Category Archives: கணியம்

யாவருக்குமான! எளிய எலக்ட்ரானிக்ஸ் – பகுதி 1

மின்தேக்கி(ஒரு அறிமுகம்):- யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதிக்கு, உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இந்த தொடரின் முதல் கட்டுரை இது. இன்றைய தலைப்பில் நாம் காண இருப்பது, மின்தேக்கி ( capacitor)! பொதுவாக, மின்விசிறிகளுக்கு மட்டும் கப்பாசிட்டர்களை வாங்கியிருப்போம். உண்மையில், இவை எவ்வாறு இயங்குகின்றன? அது தொடர்பாக தான் அறிந்து கொள்ளவிருக்கிறோம். இயற்பியலில், “மின் ஆற்றலை தேக்கி வைக்க கூடிய பொருள் மின் தேக்கி என வரையறுக்கப்படுகிறது”. மின் தேக்கியின் அலகு farad(பராட்) ஆகும். 18 ஆம்… Read More »

இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் தொகுதி 3

இது தொடர்பான இரண்டு தொகுதி கட்டுரைகள், ஏற்கனவே கணியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையும் வாசகர்கள் அணுகி, இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 7. தரவு அறிவியல் : கருவி கற்றல் ஏற்கனவே ஹார்ட்வட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைய வகுப்புகள் குறித்து பார்த்து இருந்தோம். அந்த வகையில், இந்த வகுப்பு ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கம் தான். மிகவும் பிரபலமான கருவி கற்றல்(Machine Learning) வழிமுறைகள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும். கருவி… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும்

மின்னழுத்தமும் மின்னோட்டமும் பெட்ரோல் டீசல் கார்களில் ஈய-அமில ( Lead acid) மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம். இவை 12 வோல்ட் மின்னழுத்தத்தில் 48 ஆம்பியர்-மணி (Ampere hour – Ah) தரநிலை கொண்டவை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 ஆம்பியர் மின்னோட்டம் வரை தர இயலும். குளிர்காலத்தில் எஞ்சினைத் துவக்கும்போது இவற்றால் 300 முதல் 400 ஆம்பியர் வரை மின்னோட்டம் கொடுக்க இயலும். ஆனால் சுமார் 30 விநாடிகளுக்குத்தான். பல நூறு கி. மீ. பல மணி… Read More »

உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது. லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும். டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும் இந்த புத்தகங்களை humble bundle by O’Reilly வெளியீடு செய்கிறது. எந்தெந்த புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றன?  வாருங்கள் பட்டியலை பார்க்கலாம்.… Read More »

இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் தொகுதி 2

ஏற்கனவே இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் குறித்து தொகுதி ஒன்று கட்டுரையை பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தி படித்துப் பார்க்கவும். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக மூன்று செயற்கை நுண்ணறிவு இலவச வகுப்புகள் குறித்து பார்க்கலாம். 4.செயல்முறை ஆழ்ந்த கற்றல் (practical deep learning):- Fast ai நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில், உங்களால் செயற்கை நுண்ணறிவு குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள்

லித்தியம் அயனி மின்கலங்களிலேயே எந்த நேர்மின்முனை, எதிர்மின்முனை, மின்பகுபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துப் பல வகைகள் உள்ளன. NMC வகை லித்தியம் அயனி மின்கலங்கள் நாம் பெட்ரோல் டீசல் கார்களில் ஓட்டத் துவக்குவதற்குப் பயன்படுத்துபவை ஈய-அமில (Lead-acid) மின்கலங்கள். இவற்றில் ஈயம் நேர் மின்முனையாகவும் (anode), ஈய ஆக்சைடு எதிர் மின்முனையாகவும் (cathode), நீர்த்த கந்தக அமிலம் (dilute sulphuric acid) மின்பகுபொருளாகவும் (electrolyte) பயன்படுத்தப்படுகின்றன. மின்னூர்திகளில் இழுவைக்குப் (traction) பயன்படுத்தும் லித்தியம் அயனி (lithium-ion)… Read More »

“செயற்கை நுண்ணறிவு” அறிமுகம் தரும் இலவச இணைய பயிற்சி வகுப்புகள் ( தொகுதி – I )

தற்கால சூழலில், மிகவும் பிரபலமாக இருக்கும் கணினி தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு. பெரும்பாலான மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தொடக்க நிலையில் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது தான். அதை எளிமையாகும் விதமாக, எவ்வித செலவும் இன்றி, முற்றிலும் இலவசமாக! உலகின் சிறந்து பேராசிரியர்கள் நடத்தும் வகுப்புகளை, உங்களால்! உங்கள் வீட்டில் இருந்தே பெற முடியும். அதற்கான வழிமுறைகள் பற்றி தான், இன்றைய கட்டுரை அலசுகிறது. மொத்தம் மூன்று தொகுதிகளாக,… Read More »

இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)

இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக  நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு தான் அதை இணைய உலகில் சிறந்த தரவுதளமாக நீடிக்க செய்திருக்கிறது. 870 க்கும்  விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய… Read More »

கட்டற்ற தரவுகளின் நாயகர் “திரு.ஶ்ரீ பாலசுப்ரமணியன்”

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமான, விக்கிபீடியா குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம். நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து, விக்கிபீடியாவில் இருந்து தான் என்னுடைய அனைத்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கு தரவுகளை சேகரிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகள் தமிழில் கிடைப்பதற்கு அரியதாக இருந்தது. ஆனால், அந்த குறைகளை நீக்கும் விதமாக! பல தமிழ் ஆர்வலர்களும் விக்கிபீடியா இணையதளத்தில் களம் புகுந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை நாயகர் தான் “திரு.ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்”.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 9. மின்கல அடிப்படைகள்

மின்னூர்திகளில் மின்சாரத்தை சேமித்து வைக்க நமக்கு ஒரு செயல்திறன் மிக்க நம்பகமான மின்கலம் தேவை. ஆகவே மின்கலங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கின்றன என்று முதலில் பார்ப்போம். மின் வேதியியல் வினை (Electrochemical reaction) மின் வேதியியல் மின்கலம் என்பது வேதிவினைகளிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். ஒரு முதன்மை (primary) மின்கலம் மீளமுடியாத வேதிவினைகளால் மின்னோட்டத்தை உருவாக்குகிறது. எ.கா. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மின்கலங்கள். இவற்றை மீள்மின்னேற்றம் (recharge) செய்ய முடியாது. இரண்டாம்… Read More »