Category Archives: கணியம்

Hadoop – pig – பகுதி 3

2006-ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் ஒரு ஆய்வுத் திட்டமாக Pig என்பது உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக mapreduce வேலைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் Apache நிறுவனம் 2008-ல் இதனை திறந்த மூல மென்பொருள் கருவியாக அறிவித்து வெளியிட்டது. Pig என்பது java, python போன்ற நிரலாக்க மொழிகளின் துணையில்லாமல், வெறும் SQL-ஐ வைத்து hadoop-ல் உள்ள தரவுகளை அணுக உதவும் கருவி ஆகும். Hadoop பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருந்தால் போதும். இதனைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம்.… Read More »

கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

  22.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின. கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, பிற அமைப்புகளின் பங்களிப்புகள் பற்றி நித்யா பேசினார். பின் கணியம் அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள்கள், செயல்திட்டங்கள் பற்றி சீனிவாசன் பேசினார். பின் உதயன், எழுத்துரு உருவாக்கம், அவற்றின் சிக்கல்கள், தேவைகள் பற்றி பேசினார். தமது தளம் udayam.in பற்றிய அறிமுகம் தந்தார். தான் உருவாக்கிய கோலம் எழுத்துருவை வெளியிட்டார். இல.சுந்தரம் அவர்களின் 20 எழுத்துருக்களையும் வெளியிட்டார். அவற்றை பின்வரும்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன. “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு… Read More »

Hadoop – hdfs,mapreduce – பகுதி 2

ஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்டமைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java -versionஎனக் கொடுத்து சோதிக்கவும். இது பின்வருமாறு ஒரு வெளியீட்டைக் கொடுத்தால் java நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் பின்வருமாறு கொடுத்து… Read More »

ஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்

இந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது. இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது டெல்லியில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு பெற்றோர். திறந்த அறிவியல் நடைமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம் (“சக்கரத்தை… Read More »

திறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது

லினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை அளிக்கிறது. டெவ்ஆப்ஸ் (DevOps) மற்றும் செயலிகள் தயாரிக்கும் திறமைகளை வளர்க்க நிறுவனங்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. முக்கியமாக, சான்றிதழ்களைக் கொண்ட… Read More »

செயற்கூறிய நிரலாக்கம் – நிலைமாறாத்தன்மை – பகுதி 2

முன்குறிப்பு: கருத்தனின் பரிந்துரைப்படி, Functional programming என்பதற்கு “செயற்கூறிய நிரலாக்கம்” என்ற பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். [code lang=”javascript”] var x = 1; x = x + 1; [/code] இந்த நிரலை முதன்முதலில் பயன்படுத்தியபோது, xம், (x + 1)ம் சமமாக இருக்கமுடியாதென்ற அடிப்படை கணித சமன்பாட்டை மறந்துவிட்டிருந்தோம். xன் மதிப்புடன் ஒன்றைக்கூட்டி, அதன் விடையை மீண்டும் xல் சேமிக்கவேண்டும் என்பதே, பிறமுக்கிய மொழிகளில் , இதன் பொருள். ஆனால், x = x… Read More »

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை முன்னெடுப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோர பல நியாயமான காரணங்கள் இருப்பினும் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும்… Read More »