Category Archives: கணியம்

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா?

வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா? நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை நம்பி இரு என்று உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரும் வழி.” முந்தைய தலைமுறையினரைவிட இளைஞர்கள் அதிக தொழில்நுட்பத்துடன் வளர்ந்து வருகின்றனர்… Read More »

எளிய தமிழில் Big Data – மின்னூல் – து.நித்யா

  நூல் : எளிய தமிழில் Big Data ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   முன்னுரை ‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?

ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா? ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த உயர் கல்விக்கும் அத்தியாவசியம் என்றாகி விட்டது. நிரலாளர் அல்லாத ஆற்றல் மிக்க பயனர்கள் ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்?

இது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன் தராமல் வீணாகின்றன. பண விரயம் மட்டுமல்லாமல், ஒத்துழைப்பையும் முன்னேற்றத்தையும் இந்த அணுகுமுறை தடுக்கிறது. ஆய்வறிக்கைகள்படி இக்கருவிகள், வளங்கள் யாவும் உருவாக்கப்பட்டு… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே இருந்தால் என்ன?

கூகிள், ஆப்பிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மொழி பற்றிய சேவைகள் பலவற்றை இலவசமாகத் தருகின்றன. எடுத்துக்காட்டாக கூகிள் தரும் மொழிக் கருவிகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். கூகிள் ஜி-போர்ட் – தமிழில் தட்டச்சும் சொல்வதெழுதலும் ஜி-போர்ட் என்பது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக கூகிள் உருவாக்கிய மெய்நிகர் விசைப்பலகை செயலியாகும். தற்போது ஆண்ட்ராய்ட் திறன்பேசிகளில் 300 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது. இதன் கணிக்கக்கூடிய இயந்திரம் (predictive typing engine), நாம் தட்டச்சு… Read More »

Hadoop – spark – பகுதி 5

Spark என்பது hadoop-ன் துணைத்திட்டமாக 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 2010-ல் திறந்த மூல மென்பொருள் கருவியாக BSD உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. 2013-ம் ஆண்டு இது அறக்கட்டளையுடன் இணைந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதிலும் தரவுகளை சேமிக்க hdfs-தான் பயன்படுகிறது. ஆனால் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவதற்கு வெறும் mapreduce-யோடு நின்று விடாமல் spark sql, spark streaming,graphx, MLlib (Machine Learning Library) போன்ற பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. மேலும் java, scala, python… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 10. கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள்

பண்டைய காலத் தமிழர் இலக்கியப் படைப்புகளை மனப்பாடம் செய்து காத்தனர் இறையனார் களவியல் அல்லது அகப்பொருள் உரையை உருவாக்கியவர் நக்கீரர். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு வாக்கில். இவர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து மனப்பாடமாக எட்டு தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டு வாக்கில் முசிரி நீலகண்டன் இந்த உரையை ஓலைச்சுவடியில் எழுதி… Read More »

Hadoop – hive – பகுதி 4

Facebook நிறுவனம் hadoop-ஐ பயன்படுத்தத் துவங்கிய காலங்கள் முதல், அதனிடம் வந்து சேரும் தரவுகளின் அளவு 1GB, 1TB, 15TB என உயர்ந்து கொண்டே சென்றது. அப்போது அவற்றினை அலசி தரவுச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு oracle database-ஐயும் பைதான் மொழியையும் பயன்படுத்தியது. ஆனால் வருகின்ற மூலத் தரவுகளின் அளவும், வடிவங்களும் அதிகரிக்க அதிகரிக்க data analysis தேவைக்கென ஒரு புதிய முறை கண்டுபிடித்தாக வேண்டி இருந்தது. அப்போதுதான் facebook நிறுவனம் இத்தகைய datawarehouse தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென்றே… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா?

தாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது “பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளைப் போலவே வளரும் காலத்தில் நான் தமிழ் பேசவில்லை. என் கல்லூரிப் பருவத்திலும் வயதுவந்த பின்னும் என் பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தேன், ஏன் எனக்குக் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. வயது வந்தபின் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதே நேரத்தில் என் வாழ்க்கைக்கு நான்தானே பொறுப்பு. நான் தமிழ் பேச விரும்பினேன். தாய்மொழியைப் பேச வேண்டுமென்ற… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது

நுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த 1996 முதல் 2010 வரை பிறந்தவர்களை இணைய அல்லது எண்ணிம தலைமுறை என்றே சொல்லலாம். இந்த இளைய தலைமுறையின் குழந்தைப்… Read More »