Category Archives: கணியம்

PN சந்தி டையோடு – ஒரு அடிப்படை விளக்கம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 4

கடந்த கட்டுரையில் குறைகடத்திகள் குறித்து விரிவாக விவாதித்து இருந்தோம். குறைக்கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவம் தான்! PN சந்திடையோடு. அது குறித்து தான் இன்றைய கட்டுரையில் அடிப்படை தகவல்களை அறியவிருக்கிறோம். என்னுடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் குறித்த கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை! என்றால், அவற்றையும் இந்த கட்டுரைக்கு பிறகு பார்வையிடவும். அவற்றை பார்வையிட கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும்! பிஎன் சந்திடையோடு என்பது அடிப்படையில் முக்கோண வடிவில் குறியிடப்படுகிறது. பி என் சந்திடையோடு மின்சுற்று படம் கீழே வழங்கப்பட்டுள்ளது.… Read More »

பயர்பாக்ஸ் உலாவியில், தேவையில்லாத அறிவிப்புகளை நிறுத்துவது எப்படி?

நம்மில் பலரும் தெரிந்தோ, தெரியாமலோ! பல இணையதளங்களிலும், அறிவிப்பு விருப்பங்களை தேர்ந்தெடுத்து வைத்துவிடுகிறோம். பின்னாளில், நாம் உலாவியை(browser) பயன்படுத்தாத போதிலும் பல நேரங்களிலும் இத்தகைய இணையதளங்களில் இருந்து, தேவையற்ற பல அறிவிப்புகள்(especially push notifications) வந்து நம்மை எரிச்சலடைய செய்கிறது. இதற்கான தீர்வு குறித்து தான் பார்க்கவிருக்கிறோம். குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து அறிவிப்புகளை நிறுத்துவது! ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வரும் அறிவிப்புகளை மட்டும், நீங்கள் நிறுத்த விரும்பினால்! நான் இப்பொழுது கூறவிருக்கும் முறையை முயற்சி செய்து பாருங்கள்.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current – DC) மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். மின்தடங்கல் ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து வரும் நேர்மின்சாரத்தை மாறுமின்சாரமாக மாற்றி விளக்கு, மின்விசிறி… Read More »

குறை கடத்திகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 3

ஏற்கனவே மின்தேக்கிகள் மற்றும் மின்தடைகள் குறித்து இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தேன். அந்தக் கட்டுரைகளை படிக்கவில்லை எனில், இந்த கட்டுரையை படித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்புக்கு வருவோமா? குறை கடத்திகள் அப்படி என்றால் என்ன? ஏன் அவை குறைவாக கடத்த வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்குள் வரலாம். அடிப்படையில் திடப்பொருட்கள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடானது, திடப் பொருட்களின் ஆற்றல் மட்ட கோட்பாட்டின்( Band theory of solids) அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன,… Read More »

உங்கள் UBUNTU  VERSION – ஐ எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்!

பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும். lsb_release -a மேற்படி கட்டளையை முனையத்திற்கு அழைத்த பிறகு கீழ்காணும் வகையிலான வெளியீடை நீங்கள் பெற முடியும். Distributor ID:… Read More »

மின்தடையும் அது குறித்த தகவல் துணுக்குகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி-2

கடந்த கட்டுரையில் மின் தேக்கி குறித்து பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை தற்போது வரை நீங்கள் படிக்கவில்லை எனில், இந்த கட்டுரை படித்து முடித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்பிற்கு உள்ளாக வருவோம். மின்தடை என்றால் என்ன? பெயரிலேயே இருக்கிறதே! மின்சாரத்தை தடை செய்யக்கூடிய பொருள் என்று பதில் அளித்தால் அது சரிதான். சரி! எத்தகைய பொருட்கள் மின்சாரத்தை தடை செய்யும்? மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் மின்சாரத்தை கடத்தாத பொருட்களை தானே பயன்படுத்த வேண்டும்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின் (3-phase AC) மோட்டார்களைப் பயன்படுத்துகிறோம். மின்கலத்தில் கிடைக்கும் 300 க்கும் அதிகமான வோல்ட் மின்னழுத்த நேர்மின்சாரத்தை (DC)  மூன்றலை மாறுமின்சாரமாக… Read More »

கூகுள் புகைப்படங்களுக்கு சிறந்த மாற்றாக அமையக்கூடிய, இரண்டு லினக்ஸ் செயலிகள்!

நாம் அனைவருமே புகைப்படங்களை சேமித்து வைக்க, google புகைப்படங்களை(Gphotos) பிரதானமாக பயன்படுத்துகிறோம். மாற்று செயலிகள் குறித்து நாம் யோசித்துக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால், கூகுள் புகைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய, மேலும் அதைவிட சில சிறப்பம்சங்களை உடைய, இரண்டு புகைப்பட செயலிகள் பற்றி தான்  இந்தக் கட்டுரையில் விவாதிக்க இருக்கிறோம். இதற்கான தரவுகள் itsfoss இணையதளத்தில் திரு.அங்குஸ்தாஸ் அவர்களால் எழுதப்பட்ட, கட்டுரையிலிருந்து பெறப்பட்டுள்ளது. 1.IMMICH கிட்டதட்ட பார்ப்பதற்கு google புகைப்படங்கள் செயலியை அச்சடித்து வைத்தது போல் தான் இருக்கும், இந்த… Read More »

யாவருக்குமான! எளிய எலக்ட்ரானிக்ஸ் – பகுதி 1

மின்தேக்கி(ஒரு அறிமுகம்):- யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதிக்கு, உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இந்த தொடரின் முதல் கட்டுரை இது. இன்றைய தலைப்பில் நாம் காண இருப்பது, மின்தேக்கி ( capacitor)! பொதுவாக, மின்விசிறிகளுக்கு மட்டும் கப்பாசிட்டர்களை வாங்கியிருப்போம். உண்மையில், இவை எவ்வாறு இயங்குகின்றன? அது தொடர்பாக தான் அறிந்து கொள்ளவிருக்கிறோம். இயற்பியலில், “மின் ஆற்றலை தேக்கி வைக்க கூடிய பொருள் மின் தேக்கி என வரையறுக்கப்படுகிறது”. மின் தேக்கியின் அலகு farad(பராட்) ஆகும். 18 ஆம்… Read More »

இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் தொகுதி 3

இது தொடர்பான இரண்டு தொகுதி கட்டுரைகள், ஏற்கனவே கணியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையும் வாசகர்கள் அணுகி, இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 7. தரவு அறிவியல் : கருவி கற்றல் ஏற்கனவே ஹார்ட்வட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைய வகுப்புகள் குறித்து பார்த்து இருந்தோம். அந்த வகையில், இந்த வகுப்பு ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கம் தான். மிகவும் பிரபலமான கருவி கற்றல்(Machine Learning) வழிமுறைகள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும். கருவி… Read More »