். காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட் பெரும்பாலான கார்கள் CCS2 (Combined Charging System 2) என்ற தரநிலைப்படி மின்னேற்ற சாக்கெட் வைத்து வருகின்றன. ஏனெனில் நாம் செல்லுமிடங்களில் மையங்களிலுள்ள… Read More »

ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 9

எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து, டையோடுகளுக்கும் நமக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது போலும்! நான் எப்பொழுது கட்டுரையை எழுத தரவுகளை சேகரித்தாலும், டையோடுகள் எனது கண்களில் இருந்து தவறுவதில்லை. கடந்த ஒரு கட்டுரையில், ஒளி மின் டையோடு(photo diode) குறித்து பார்த்திருந்தோம். அதாவது, வெளியில் இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல டையோடு தான் ஒளிமின் டையோடு. இவற்றைப் பெரும்பாலும் உணர்விகளில் பயன்படுத்தலாம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் நாம் கொடுக்கின்ற… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். இது மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பதால் முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது. 15 ஆம்பியர் 3-துளை மின்… Read More »