Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்

நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன் சாதனங்களில் மூன்றலை (3-phase) மோட்டார் இருக்கும். மின்கலத்தின் நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக  (3-phase AC) மாற்ற வேண்டும் மின்கலம்… Read More »

வசதிகளற்ற லினக்ஸ் நூலகம் ஒரு அறிமுகம்

வசதிகளற்ற லினக்ஸ் நூலகம் (Featureless Linux Library (FLL)) என்பது குனு லினக்ஸ் அமைவுகளில் (இப்போது SystemdD லினக்ஸ் அமைவுகளில்) காணப்படுகின்ற வித்தியாசமான வடிவமைப்பு முன்னுதாரணத்தை மையமாகக் கொண்டசிறிய நிரலாக்கங்களுடன் கூடிய ஒரு நூலகமாகும். கணினியின் திறன் அதிகரிக்கும் போது,பொதுவாக நிரலாளர்கள் அதிக “வசதி வாய்ப்புகளை” கூடுதலாக அதற்கேற்ப சேர்க்கிறார்கள்,இதனால் புதிய வன் பொருளில் ஏற்கனவே அடைந்த செயல்திறன்கள் முக்கியத்துவமில்லாதவைகளாக மாறிவிடுகின்றன இந்தத் செயல்திட்டம், இவ்வாறான முக்கியத்துவமில்லாதவைகளாக ஆகின்ற பயங்கரமான வளையத்திலிருந்து வெளியேறுவதற்காக libcக்கு மேலே ஒரு… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார்

சந்தையில் பல இருசக்கர மின்னூர்திகளிலும் மூன்று சக்கர மின்னூர்திகளிலும் நேர்மின் தொடியற்ற மோட்டார்கள் (Brushless DC Motor – BLDC) பயன்படுத்தப்படுகின்றன.  இவை எவ்வாறு வேலை செய்கின்றன என்று புரிந்து கொள்வதற்கு முதலில் நேர்மின் தொடி மோட்டார் அடிப்படையைப் பார்ப்போம்.  நேர்மின் தொடி மோட்டார் (Brushed DC Motor) இவற்றில் சுற்றகத்தில் (rotor) கம்பிச்சுற்றுகளும் நிலையகத்தில் (stator) நிலைக்காந்தங்களும் இருக்கும். சுழலும் மின்திசைமாற்றிக்குத் (commutator) தொடிகள் மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் சுற்றகம் (rotor) மின்காந்தமாகிச் (electromagnet) சுழல்கிறது.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள்

மின்மோட்டார் என்பது மின்சாரத்தை இயந்திர ஆற்றலாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும். இதற்கு நேர்மாறாக மின்னியற்றி (generator) என்பது இயந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும்.  மின்காந்தவியல் (electromagnetism) இவை மின்காந்தவியலைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. மின்காந்தவியல்படி ஒரு காந்தப்புலத்தில் இருக்கும் கம்பிச்சுருளில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தக் கம்பிச்சுருளில் காந்த முறுக்குவிசை ஏற்படும். இது அந்தக் கம்பிச்சுருளைச் சுழற்ற முயலும். அந்தக் கம்பிச்சுருள் அரை சுற்று சுற்றியவுடன் நாம் மின்சாரத்தின் திசையை மாற்றினால்… Read More »

நரம்பியல்இணைப்புNeuralink என்றால் என்ன? மூளையின்நரம்பியல் பற்றி நாம் அறிந்த அனைத்தும்

AI ஆனதுமுன்னோடியில்லாத வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மருத்துவத் துறையில் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. எலோன் மஸ்க்கின் நரம்பியல் இணைப்பு (Neuralink) என்பது ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க மனிதமூளைக்கான சில்லுகளை உருவாக்குகிறது. நரம்பியல் கோளாறுகள் முதல் மனித அறிவாற்றல் நிலைகள் வரை, இந்த நியூராலிங்க் ஆனது மனிதமூளைக்கும்-கணினிக்குமான இடைமுகம் என்பதன் வாயிலாக அத்தகைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நரம்பியல் இணைப்பு… Read More »

