Category Archives: பங்களிப்பாளர்கள்

புதியவர்களுக்கான இயந்திர கற்றலின்( ML ) அடிப்படைகள்

இயந்திர கற்றல்( ML ) என்பது ஒரு பரந்த மிக விரைவாக வளர்ந்து வருகின்ற துறையாகும், மேலும் இந்த கட்டுரை புதியதாக இந்த துறையில் நுழை பவர்கள் பாரம்பரிய நிரலாக்கத்திற்கும் ML க்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது முதல் பல்வேறு வகையான இயந்திர கற்றல் வழிமுறைகளை ஆராய்வது வரை இயந்திரக் கற்றலின் அடிப்படைக் கருத்தமைவுகளை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளமுடியும். இயந்திர கற்றல் (ML) என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) மாற்றுத் துறையாகும், இது வெளிப்படையாக நிரலாக்கம் செய்யப்படாமல்… Read More: புதியவர்களுக்கான இயந்திர கற்றலின்( ML ) அடிப்படைகள் »

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே பயனர் பாதுகாப்பையும் ஊர்தியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளுக்குள் மின்னூர்திகளை இயக்குவது மிகவும்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம் »

துவக்கநிலையாளர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள்

பிரபலமான கருத்துக்கு மாறாக, லினக்ஸ் என்பது ஒரு இயக்க முறைமையாகும், இந்த இயக்கமுறைமைகளை விரும்பும் எவரும் பயன்படுத்த முடியும். அதாவது, உபுண்டு லினக்ஸைப் பயன்படுத்துவது எவ்வாறு என 79 வயதுடையவர்கூட கற்றறிந்துகொண்டு பயன்படுத்ததுவங்கிடமுடியும், இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென குறிப்பிட்ட ஒரு மொழி தெரிந்திருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடு எதுவுமில்லை. நாம் பயன்படுத்த துவங்குவதற்கான சிறந்த லினக்ஸ் வெளியீட்டினைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான பிரச்சனையாகும். லினக்ஸில் நாம் தேர்வு செய்வதற்காக நூற்றுக்கணக்கான லினக்ஸ் வெளியீடுகள் உள்ளன. அவற்றுள் Gentoo ,Linux From… Read More: துவக்கநிலையாளர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள் »

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current – DC) மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். மின்தடங்கல் ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து வரும் நேர்மின்சாரத்தை மாறுமின்சாரமாக மாற்றி விளக்கு, மின்விசிறி… Read More: எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம் »

மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான A-Frame எனும் திறமூல இணைய கட்டமைப்பு

A-Frame என்பது WebVR என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான திறமூல இணைய கட்டமைப்பாகும். இந்த A-Frameஇன் மூலம் HTML உடன் WebVR ஐ உருவாக்கலாம் Vive, Rift, Daydream ,போன்ற பலவற்றில் உறுப்பு-கூறின்( entity-component )பணிகளை உருவாக்கலாம். கைபேசி, மேசைக்கணினி, Vive, Rift, போன்ற தளங்களில் நம்மை இயக்குவதற்கு தேவையான 3D , WebVR ஆகியவற்றினைக் கையாள்வதன் மூலம் A-Frame மெய்நிகர் உண்மைநிலையை எளிதாக்குகிறது. இதனை HTML இலிருந்தே பயன்படுத்தலாம் என்பதால், விரும்பும்… Read More: மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான A-Frame எனும் திறமூல இணைய கட்டமைப்பு »

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின் (3-phase AC) மோட்டார்களைப் பயன்படுத்துகிறோம். மின்கலத்தில் கிடைக்கும் 300 க்கும் அதிகமான வோல்ட் மின்னழுத்த நேர்மின்சாரத்தை (DC)  மூன்றலை மாறுமின்சாரமாக… Read More: எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல் »

