Category Archives: கணியம்

ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 9

எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து, டையோடுகளுக்கும் நமக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது போலும்! நான் எப்பொழுது கட்டுரையை எழுத தரவுகளை சேகரித்தாலும், டையோடுகள் எனது கண்களில் இருந்து தவறுவதில்லை. கடந்த ஒரு கட்டுரையில், ஒளி மின் டையோடு(photo diode) குறித்து பார்த்திருந்தோம். அதாவது, வெளியில் இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல டையோடு தான் ஒளிமின் டையோடு. இவற்றைப் பெரும்பாலும் உணர்விகளில் பயன்படுத்தலாம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் நாம் கொடுக்கின்ற… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். இது மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பதால் முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது. 15 ஆம்பியர் 3-துளை மின்… Read More »

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயமும், மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செய்திகளில் காணப்படுகிறது. அதற்கு மாற்றாக, பல திறந்த நிலை பயன்பாடுகள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட… Read More »

ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 8

தொடர்ந்து கடந்த சில கட்டுரைகளாக, டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்,மின்தடை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் குறித்து எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பேசி இருந்தோம். ஆனால், இந்தக் கட்டுரையில் நாம் பொது வாழ்வில் அனுதினமும் காணக்கூடிய,  ஒலிபெருக்கிகளில்(loud speakers)புதைந்திருக்க கூடிய அறிவியலை எளிமையாக அறிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக, என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி பார்வையிடவும். விழா காலங்கள் என்றாலே, ஒலிபெருக்கிகள் ( loud speakers) இல்லாமல் நிறைவடையாது. நீங்கள் பென்டிரைவ் அல்லது ப்ளூடூத் இல்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை செய்ய இயலாது. மேலும் வெப்பம் மிக அதிகமானால் பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். மின்காப்பு பழுதடைதல் (insulation failure), மின்கசிவுகள் (short… Read More »

Chrome உலாவியில் இருக்கும் அருமையான 5 துணை கருவிகள்

நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions) பயன்படுத்தியிருப்பீர்கள். அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான். அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஐந்து சிறப்பான துணை கருவிகள், எவை?எவை? என்பதை ஒன்றொன்றாக பார்க்கலாம். அதற்கு முன்பாக, மேற்படி இந்த கட்டுரையானது  itsfoss இணையதளத்தில் சாய்… Read More »

டிரான்சிஸ்டர்கள்(திரிதடையம்) என்றால் என்ன ? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 6 .

கடந்த எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், டையோடுகள் குறித்து விவாதித்து இருந்தோம். அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில்? இந்த கட்டுரையை படித்து விட்டு அதையும் பார்வையிடவும் . மேலும்,  எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளை படிக்க, கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும். டிரான்சிஸ்டர் என்றால் என்ன? தமிழில் திரிதடையம் என அழைக்கப்படும் டிரான்சிஸ்டர்கள், அடிப்படையில் குறை கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு தான். இரண்டு PN  சந்திடையோடுகளை இணைத்தார் போல காணப்படும் டிரான்சிஸ்டர்கள் , அதற்கு உரிய… Read More »

செனார் டையோடுகளும் அவை குறித்து தகவல் துணுக்குகளும் |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 5

கடந்த கட்டுரையில் பி என் சந்தி டையோடு குறித்து பார்த்திருந்தோம். என்னுடைய எலக்ட்ரானிக் தொடர்பான கட்டுரைகளை, நீங்கள் இதுவரை படிக்க வில்லை எனில் , கீழே வழங்கப்பட்டுள்ள பொத்தானை அமிழ்த்தி, கட்டுரைகளை பார்வையிடவும். இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது “செனார் டையோடு” குறித்து தான், நாம் சந்தி டையோடில் பார்த்தது போல, கிட்டத்தட்ட ஒரே விதத்தில் தான், செனார் டையோடும் செயல்படுகிறது. ஆனால், செனார் டையோடுக்கு என சில சிறப்பு பண்புகள் இருக்கின்றன! குறிப்பாக, எதிர் திசை… Read More »

காஞ்சி லினக்ஸ் வாராந்திர கூட்டம்( 18/08/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், இன்று (ஆகஸ்ட்18 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை. Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே பயனர் பாதுகாப்பையும் ஊர்தியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளுக்குள் மின்னூர்திகளை இயக்குவது மிகவும்… Read More »