Category Archives: கணியம்

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா?

ஆக்ஸ்போர்ட் மொழியியல் பேராசிரியர் ஜீன் அட்சிசன் சொல்கிறார், “ஒரு மொழியின் பரவல் அதைப் பயன்படுத்துபவர்களுடைய சக்தியைச் சார்ந்தது, அம்மொழியின் உள் அம்சங்களைப் பொருத்தது அல்ல.” தமிழின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் ஒரு நாட்டைத் தமிழர்கள் அமைத்தால் மட்டுமே தமிழ் வளரவும் செழிக்கவும் முடியும் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கட்டுரை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய தமிழ் மொழியின் எதிர்காலம். “தமிழ் மொழி, எதிர்காலத்தில் வாழ்வது நிலப்பரப்பிலோ, மக்கள் தொகையிலோ அல்ல; மாறாக அதன் ஆளும்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி?

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன. பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து வந்த கட்டலான் மொழி 1714 ஆம் ஆண்டில் ஸ்பானிய துருப்புக்கள் பார்சிலோனாவை வெற்றி கண்ட பின், கட்டலோனியா அதன் தன்னாட்சி… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?

ஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா? உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும் ஆங்கிலம்தான் பேச வேண்டியிருக்கிறது. மேலும் பிணைப்பு பெருகி வரும் உலகின் குடிமக்களாக ஆக்குவதற்காக அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம்தான் கற்றுக்கொடுக்கிறார்கள்.… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்

முதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் 1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும் முக்கிய ஊடகம் இது. ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்கில மொழியைப் பரப்புகின்றன மற்றும் பிரபலப்படுத்துகின்றன. ஆங்கில மொழி உலக மொழியாக மாறி,… Read More »

Hadoop – pig – பகுதி 3

2006-ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் ஒரு ஆய்வுத் திட்டமாக Pig என்பது உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக mapreduce வேலைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் Apache நிறுவனம் 2008-ல் இதனை திறந்த மூல மென்பொருள் கருவியாக அறிவித்து வெளியிட்டது. Pig என்பது java, python போன்ற நிரலாக்க மொழிகளின் துணையில்லாமல், வெறும் SQL-ஐ வைத்து hadoop-ல் உள்ள தரவுகளை அணுக உதவும் கருவி ஆகும். Hadoop பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருந்தால் போதும். இதனைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம்.… Read More »

கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

  22.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின. கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, பிற அமைப்புகளின் பங்களிப்புகள் பற்றி நித்யா பேசினார். பின் கணியம் அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள்கள், செயல்திட்டங்கள் பற்றி சீனிவாசன் பேசினார். பின் உதயன், எழுத்துரு உருவாக்கம், அவற்றின் சிக்கல்கள், தேவைகள் பற்றி பேசினார். தமது தளம் udayam.in பற்றிய அறிமுகம் தந்தார். தான் உருவாக்கிய கோலம் எழுத்துருவை வெளியிட்டார். இல.சுந்தரம் அவர்களின் 20 எழுத்துருக்களையும் வெளியிட்டார். அவற்றை பின்வரும்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன. “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு… Read More »

Hadoop – hdfs,mapreduce – பகுதி 2

ஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்டமைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java -versionஎனக் கொடுத்து சோதிக்கவும். இது பின்வருமாறு ஒரு வெளியீட்டைக் கொடுத்தால் java நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் பின்வருமாறு கொடுத்து… Read More »