லினக்ஸில் இயக்கி பயன்பெறுகின்ற நமக்குத் தெரியாத ஏழு செய்திகள்

பெரும்பாலான பொதுமக்கள் லினக்ஸை விண்டோ அல்லது மேக்ஸுக்கு மாற்றாக மேசைக்கணினியின் இயக்கமுறைமை மட்டுமேயென தவறாக நினைக்கிறார்கள், ஆயினும், நிறுவகைசெய்து செயல்படுத்திடுகின்ற லினக்ஸின் பெரும்பாலான பயன்பாடுகள் அலுவலகத்திற்குள் உள்ள மேசைக்கணினிகளில் மட்டுமன்று தனிநபர்கள் பயன்படுத்தி கொள்கின்ற கணினிகளில் கூட உள்ளது! என்பதே உண்மையான செய்தியாகும் 1 வீட்டு உபயோகப் பொருட்கள் திறன்மிகு தொலைகாட்சிகள் போன்ற திறன்மிகு சாதனங்கள் பெரும்பாலும் லினக்ஸிலிருந்து பெறப்பட்ட இயக்க முறைமையைக் கொண்டுள்ளன, ஆனால் திறன்மிகு குளிர்விப்பான்கள் அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட நுண்ணலைகள் (microwaves)போன்ற சாதனங்களில்… Read More: லினக்ஸில் இயக்கி பயன்பெறுகின்ற நமக்குத் தெரியாத ஏழு செய்திகள் »

எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும்

மின்னழுத்தமும் மின்னோட்டமும் பெட்ரோல் டீசல் கார்களில் ஈய-அமில ( Lead acid) மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம். இவை 12 வோல்ட் மின்னழுத்தத்தில் 48 ஆம்பியர்-மணி (Ampere hour – Ah) தரநிலை கொண்டவை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 ஆம்பியர் மின்னோட்டம் வரை தர இயலும். குளிர்காலத்தில் எஞ்சினைத் துவக்கும்போது இவற்றால் 300 முதல் 400 ஆம்பியர் வரை மின்னோட்டம் கொடுக்க இயலும். ஆனால் சுமார் 30 விநாடிகளுக்குத்தான். பல நூறு கி. மீ. பல மணி… Read More: எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும் »

தற்போது நாம் பயன்படுத்துவதை விட சிறந்த ஐந்து லினக்ஸின் கோப்பு மேலாளர்கள்

தற்போது சந்தையில் ஏராளமான வகையில் கோப்பு மேலாளர் பயன்பாடுகள் உள்ளன ஆனால் எந்தவொரு சிறந்த பயன்பாட்டினை கண்டவுடன், அதை பயன்படுத்திடுவதாற்காக முயற்சிசெய்திடாமல் இருக்க முடியாது. அதனால் அவ்வாறான பயன்பாட்டினை கண்டவுடன் அதனை பயன்படுத்திட துவங்கிடுவோம், ஏனேனில் சிலபயன்பாடுகள் மற்றவைகளை விட மிகச் சிறந்தவைகளாக நமக்குத்தோன்றிடுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு கோப்பு மேலாளர் பயன்பாடும் நம்முடைய மேசைக்கணினியில் நமக்குத்தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், அவ்வாறான சூழலில் நாம் நமக்குத்தேவையானவாறு அதை மாற்ற நினைக்கின்றோம், அதற்காக நாம்கூடுதலான நேரத்தையும்… Read More: தற்போது நாம் பயன்படுத்துவதை விட சிறந்த ஐந்து லினக்ஸின் கோப்பு மேலாளர்கள் »

எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள்

லித்தியம் அயனி மின்கலங்களிலேயே எந்த நேர்மின்முனை, எதிர்மின்முனை, மின்பகுபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துப் பல வகைகள் உள்ளன. NMC வகை லித்தியம் அயனி மின்கலங்கள் நாம் பெட்ரோல் டீசல் கார்களில் ஓட்டத் துவக்குவதற்குப் பயன்படுத்துபவை ஈய-அமில (Lead-acid) மின்கலங்கள். இவற்றில் ஈயம் நேர் மின்முனையாகவும் (anode), ஈய ஆக்சைடு எதிர் மின்முனையாகவும் (cathode), நீர்த்த கந்தக அமிலம் (dilute sulphuric acid) மின்பகுபொருளாகவும் (electrolyte) பயன்படுத்தப்படுகின்றன. மின்னூர்திகளில் இழுவைக்குப் (traction) பயன்படுத்தும் லித்தியம் அயனி (lithium-ion)… Read More: எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள் »