கால்குலேட்டர் பண்ணலாம் வாங்க – பைத்தான் 27

முன்பு ஒரு காலத்தில் காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தச் சிங்கத்திற்குச் செயற்கூறு(Function) என்று பெயர். அந்தச் சிங்கத்தைப் பற்றி இதற்கு முன்பே நாம் படித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா? அந்தச் சிங்கத்தைக் கொண்டு தான் கால்குலேட்டர் உருவாக்கப் போகிறோம். சிங்கத்தைக் கொண்டு கால்குலேட்டரா – எப்படி என்கிறீர்களா? முன்பு அந்தச் சிங்கத்தைச்(செயற்கூற்றைப்) பயன்படுத்தத் தெரிந்து கொண்டிருந்தோம். இப்போது நாமே உருவாக்கப் போகிறோம். உருவாக்குவோமா? செயற்கூறு(Function) என்றால் என்ன: இந்தத் தலைப்பை எல்லாம் முன்னரே படித்து விட்டோம். பத்து… Read More »

செநு(AI)கணினி(PC) என்றால் என்ன, அதை 2024 இல் வாங்க வேண்டுமா?

2024 ஆம் ஆண்டில், டெல், ஹெச்பி, லெனோவா, ஆசஸ், சாம்சங் ,போன்ற பிற முக்கிய வணிகமுத்திரைகள் போன்று பல்வேறு புதியசெநு(AI)கணினிகளின்(PC) வெளியீட்டை இப்போது நாம் கண்டுவருகிறோம். இவையனைத்தும் “செநு(AI)கணினி(PC)” இன் moniker மூலம் தங்கள் புதிய சலுகைகளை சந்தைப்படுத்த முனைகின்றன. எனவே, இந்த புதிய செநு(AI)கணினிகள்(PC)எவ்வாறு வேறுபடுகின்றன? AI அல்லாத கணினிகளை விடசெநு(AI)கணினிகள்(PC) என்னென்ன புதிய வசதிகளையும் நன்மைகளையும் வழங்குகின்றன? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவும், செயல்திறனையும் , செயல்திறன் போன்ற வசதிவாய்ப்புகளை காணும் புதிய தலைமுறை… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 4. மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள்

மின் ஊர்தியில் பொருத்தும் ஒரு மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். குறைந்த வேகத்திலேயே நல்ல முறுக்குவிசை கிடைத்தால் ஊர்தியை நிற்கும் நிலையிலிருந்து நகர்த்தி ஓடத்துவக்குவதற்கு வசதியாக இருக்கும். முறுக்குவிசை (Torque) என்றால் என்ன? அதிக முறுக்குவிசை என்றால் ஆரம்ப கட்டத்தில் வேகமான முடுக்கம். அதிக குதிரைத்திறன் என்றால் அதிக வேகம். இதனால்தான் சரக்கு வண்டிகள் போன்ற கனரக வாகனங்கள் அதிக முறுக்குவிசை கொண்டவை. ஆனால் பந்தய ஒட்டக் கார்கள் அதிகக் குதிரைத்திறன் கொண்டவை.… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 26 – தரவைத் திறப்போம் வாருங்கள்!

தமிழின் மிகப் பெரிய சிறப்பே அதன் வார்த்தை வளம் தான்! ஆங்கிலத்தில் இல்லாத சிறப்புக் கூடத் தமிழில் உண்டு. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போமே! Laptop என்றொரு வார்த்தை – அதைத் தமிழில் மடிக்கணினி என மொழிபெயர்த்திருக்கிறார்கள். மடிக்கணினி என்பதில் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன, பாருங்கள் – மடியில் வைக்கும் கணினி, மடித்து வைக்கும் கணினி. நன்றாக இருக்கிறது அல்லவா? இதே போல, நிறைய வார்த்தைகளைச் சொல்லலாம். அப்படி ஒரு வார்த்தை தான் – தரவு! தரவு என்றால்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 25 – பைத்தான் 2, பைத்தான் 3

வாசகர் கடிதங்கள்: அன்புள்ள மு, உங்களுடைய பைத்தான் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். அதில் இருந்து பைத்தான், ஓர் எளிய மொழியே என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் இணையத்தில் தேடும் போது பைத்தான் என்று எழுதாமல் பைத்தான் 3 என்று எழுதுகிறார்கள். அதென்ன 3? உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன். வைதேகி. அன்புள்ள வைதேகி, நிரல்மொழிகள் (programming languages), இயங்குதளங்கள்(OS) ஆகியவற்றிற்குப் பதிப்புகள் உள்ளன. புத்தகங்களில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என்கிறார்களே! அது போல் தான்!… Read More »