நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள்.
Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன.
மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு வைரஸ்கள்(malware) அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்களும் பரவி வருகின்றன.
மேலும், உங்களுடைய முக்கியமான தகவல்கள்(confendial information)இங்கு திருடப்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. போலியான மின் மடல் முகவரியில்(fake emails representing MNC’s)இருந்து வரும் மடல்களை நம்பி ஏமாந்தோர் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.
இவை அனைத்திற்கும் தீர்வாக, மிகவும் நம்பகமான திறந்த நிலை மின் மடல் சேவையை வழங்குவது தான் புரோட்டான் மின் மடல் வசதி.
சுவிட்சர்லாந்தின் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்த புரோட்டான் மின்மடலானது, முழுக்க முழுக்க ஒரு திறந்த நிலை மற்றும் வணிக நோக்கமற்ற நிறுவனம்(NPO) ஆகும்.
இந்த புரோட்டன் மின் மடல் சேவையானது, உங்களுடைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, உங்களிடம் எந்த இயங்குதளத்தில் இயங்கக்கூடிய கணிப்பொறி இருந்தாலும் பிரச்சனை இல்லை!மேலும், உங்களுடைய மொபைல் போனிலிருந்து புரோட்டான் மின் மடலை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி இணையத்தில் கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலான பயனர்கள் புரோட்டான் மின் மடலை பயன்படுத்த தொடங்கிய பிறகு தேவையற்ற மின்மடல் விளம்பரங்களில் இருந்து விடுதலை கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
கூகுள் மின்மடல் சேவையை ஒப்பிடும்போது, பன்மடங்கு பாதுகாப்பானதாக புரோட்டான் மின்மடல் செய்து இருக்கிறது.
உங்களுடைய தரவுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தற்காலத்தில் மிகவும் முக்கியமானது. எனவே, புரோட்டான் மின்மடல் சேவை உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
புரோட்டான் மின் மடலில் உங்களுடைய தகவல்கள் இரண்டு இடத்துக்கு பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பிற மின்மடல் சேவைகளோடு ஒப்பிடும்போது, அதிகப்படியான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், தொலைந்த கடவுச்சொற்களை மீட்பதற்கு சிறப்பு வசதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறது புரோட்டான் மடல்.
இத்தகைய சிறப்பாக வசதிகளை வழங்கக்கூடிய, இந்த புரோட்டான் மின்மடல் முழுவதுமாக இலவசமாக வழங்கப்படுவது தான் இதன் கூடுதல் சிறப்பு.
இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்! உடனடியாக புரோட்டான் மின் மடலை பயன்படுத்தி பாருங்கள்!
மேற்படி இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் புரோட்டான் மின் மடல் அதிகாரப்பூர்வ தளத்தில்(official site)இருந்து பெறப்பட்டது.
இதுவரை திறந்த நிலை தொழில்நுட்பம் தொடர்பாக மொழிபெயர்ப்பு கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன்.
முதல்முறையாக, நானாகவே ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அது தொடர்பாக எழுதும் முதல் கட்டுரை இதுவாகும்.
இணையத்தில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களை ஒருங்கிணைத்து, உங்களுக்கு இங்கு வழங்கி இருக்கிறேன். மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்: –
ஶ்ரீ காளீஸ்வரர்.செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,
நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com